சகலகலா வல்லவர்களாக இருந்த கிரிக்கெட் வீரர்கள்

1638
Cricket

ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் சாதிக்கும் போது அவரை அனைவரும் ”சகலகலா வல்லவர்” என அழைப்பர். சில கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் விளையாட்டுக்கு மேலதிகமாக வேறு துறைகளிலும் திறமை காட்டி சாதித்திருக்கின்றனர்.  

அவ்வாறான கிரிக்கெட் வீரர்கள் சிலரையும், அவர்கள் எந்தெந்த துறைகளில் திறமை காட்டி சகலகலா வல்லவர்களாக இருந்தனர் என்பது பற்றியும் பார்ப்போம். 

உலகின் சிறந்த தலைவர் டோனியா? பொண்டிங்கா? அப்ரிடியின் பதில்

சலீல் அன்கோலா 

சலீல் அன்கோலா

சலீல் அன்கோலா இந்திய கிரிக்கெட் அணிக்காக கடந்த 1989ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி, சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தவர். 

வலதுகை வேகப் பந்துவீச்சாளரான அன்கோலா இந்திய அணி, 1996ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் விளையாடும் போது இந்திய அணிக் குழாத்தில் இடம்பெற்றிருந்ததோடு தனது நாட்டுக்காக ஒரு டெஸ்ட் போட்டியுடன் 20 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

எனினும், கிரிக்கெட் விளையாட்டுக்கு மேலதிகமாக நடிப்பிலும் ஆர்வம் காட்டிய அன்கோலா இந்திய தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பலவற்றில் நடித்திருப்பதோடு, சில திரைப்படங்களிலும் நாயகனாக நடித்திருக்கின்றார். 

நாடகத் தொடர் ஒன்றில் சலீல்

இவர் நடித்த தொலைக்காட்சி தொடர்களில், ”கர்மபால் தாடா சானி” என்னும் நாடகத் தொடர் மிகப் பிரபல்யமாக இருக்கின்றது. இன்னும், அன்கோலா ”பிக்பாஸ்” நிகழ்ச்சித் தொடரிலும் கடந்த 2006ஆம் ஆண்டில் போட்டியாளராக பங்கேற்றது பிரபல்யமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

video – மாலிங்க, இசுரு IPL ஆடுவாங்களா?|Sports RoundUp – Epi 126

நதன் அஸ்ல் 

நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நதன் அஸ்ல் கடந்த 2007ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்திருந்தார். 

நதன் அஸ்ல்

கிரிக்கெட் விளையாட்டில் ஓய்வு பெற்ற பின்னர் தொழில்முறை கால்பந்து வீரராக கிறைஸ்ட்சேர்ச் நகரினை பிரதிநிதித்துவம் செய்யும் கழகம் (Rangers A.F.C) ஒன்றுக்கு விளையாடிய அஸ்ல், கார் செலுத்துவதில் இருந்த ஆர்வம் காரணமாக கார் ஓட்டப்பந்த வீரராகவும் மாறினார். பின்னர், கடந்த 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற முன்னணி கார் ஓட்டப்பந்தய தொடர் (South Island Sprint Car Championship) ஒன்றில் பங்கேற்ற நதன் அஸ்ல் மூன்றாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டார்.  

இவ்வாறாக கிரிக்கெட் விளையாட்டுக்கு மேலதிகமாக பல்வேறுதுறைகளில் அசத்திய நதன் அஸ்ல், நியூசிலாந்து அணி கிரிக்கெட் விளையாட்டு இனம்கண்ட முக்கியமான சகலகலா வல்லவராக இருக்கின்றார். 

ஹென்ரி ஒலோங்கா 

ஜிம்பாப்வே அணிக்காக கடந்த 1999ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் விளையாடியிருக்கும் பந்துவீச்சாளரான ஹென்ரி ஒலோங்கா, உலகக் கிண்ணம் தவிர்த்து 30 டெஸ்ட் போட்டிகளிலும், 50 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியிருக்கின்றார். 

ஹென்ரி ஒலோங்கா

ஐ.சி.சி இன் முடிவால் கேள்விக்குறியாகும் முன்னணி வீரர்களின் ஓய்வு

கிரிக்கெட் போட்டிகளின் பின்னர் பாடுவதில் ஆர்வம் காட்டிய இவர் தனது ஓய்வுக்குப் பின்னர் கடந்த 2006ஆம் ஆண்டில் இசை ஆல்பம் ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதோடு, தனது பாடும் திறமையினைக் காண்பிக்க ஹென்ரி ஒலோங்கா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹென்ரி ஒலோங்கா இன் இசை ஆல்பம்

பாடும் திறமை ஒரு பக்கம் இருக்க, தொலைக்காட்சி வர்ணனையாளராகவும் ஒலோங்கா பணிபுரியும் ஆற்றல் கொண்டிருக்கின்றார்.  

நவ்ஜோத் சிங் சிது

இந்திய கிரிக்கெட் அணியில் சுழல் பந்துவீச்சாளர்களை எதிர்த்து ஆடக்கூடிய  சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக பெயர் பெற்றவர் நவ்ஜோத் சிங் சிது. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட அனுபவத்துடன் 51 டெஸ்ட் போட்டிகளிலும், 136 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடியிருக்கின்றார்.

நவ்ஜோத் சிங் சிது

கிரிக்கெட் விளையாட்டுக்குப் பின்னர் கிரிக்கெட் வர்ணனையாளராக வாழ்க்கையைத் தொடர்ந்த நவ்ஜோத், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் நடுவராக (குறிப்பாக நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கு) செயற்பட்டிருக்கின்றார். நடிப்பிலும் ஆர்வம் கொண்ட நவ்ஜோத் சிது, திரைப்படம் ஒன்றிலும் நடித்திருக்கின்றார். 

