இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சௌரவ் கங்குலி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) 39ஆவது தலைவராக அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வைட்வொஷ் வெற்றியுடன் இந்தியா டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முன்னிலையில்
சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் …….
நேற்று (22) மும்பையில் இடம்பெற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் வருடாந்த கூட்டத்தின் போதே, கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதேவேளை, இந்திய உள்விவகார அமைச்சர் அமித் சாஹ்வின் புதல்வர் ஜெய் சாஹ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேநேரம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய பொருளாளர் பதவி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவரான அனுராக் தாக்கூரின் இளைய சகோதரர் அருண் துமாலுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர், செயலாளர் போன்ற பதவிகளுக்கு சிபாரிசு செய்யப்பட்ட ஆட்களை ஏனையோர் எதிர்த்து போட்டியிடாத நிலையில் தேர்தல்கள் ஏதுமின்றி புதிய தலைவர், செயலாளர் போன்றோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.
புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் கங்குலி, மஹராஜ் குமாரிற்கு பின்னர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக மாறும் முதலாவது முன்னாள் (இந்திய) கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய ஒப்பந்தத்தில் இளம் வீரர்கள் புறக்கணிப்பா?
இலங்கை கிரிக்கெட் சபை (SLC), தேசிய கிரிக்கெட் ……..
புதிதாக பொறுப்பை ஏற்றிருக்கும் சௌரவ் கங்குலி, 2020ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் வரையில் மாத்திரமே BCCI இன் தலைவராக செயற்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் இருக்கும் சௌரவ் கங்குலி, தனது முன்னோடிகளில் ஒருவரான ஜகன் மோகன் டல்மியாவை அடிப்படையாக கொண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினை ஆளுகை செய்யவுள்ளதாக குறிப்பிட்டிருக்கின்றார்.
இந்திய கிரிக்கெட் அணி இனம் கண்ட தலைசிறந்த அணித்தலைவர்களில் ஒருவர் என போற்றப்படும் 47 வயதான கங்குலி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 18,575 ஓட்டங்களை குவித்திருப்பதோடு 132 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு புதிய தலைவர், செயலாளர் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் காரணத்தினால், இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கு அமைவாக இந்திய கிரிக்கெட் சபையின் நிர்வாகத்தை இயக்கிவந்த நிர்வாகக்குழுவின் பதவிக்காலமானது 33 மாதங்களுடன் நிறைவுக்கு வந்திருக்கின்றது.
கங்குலி தலைமையிலான புதிய நிர்வாகக் குழு, தங்களது பொறுப்புக்களை புதன்கிழமை (23) தொடக்கம் பொறுப்பேற்றுக் கொள்கின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<