இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஐசிசி சுபர் லீக்கிற்கான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள தென்னாபிரிக்கா குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் வேகப்பந்துவீச்சாளர் சிசண்டா மகலா ஒரு வருடத்துக்கு பின்னர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். உடற்தகுதியை நிரூபிக்க தவறியதால் கடந்த வருடம் முழுவதுமாக அணியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த இவர், உடற்தகுதியை நிரூபித்து மீண்டும் அணியில் இடத்தை பிடித்துக்கொண்டார்.
ஆஸி.யிடம் மோசமான தோல்வியடைந்த இலங்கை U19 மகளிர் அணி
அதேநேரம் அதிகமாக தென்னாபிரிக்க கிரிக்கெட்டில் பேசப்பட்டுவரும் இளம் துடுப்பாட்ட வீரர் டெவால்ட் பிரேவிஸ் இந்த குழாத்தில் இணைக்கப்படவில்லை. இவர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள T20I தொடரில் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிசண்டா மகலாவுடன் மார்க்கோ யான்சன் மீண்டும் தென்னாபிரிக்க ஒருநாள் குழாத்தில் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்த இரண்டு மாற்றங்களை தவிர்த்து, தென்னாபிரிக்க குழாத்தில் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை.
அணியின் தலைவராக டெம்பா பவுமா தொடர்ந்தும் செயற்படவுள்ளதுடன், குயிண்டன் டி கொக், ரஸ்ஸி வென் டர் டஸன், காகிஸோ ரபாடா, டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, கேஷவ் மஹாராஜ் மற்றும் வெயன் பார்னல் ஆகிய முன்னணி வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
தென்னாபிரிக்க குழாம்
தெம்பா வவுமா (தலைவர்), குயிண்டன் டி கொக், ஹென்ரிச் கிளாசன், ரஸ்ஸி வென் டர் டஸன், கேஷவ் மஹாராஜ், ரீஷா ஹென்ரிக்ஸ், மார்க்கோ யான்சன், சிசண்டா மகலா, ஜெனமன் மலன், அய்டன் மர்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, என்ரிச் நோக்கியா, வெயன் பார்னல், காகிஸோ ரபாடா, டெப்ரைஷ் சம்ஷி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<