ஐ.பி.எல். தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இணைக்கப்பட்டிருந்த லுங்கி என்கிடி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைக்கப்பட்டிருந்த என்ரிச் நோர்ட்ஜே ஆகிய தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் T20I போட்டியில் மயிரிழையில் வெற்றியை தவறவிட்ட இலங்கை
கேப்டவுனில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது……
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இணைக்கப்பட்டிருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான கமலேஷ் நாகர்கொடி மற்றும் சிவம் மாவி ஆகியோர் ஏற்கனவே ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகியுள்ளதுடன், இவர்களுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் கே.சி. கரியப்பா ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் கொல்கத்தா அணியின் மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளரான என்ரிச் நோர்ட்ஜே, தோற்பட்டை உபாதை காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். நோட்ஜே இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது உபாதைக்கு முகங்கொடுத்திருந்தார். இதன் காரணமாக அவர் ஐ.பி.எல். தொடரில் விளையாடமாட்டார் என தென்னாபிரிக்க அணியின் முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
கொல்கத்தா அணி என்ரிச் நோர்ட்ஜேவை அவரது அடிப்படை விலையான 20 இலட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியிருந்தது. நோர்ட்ஜே தென்னாபிரிக்காவின் ம்ஷான்சி சுப்பர் லீக்கின் மூன்று போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், 150 கிலோமீற்றர் வேகத்தில் பந்து வீசியிருந்ததால், கொல்கத்தா அணிக்குள் இணைக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை, தென்னாபிரிக்க அணியின் மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளரான லுங்கி என்கிடி இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலகியுள்ளார். என்கிடி கடந்த வருடம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியிருந்ததுடன், அந்த அணி சம்பியன் பட்டத்தையும் வென்றிருந்தது. என்கிடியின் உபாதை மற்றும் உலகக்கிண்ணம் என்பவற்றை கருத்திற்கொண்டு, அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் முகாமையாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 69
டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்த ……
ஐ.பி.எல். தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகள் தங்களுடைய மாற்று வீரர்களை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<