இலங்கை தொடருக்கான தென்னாபிரிக்க A குழாம் அறிவிப்பு

South Africa A tour of Sri Lanka 2023

281

இலங்கை A அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் மற்றும் 2 நான்கு நாட்கள் கொண்ட போட்டித் தொடர்களுக்கான தென்னாபிரிக்க A குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவித்துள்ள தென்னாபிரிக்க A குழாத்தில் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய பல முன்னணி வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

பொறுப்பான முறையில் துடுப்பாடி வரும் அயர்லாந்து கிரிக்கெட் அணி

அணியின் தலைவராக டொனி டி ஷொர்ஷி பெயரிடப்பட்டுள்ளதுடன் இவரின் தலைமையில் 15 வீரர்கள் அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட இந்த 15 வீரர்களில் தேசிய அணி வீரர்களாக கீகன் பீட்டர்சன், கெயல் வெரைன், ஜெரால்ட் கோட்ஷி, டிரிஷ்டன் ஸ்டப்ஸ் மற்றும் சுபைர் ஹம்ஸா போன்ற வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அதுமாத்திரமின்றி ஏபி டி வில்லியர்ஸ் பாணியில் துடுப்பெடுத்தாடி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த டெவால்ட் பிரேவிஸ் இந்த குழாத்தில் இடம்பெற்றுள்ளார்.

இவ்வாறு முன்னணி வீரர்கள் பலருடன், இளம் வீரர்கள் பலரும் இந்த குழாத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர். இந்த தொடருக்கான தென்னாபிரிக்க A அணி மே 31ஆம் திகதி புறப்பட்டு இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க A குழாம்

டொனி டி ஷொர்ஷி (தலைவர்), கோர்பின் போஸ்ச், மெதிவ் பிரீட்ஷ்க், டெவால்ட் பிரேவிஸ், ஜெரால்ட் கோட்ஷி, சுபைர் ஹம்ஸா, ஜோர்டன் ஹெர்மன், ஷெபு மொரிகி, செனுரன் முத்துசாமி, கீகன் பீட்டர்சன், சினதெம்பா கியூஷிலி, லுதோ சிபம்லா, டிரிஷ்டன் ஸ்டப்ஷ், கெயல் வெரைன், லிஷாட் வில்லியம்ஸ்

போட்டி அட்டவணை

  • முதல் ஒருநாள் போட்டி – ஜூன் 4 – பல்லேகலை
  • இரண்டாவது ஒருநாள் போட்டி – ஜூன் 6 – பல்லேகலை
  • மூன்றாவது ஒருநாள் போட்டி – ஜூன் 8 – பல்லேகலை
  • முதல் நான்கு நாள் போட்டி – ஜூன் 12-15 – தம்புள்ள
  • இரண்டாவது நான்கு நாள் போட்டி – ஜூன் 19-22 – தம்புள்ள

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<