தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள மூன்று T20I மற்றும் 5 ஒருநாள் போட்டிகளுக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் 2023-24ம் ஆண்டுக்கான முதல் தொடராக இந்த தொடர் அமையும் என கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
IPL தொடரிலிருந்து விலகினார் கேஎல் ராகுல்
இரண்டு அணிகளுக்கும் இடையிலான T20I தொடர் ஆகஸ்ட் 30ம் திகதி முதல் 3ம் திகதிவரை டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமாகின்றது. ஒருநாள் தொடர் செப்டம்பர் 7ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், 17ம் திகதி நிறைவடையவுள்ளது.
தென்னாபிரிக்க அணி ஏற்கனவே நடபெறவிருந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை தவிர்த்திருந்ததன் காரணமாக, இவ்வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணத் தொடருக்கு நேரயாக தகுதிபெறுவதற்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக அயர்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான தொடர் முடிவில் உலகக்கிண்ணத்துக்கான நேரடி தகுதியை பெற்றுக்கொள்ளும் இறுதி அணி தொடர்பிலான அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும்.
அவுஸ்திரேலிய அணி இறுதியாக 2020ம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்ததுடன், குறித்த தொடரில் ஒருநாள் தொடரை 3-0 என அவுஸ்திரேலிய அணி இழந்திருந்ததுடன், T20I தொடரை 2-1 என கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டி அட்டவணை
- முதல் T20I – ஆகஸ்ட் 30
- 2வது T20I – செப்டம்பர் 1
- 3வது T20I – செப்டம்பர் 3
- முதல் ஒருநாள் – செப்டம்பர் 7
- 2வது ஒருநாள் – செப்டம்பர் 9
- 3வது ஒருநாள் – செப்டம்பர் 12
- 4வது ஒருநாள் – செப்டம்பர் 15
- 5வது ஒருநாள் – செப்டம்பர் 17
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<