இலங்கை இராணுவப்படை குத்துச்சண்டை வீரரான சஜீவ நுவான், ரஷ்யாவில் நடைபெற்ற 58ஆவது உலக இராணுப்படை குத்துச்சண்டை சம்பியன்ஷிப் தொடரில் வெண்கலப்பதக்கம் வென்றிருக்கின்றார்.
உலக மெய்வல்லுனர் தரவரிசையில் யுபுன் வரலாற்று பதிவு
அந்தவகையில் 29 வயது நிரம்பிய சஜீவ நுவான் உலக இராணுவப்படை குத்துச்சண்டை சம்பியன்ஷிப் தொடரின் 49 கிலோ கிராம் எடைப்பிரிவின் மொசாம்பிக் வீரரான யாசின் நொர்டினே இசுபுபோ (Yassine Nordine Issufo) இணை வீழ்த்தியே வெண்கலப் பதக்கம் வென்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், சஜீவ நுவான் கடந்த 2019ஆம் ஆண்டில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனது தாயகத்திற்காக பதக்கம் வெல்லாத குறையினையும், உலக இராணுவப்படை குத்துச்சண்டை சம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்று நிவர்த்தி செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சஜீவ நுவான் உலக இராணுவப்படை குத்துச்சண்டை சம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி அதில் அவர் சிறப்பு ஆட்டத்தினை வெளிப்படுத்திய போதும் அரையிறுதியில் அவர் பிரேசிலின் லென்டர்சோ கொன்கெய்யாகோ சிகுவேரா (Leanderso Conceicao Siqueira) இடம் தோல்வியினை சந்தித்த காரணத்தினால் வெள்ளிப் பதக்கம் வெல்லும் வாய்ப்பினை இழந்திருக்கின்றார்.
இலங்கை பளுதூக்கல் அணியில் இடம்பிடித்தார் ஆர்ஷிகா
மறுமுனையில் பெண்களுக்கான 75 கிலோ கிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட கயானி நிசான்சல களுஆராச்சிகலகேவும், இலங்கைக்காக உலக இராணுவப்படை குத்துச்சண்டை சம்பியன்ஷிப் தொடரில் வெண்கலப்பதக்கம் வென்று சாதித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி மூலம் – Sunday Observer
மேலும் விளையாட்டுச் செய்திகளுக்கு…