இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருக்கின்றது.
அதேநேரம், இவ்வெற்றியுடன் இலங்கை கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 1-0 முன்னிலை பெற்றிருக்கின்றது.
>> Video – இலங்கை அணியில் களமிறங்கும் இரண்டு புதுமுக வீரர்கள்
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி, இலங்கையுடன் 3 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 T20I போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர்லீக்கில் அடங்கும் ஒருநாள் தொடர் முதற்கட்டமாக நடைபெறும் நிலையில், தொடரின் முதல் போட்டி இன்று (2) கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகியது.
தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்க முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தார்.
இலங்கை அணி
தசுன் ஷானக (தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, மினோத் பானுக (விக்கெட் காப்பாளர்), பானுக ராஜபக்ஷ, தனன்ஜய டி சில்வா, சரித் அசலங்க, வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, அகில தனன்ஜய, பிரவீன் ஜயவிக்ரம
தென்னாபிரிக்க அணி
டெம்பா பவுமா (தலைவர்), எய்டன் மர்க்ரம், ஜென்னமன் மலன், கெயில் வெர்ரைன், ரஸ்ஸி வென் டர் டஸன், ஹென்ரிச் கிலாசன் (விக்கெட் காப்பாளர்), எண்டைல் பெஹெலுக்வாயோ, கேஷவ் மஹாராஜ், காகிஸோ ரபாடா, என்ரிச் நோக்கியா, டப்ரைஷ் சம்சி
இதனையடுத்து போட்டியின் நாணய சுழற்சிக்கு அமைவாக முதலில் துடுப்பாடிய இலங்கை அணிக்கு ஆரம்பவீரர்களில் ஒருவராக களம் வந்த அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் மத்தியவரிசையில் ஆடிய சரித் அசலன்க ஆகிய இருவரும் கைகொடுத்தனர்.
>> இலங்கை 19 வயதின்கீழ் அணியின் பயிற்சியாளரானார் அவிஷ்க
பின்னர் இந்த இரண்டு வீரர்களினதும் துடுப்பாட்டத்தோடு போட்டியில் முன்னேறிய இலங்கை கிரிக்கெட் அணி, 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் தன்னுடைய 3ஆவது ஒருநாள் சதத்தினைப் பூர்த்தி செய்த அவிஷ்க பெர்னாண்டோ, 115 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 10 பௌண்டரிகள் அடங்கலாக 118 ஓட்டங்களை பெற்று இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ஒருவர் தென்னாபிரிக்காவுடன் பெற்றுக்கொண்ட கூடுதல் ஓட்டங்களை பதிவு செய்ய, சரித் அசலன்க தன்னுடைய 2ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 62 பந்துகளில் 6 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 71 ஓட்டங்களை எடுத்திருந்தார். இதுதவிர, தனன்ஞய டி சில்வாவும் 44 ஓட்டங்களுடன் இலங்கை அணிக்கு பெறுமதி சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> T20 உலகக் கிண்ணத்திலிருந்து தமிம் இக்பால் திடீர் விலகல்
தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பில் கேசவ் மஹராஜ் மற்றும் ககிஸோ றபாடா ஆகிய இரண்டு வீரர்களும் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 301 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, ஆரம்பத்தில் தடுமாற்றம் காட்டிய போதும் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான எய்டன் மார்க்ரம், தென்னாபிரிக்க அணித்தலைவர் டெம்பா பவுமா ஆகியோர் இரண்டாம் விக்கெட்டுக்காக 117 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து தமது தரப்பினை சிறப்பான நிலையொன்றினை ஒன்றினை நோக்கி நகர்த்தினர்.
எனினும், டெம்பா பெவுமா உபாதை காரணமாக 38 ஓட்டங்களை பெற்ற நிலையில் மைதானத்தினை விட்டு வெளியேற, அவரை அடுத்து எய்டன் மார்க்கமும் சதத்தினை நெருங்கிய நிலையில் 90 பந்துகளுக்கு 96 ஓட்டங்கள் எடுத்தவாறு ஆட்டமிழந்தார்.
>> T20 போட்டிகளில் மீண்டும் குறைந்த ஓட்ட எண்ணிக்கையினைப் பதிவு செய்த நியூசிலாந்து
இதன் பின்னர், மத்திய வரிசையில் களம் வந்த ரஸ்ஸி வன்டர் டுஸேன் தென்னாபிரிக்க அணிக்காக போராட்டம் காண்பித்த போதும் இலங்கை வீரர்களின் அபார பந்துவீச்சினால் அவர்களினால் 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களையே பெற முடிந்தது.
தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டம் சார்பில் தன்னுடைய 09ஆவது அரைச்சதத்தினை பூர்த்தி செய்த ரஸ்ஸி வன்டர் டுஸேன் 59 பந்துகளில் 6 பௌண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் அகில தனன்ஞய 2 விக்கெட்டுக்களை கைப்பற்ற சாமிக்க கருணாரட்ன, வனிந்து ஹஸரங்க மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சுருட்டி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை கிரிக்கெட் அணி சார்பில் அவிஷ்க பெர்னாண்டோ தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இனி இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் மோதும் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (04) நடைபெறுகின்றது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Avishka Fernando | c Andile Phehlukwayo b Tabraiz Shamsi | 118 | 115 | 10 | 2 | 102.61 |
Minod Bhanuka | b Aiden Markram | 27 | 39 | 3 | 0 | 69.23 |
Bhanuka Rajapaksa | c Kyle Verreynne b Keshav Maharaj | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Dhananjaya de Silva | st Heinrich Klaasen b Keshav Maharaj | 44 | 62 | 5 | 0 | 70.97 |
Charith Asalanka | c Heinrich Klaasen b Kagiso Rabada | 72 | 62 | 6 | 1 | 116.13 |
Dasun Shanaka | run out (Kagiso Rabada) | 6 | 9 | 1 | 0 | 66.67 |
Wanindu Hasaranga | b Kagiso Rabada | 3 | 6 | 0 | 0 | 50.00 |
Chamika Karunaratne | not out | 7 | 7 | 0 | 0 | 100.00 |
Dushmantha Chameera | run out (Anrich Nortje) | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Akila Dananjaya | run out (Anrich Nortje) | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Praveen Jayawickrama | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 23 (b 5 , lb 5 , nb 2, w 11, pen 0) |
Total | 300/9 (50 Overs, RR: 6) |
Fall of Wickets | 1-57 (11.5) Minod Bhanuka, 2-58 (12.3) Bhanuka Rajapaksa, 3-137 (30.3) Dhananjaya de Silva, 4-234 (42.2) Avishka Fernando, 5-255 (45.5) Dasun Shanaka, 6-272 (47.6) Wanindu Hasaranga, 7-291 (49.2) Charith Asalanka, 8-299 (49.5) Dushmantha Chameera, 9-300 (49.6) Akila Dananjaya, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kagiso Rabada | 9 | 0 | 66 | 2 | 7.33 | |
Anrich Nortje | 10 | 0 | 69 | 0 | 6.90 | |
Keshav Maharaj | 10 | 1 | 30 | 2 | 3.00 | |
Aiden Markram | 6 | 0 | 33 | 1 | 5.50 | |
Andile Phehlukwayo | 5 | 0 | 37 | 0 | 7.40 | |
Tabraiz Shamsi | 10 | 0 | 55 | 1 | 5.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Janneman Malan | lbw b Wanindu Hasaranga | 23 | 31 | 3 | 0 | 74.19 |
Aiden Markram | c Wanindu Hasaranga b Praveen Jayawickrama | 96 | 90 | 5 | 4 | 106.67 |
Temba Bavuma | -select- b | 38 | 53 | 1 | 0 | 71.70 |
Rassie van der Dussen | b Akila Dananjaya | 59 | 59 | 6 | 0 | 100.00 |
Kyle Verreynne | lbw b Akila Dananjaya | 12 | 20 | 0 | 0 | 60.00 |
Heinrich Klaasen | run out (Chamika Karunaratne) | 36 | 31 | 2 | 0 | 116.13 |
Andile Phehlukwayo | b Chamika Karunaratne | 5 | 8 | 0 | 0 | 62.50 |
Kagiso Rabada | not out | 13 | 7 | 2 | 0 | 185.71 |
Keshav Maharaj | not out | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 4 (b 0 , lb 0 , nb 0, w 4, pen 0) |
Total | 286/6 (50 Overs, RR: 5.72) |
Did not bat | Tabraiz Shamsi, Anrich Nortje, |
Fall of Wickets | 1-49 (9.4) Janneman Malan, 2-166 (30.5) Aiden Markram, 3-209 (39.3) Kyle Verreynne, 4-260 (45.5) Rassie van der Dussen, 5-269 (48.1) Andile Phehlukwayo, 6-286 (49.5) Heinrich Klaasen, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dushmantha Chameera | 7 | 0 | 55 | 0 | 7.86 | |
Chamika Karunaratne | 3 | 0 | 18 | 1 | 6.00 | |
Wanindu Hasaranga | 10 | 1 | 52 | 1 | 5.20 | |
Praveen Jayawickrama | 10 | 0 | 47 | 1 | 4.70 | |
Akila Dananjaya | 10 | 0 | 65 | 2 | 6.50 | |
Dasun Shanaka | 2 | 0 | 14 | 0 | 7.00 | |
Dhananjaya de Silva | 8 | 0 | 35 | 0 | 4.38 |
தென்னாபிரிக்கா வெற்றி பெற 301 ஓட்டங்கள் தேவை
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<