மோசமான சாதனைக்கு சொந்தக்காரர்களாகிய 5 பந்துவீச்சாளர்கள்!

இவை ஒரு பக்கம் இருக்க, அரசியல் ஞானம் கொண்ட நவ்ஜோத் சிங் சிது ஒரு அரசியல்வாதியாக மாறியதன் மூலம் இந்தியாவின் பஞ்சாப் மாநில அமைச்சர்களில் ஒருவராகவும் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நவ்ஜோத் சிங் சிது

கேர்ட்லி அம்ப்ரோஸ்  

மேற்கிந்திய தீவுகள் அணி, கிரிக்கெட் உலகிற்கு பரிசளித்த ஒரு பந்துவீச்சுப் பொக்கிஷமாக கேர்ட்லி அம்ப்ரோஸ் காணப்படுகின்றார். மொத்தமாக 400 டெஸ்ட் விக்கெட்டுக்களுக்கு மேல் சாய்த்திருக்கும் அம்ப்ரோஸ் கிரிக்கெட் வரலாறு கண்ட மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கேர்ட்லி அம்ப்ரோஸ்

கிரிக்கெட் விளையாட்டு தவிர இசை மீது ஆர்வம் கொண்ட அம்ப்ரோஸ், தொழில்முறை இசைக்குழுவொன்றில் கிட்டார் வாத்தியக் கலைஞராக பணிபுரிந்து இசை சுற்றுப்பயணங்களை (Musical Tours) மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, நடனத்திலும் அம்ப்ரோஸ் ஆர்வம் காட்டும் ஒருவராக காணப்படுவது குறிப்பிடத்தக்கது. 

இம்ரான் கான்

அம்ப்ரோஸ் போன்று கிரிக்கெட் விளையாட்டு இனம்கண்ட மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரான இம்ரான் கான் இருக்கின்றார். 

இம்ரான் கான்

தனது தலைமையில், கடந்த 1992ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை பாகிஸ்தானுக்கு வென்று கொடுத்த இம்ரான் கான், கிரிக்கெட் விளையாட்டுக்குப் பின்னர் தனக்கு அரசியலில் இருந்த ஆர்வம் காரணமாகவும், அதில் இருந்த அறிவு காரணமாகவும் ஒரு அரசியல்வாதியாக மாறியிருந்தார். 

அடுத்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணம் இந்தியாவில்

இதன் பின்னர் தனது வியூகங்கள் மூலம் மக்களின் மனதை வென்ற இம்ரான் கான் கடந்த 2018ஆம் ஆண்டு, பாகிஸ்தானின் பிரதமராக மாறி வரலாறு படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தானின் பிரதமராக மாறிய பின்னர் இம்ரான் கான்

அன்ரூ பிளின்டோப்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரர்களில் வீரராக இருந்த, அன்ரூ பிளின்டோப் உம் கிரிக்கெட் விளையாட்டு தவிர்ந்து ஏனைய துறை ஒன்றில் ஆர்வம் காட்டிய வீரருக்கு மற்றுமொரு உதாரணமாக இருக்கின்றார்.

அன்ரூ பிளின்டோப்

அந்தவகையில், குத்துச்சண்டை விளையாட்டில் ஆர்வம் கொண்ட பிளின்டோப் சர்வதேசப் போட்டிகளில் தனது ஓய்வுக்கு பின்னர், ஒரு தொழில்முறை குத்துச்சண்டை வீரராகவும் மாறினார்.

குத்துச்சண்டை வீரராக பிளின்டோப்

தொடர்ந்து, கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற தனது கன்னி குத்துச்சண்டை போட்டியில் பிளின்டோப், பிரபல்யமிக்க தொழில்முறை குத்துச்சண்டை வீரரான றிச்சர்ட் டாவ்சனை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சஜித்ர சேனநாயக்க 

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான சஜித்ர சேனநாயக்கவும், கிரிக்கெட் விளையாட்டுக்கு மேலதிகமாக இன்னுமொரு துறையில் திறமை காட்டிய வீரராக உள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டில் முகம்சுழிக்க வைக்கும் வகையில் இடம்பெற்ற சம்பவங்கள்

அந்தவகையில் இசையில் இருக்கும் ஆர்வம் காரணமாக இசைக்கலைஞராக சஜித்ர சேனநாயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

சஜித்ர சேனநாயக்க

சஜித்ர சேனநாயக்க இலங்கையின் பிரபல்ய இசைக்கலைஞரான சனத் நந்தசிரியின் மாணவர் என்பதோடு, 2015ஆம் ஆண்டின் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை மையப்படுத்தி வெளியிடப்பட்ட இலங்கைப் பாடல் (Kirula Genemu by Centrigradz) ஒன்றுக்காகவும் பணிபுரிந்திருக்கின்றார். 

பாடல் ஒன்றை இசைக்கும் சந்தர்ப்பத்தில் சஜித்ர சேனநாயக்க

இது மட்டுமின்றி சேனநாயக்க தான் வழங்கிய செவ்வி ஒன்றில், தனக்கு இருந்த கிரிக்கெட் பணிச்சுமையை கருத்திற் கொண்டே முழுமையான தொழில்முறை இசைக்கலைஞர் ஆவதற்காக கவனம் செலுத்தவில்லை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இங்கே நாம் பார்த்த கிரிக்கெட் வீரர்களில் எந்த வீரரின் திறமை உங்களை கவர்ந்தது கீழே குறிப்பிடுங்கள்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க