தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவரான இம்ரான் தாஹிர், கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரோடு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
எனினும், பாகிஸ்தானில் பிறந்த இம்ரான் தாஹிர் பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணிக்காக விளையாட முடியாமல் போனது மிகவும் கவலையளிப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் லாகூரில் பிறந்த இம்ரான் தாஹிர், 2005ஆம் ஆண்டு வரை அங்கு வாழ்ந்து வந்தார். அங்கு கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்த அவர், பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணி மற்றும் பாகிஸ்தான் ஏ அணிக்காக விளையாடியுள்ளார்.
வருட T20 உலகக் கிண்ணத்தில் விளையாட இருந்த டி. வில்லியர்ஸ்
எனினும், இம்ரான் தாஹிருக்கு துரதிஷ்டவசமாக பாகிஸ்தான் அணிக்காக விளையாடுகின்ற வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் மனைவி சுமையா தில்தாரின் அறிவுரைக்கு அமைய 2005ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்.
எனவே, அந்த நாட்டு சட்டப்படி நான்கு வருடங்கள் அங்கு வாழ்ந்த இம்ரான் தாஹிருக்கு, 2009ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்காக விளையாடுகின்ற வாய்ப்பு கிடைத்தது.
இந்தநிலையில், பாகிஸ்தானின் ஜியோ சுப்பர் தொலைக்காட்சிக்கு அண்மையில் அவர் அளித்த பேட்டியொன்றில்,
”லாகூரில் கிரிக்கெட் விளையாடியுள்ளேன். என் வாழ்க்கையில் பெரும்பாலான கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தானில் தான் விளையாடினேன்.”
Video – டிவில்லியர்ஸ் Comeback எப்போது? |Sports RoundUp – Epi 124
”எனினும், பாகிஸ்தான் அணிக்காக விளையாடுகின்ற வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவதற்கு இறைவன் அருள் புரிந்துள்ளான். உண்மையில் தென்னாபிரிக்கா அணிக்காக விளையாடுவதற்கு எனது மனைவி தான் முக்கிய காரணம்” என தெரிவித்தார்.
41 வயதான இம்ரான் தாஹிர், தென்னாபிரிக்கா அணிக்காக இதுவரை 20 டெஸ்ட், 107 ஒருநாள் மற்றும் 38 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 2011, 2015 மற்றும் 2019 ஆகிய வருடங்களில் நடைபெற்ற ஐ.சி.சி இன் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகளில் தென்னாபிரிக்கா அணியை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.
அத்துடன், 2019 உலகக் கிண்ணப் போட்டியுடன் சர்வதேச ஒருநாள் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<