தென்னாரிபிரிக்க அணி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக ஆட இருக்கின்ற முதலிரண்டு ஒரு நாள் போட்டிகளுக்குமான தமது அணியிலிருந்து முக்கிய இரண்டு வீரர்களுக்கு திடீர் ஓய்வு வழங்கியுள்ளது.
பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடருக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு
பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடருக்கான …
தென்னாபிரிக்க அணி தமது சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணியுடன் மூன்று டெஸ்ட், ஐந்து ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகின்றது.
நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்க அணி 3-0 எனுமடிப்படையில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்து நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான இரு அணிகளினதும் குழாம் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், தென்னாபிரிக்கா அறிவித்த முதலிரண்டு போட்டிகளுக்குமான 14 பேர் கொண்ட குழாமிலிருந்து நேற்று (16) இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான டேல் ஸ்டைன் மற்றும் நம்பிக்கைக்குறிய துடுப்பாட்ட வீரரரும், விக்கெட் காப்பாளருமான குயின்டன் டி கொக் ஆகியோருக்கு முதலிரண்டு போட்டிகளுக்குமான குழாமிலிருந்து ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது.
கடந்த 2016ஆம் ஆண்டு தோள்பட்டை சத்திரசிகிச்சை மேற்கொண்டிருந்த டேல் ஸ்டைன், பாகிஸ்தானுடனான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் போது சிறிதளவில் அதன் வலியை உணர்ந்தார். தற்போது அவர் சாதாரண நிலையிலேயே உள்ளார். இருந்தாலும், அவரது உடல்நிலையைக் கருதியே அவருக்கு முதலிரண்டு போட்டிகளுக்கும் ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது.
முதலிரண்டு போட்டிகளிலும் டேல் ஸ்டைனின் இடத்தை நிரப்புவதற்காக, கடந்த டெஸ்ட் தொடரின் போது 24 விக்கெட்டுக்களை வீழ்த்தி தொடர் நாயகனாக தெரிவு செய்யப்பட்ட டுவன்னே ஒலிவியர் முதல் தடவையாக ஒரு நாள் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இறுதி டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவாகியிருந்த விக்கெட் காப்பாளர் குயின்டன் டி கொக்கின் ஓய்விற்குப் பதிலாக 24 வயதுடைய இளம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான எய்டன் மர்க்ரம் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். குயின்டன் டி கொக்கிற்கு என்ன காரணத்திற்கான ஓய்வு வழங்கப்பட்டது என்பது தொடர்பிலான தகவல்கள் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.
மே.தீவுகளுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட், ஒரு நாள் குழாம் அறிவிப்பு
மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து …
இந்நிலையில், குயின்டன் டி கொக்கின் ஓய்வினால், முன்னதாகவே குழாமில் இடம்பிடித்த ஹென்ரிச் க்கிலாசன் விக்கெட் காப்பாளராக செயற்படவுள்ளார் என தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தெவிரித்துள்ளது.
புதிய மாற்றங்களின் பின்னர் தென்னாபிரிக்க குழாம்
பாப் டு ப்ளெஸிஸ் (தலைவர்), ஹசிம் அம்லா, டுவன்னே ஒலிவியர், ரீஸா ஹென்றிக்ஸ், இம்ரான் தாஹிர், ஹென்ரிச் க்கிலாசன், டேவிட் மில்லர், டேன் பெட்டர்சன், அன்டில் பெலுக்வாயோ, டுவைன் பிடோரியஸ், ககிஸோ றபாடா, தப்ரிஷ் ஷம்ஷி, எய்டன் மர்க்ரம், றைஸ் வென்டர் டைஸன்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<