ரவி சாஸ்த்ரி உலகில் வாழும் முட்டாள் – கங்குலி

597
Sourav Ganguly hits back at Ravi Shastri,

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயற்சியாளர் பதவிக்கு அண்மையில் அனில் கும்ப்ளே தெரிவு செய்யப்பட்டார்.

பயிற்சியாளர் பதவிக்கு 57 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், இந்திய அணியின் இயக்குநராக ஒரு ஆண்டுக்கும் மேலாகப் பதவி வகித்த ரவி சாஸ்திரிக்கும் அனில் கும்ப்ளேவுக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவியது.

இருப்பினும், ரவி சாஸ்திரியை நிராகரித்த, சச்சின் தெண்டுல்கர், கங்குலி, விவிஎஸ் லட்சுமண் ஆகியோர் அடங்கிய குழு அனில் கும்ப்ளேவை தெரிவு செய்தது. முன்னதாகப் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணலில் ரவிசாஸ்திரி கலந்து கொண்ட போது, கங்குலி கலந்து கொள்ளவில்லை. எனவே ரவி சாஸ்திரி தெரிவு செய்யப்படாததற்கு கங்குலிதான் காரணம் என்று பரவலாகப் பேசப்பட்டது.

இந்த நிலையில், கங்குலி நேர்காணலின் போது கலந்து கொள்ளாததற்கு ரவி சாஸ்திரி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா  டுடே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ரவி சாஸ்திரி கூறுகையில், “கங்குலி தனது வேலைக்கு மதிப்பளிக்க வேண்டும். யார் மீதும் கோபம் இல்லை. நான் அதிருப்தி அடைந்தேன் அவ்வளவே. கிரிக்கெட்டில் எதுவும் ஆச்சரியம் இல்லை. சவுரவ் கங்குலியுடன் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவருக்கு ஒப்படைக்கப்பட்ட வேலைக்கு உரிய மரியாதையை அளிக்கவில்லை என்பதுதான் எனக்கு அதிருப்தியைத் தருகிறது”என்றார்

இந்நிலையில் ரவி சாஸ்திரியின் கருத்து தன்னைக் காயப்படுத்தியுள்ளதாக கங்குலி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “அவரின் கருத்துகள் தனிமனிதரைக் குறிவைப்பது போல் உள்ளது. அவருக்கு பயிற்சியாளர் வேலை கிடைக்காமல் போனதற்கு நான் தான் காரணம் என்று நினைத்தால் அவர் முட்டாள்களின் உலகில் வாழ்வதாக அர்த்தம்.

எனக்கு அதே தினத்தில் வேறு முக்கிய பணி இருந்ததால், அவரது நேர்காணலில் பங்குபெற முடியவில்லை. ஆனால் இந்திய அணியின் முக்கிய பதவிக்கு விண்ணப்பித்தவர், நேர்காணலுக்கு வராமல், பாங்காக்கில் விடுமுறையைக் கழித்தப்படியே இணையம் மூலம் பேசுகிறார்.

ரவி சாஸ்திரி கருத்துகள் என்னை காயப்படுத்தியதுடன், வருத்தம் அடையவும் வைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்