தென்னாபிரிக்க தொடருக்காக இலங்கை அணியுடன் இணையும் வீரர்

Sri Lanka tour of South Africa 2024

46

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான நெயில் மெக்கென்சி இலங்கை வீரர்களுடன் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் பயிற்சியாளராக இணைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வனிந்து ஹஸரங்க ஒருநாள் தொடரில் ஆடுவது சந்தேகம்

இலங்கை கிரிக்கெட் அணி இம்மாத நடுப்பகுதியில் .சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிற்காக தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றது 

இந்த டெஸ்ட் தொடர் இலங்கை .சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஆடும் வாய்ப்பினை தீர்மானிக்க மிக முக்கியமானது என்பதனால், இலங்கை கிரிக்கெட் அணி தென்னாபிரிக்க மண்ணின் களநிலைமைகளை அறிந்து வைத்திருக்கும் நெயில் மெக்கென்சியை பயிற்றுவிப்பிற்காக ஒப்பந்தம் செய்துள்ளது 

தென்னாபிரிக்காவிற்காக மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் 5,000 இற்கு மேற்பட்ட ஓட்டங்களை குவித்த அனுபவம் கொண்டிருக்கும் நெயில் மெக்கென்சி தென்னாபிரிக்கா பயணமாகியிருக்கும் 11 பேர் கொண்ட இலங்கை குழாத்துடன் இம்மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை பயிற்சி முகாமில் பங்கெடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<