2024-2031 வரை நடைபெற ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமத்தை இந்தியாவின் Sony Pictures Networks India (SPNI) நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இதற்கு முந்தைய ஒளிப்பு உரிமை ஒப்பந்தத்தை விட புதிய ஒப்பந்தத்தின் மதிப்பானது 70% ஆல் அதிகரித்துள்ளதாக ஆசிய கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
அதன்படி, 2031 ஆம் ஆண்டு வரை நடைபெறவிருக்கும் அனைத்து ஆடவர் மற்றும் மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்கள், 19 வயதுக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் ஆசியக் கிண்ணத் தொடர்கள், வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆடவர் மற்றும் மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்கள் ஆகியவற்றை ஒளிபரப்பு செய்யும் உரிமம் Sony நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.
இதனிடையே, ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்களுக்கான ஒளிபரப்பு உரிமை தொடர்பான ஏலத்தில் Sony நிறுவனம் மாத்திரம் போட்டியிட்டாலும், Jio-Star இந்த ஏலத்தில் பங்கேற்கவில்லை.
- ஐ.பி.எல். 2025 தொடருக்கான திகதிகள் அறிவிப்பு
- பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை U17 குழாத்தில் தமிழ்பேசும் வீரர்!
அதன்படி, 170 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 4951 கோடி ரூபா) அடிப்படை மதிப்பில் எதிர்வரும் 8 ஆண்டுகளுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்களுக்கான ஒளிபரப்பு உரிமையை Sony நிறுவனம் வாங்கியது.
இந்த நிலையில், 2031 வரை, 4 ஆடவர் கிரிக்கெட் தொடர்கள் (இரண்டு ஒருநாள் தொடர் வடிவத்திலும், இரண்டு T20 தொடர் வடிவத்திலும் ஆசியக் கிண்ணத் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 2025ஆம் ஆண்டு T20 ஆசியக் கிண்ணத் தொடர் இந்தியாவிலும், 2027ஆம் ஆண்டு ஒருநாள் ஆசியக் கிண்ணத் தொடர் பங்களாதேஷிலும் நடைபெற உள்ளது. அத்துடன், 2029 T20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானிலும், 2031 ஒருநாள் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையிலும் நடைபெற உள்ளது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<