தம்மீது சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கு ஓர் ஆண்டு தடை விதித்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை மீது மேல் முறையீடு செய்யப்போவதில்லை என்பதை ஸ்டீவன் ஸ்மித் உறுதி செய்துள்ளார். அதேபோன்று, பான்க்ரொப்டும் தன் மீதான தடைக்கு சவால் விடுக்காமல் இருக்க முடிவு செய்துள்ளார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எந்த ஒரு தலைமை பொறுப்பையும் வகிக்க ஸ்மித்துக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தடை விதித்திருக்கும் நிலையில் சமூக தளத்தின் ஊடே இன்று (04) அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்டார் ஸ்மித்
பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் ஸ்டீவன்…
தென்னாபிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித்துடன், உப தலைவர் டேவிட் வோர்னருக்கும் ஓர் ஆண்டு தடை விதிக்கப்பட்டதோடு, கெமரூன் பான்க்ரொப்டுக்கு ஒன்பது மாத தடை விதிக்கப்பட்டது.
எனினும் இதனை அளவுக்கு மீறிய தடை என குறிப்பிட்டிருக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் சங்கம், இந்த தடையை மீள்பரிசீலனை செய்யும்படி வலியுறுத்தியுள்ளது.
எனினும், ‘நான் முழுப் பெறுப்பையும் ஏற்றேன்‘ என்று 28 வயதான ஸ்மித் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, ‘தடைக்கு எதிராக நான் மேன்முறையீடு செய்ய மாட்டேன். இந்த நடவடிக்கை மூலம் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஒரு வலுவான செய்தியை கூறியுள்ளது. அதனை நான் ஏற்கிறேன்‘ என்றார்.
கண்ணீருடன் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வோர்னர்
கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால், ஒரு வருட போட்டித் தடை …
மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பின்னர் உடன் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்ட ஸ்மித், வோர்னர் மற்றும் பான்க்ரொப்ட் தமது செயலுக்காக மன்னிப்பு கேட்டிருந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்பில்லை என்று தெளிவானபோதும் அவுஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் டெரன் லீமனும் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்தார்.
டேவிட் வோர்னர் தனது 12 மாத தடைக்காலத்தை அனுபவிப்பது குறித்து ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார்.
இது பற்றி பான்க்ரொப்டும் நேற்று தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, ‘அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைக்கு இன்று நான் எனது கடிதத்தை தாக்கல் செய்தேன். விதிக்கப்பட்ட தடையை நான் ஏற்றுக்கொள்கிறேன். இதனை சுமப்பதற்கு நான் விரும்புகிறேன். அவுஸ்திரேலிய மக்களின் நம்பிக்கையை மீண்டும் வெல்ல என்ன செய்ய வேண்டும் என்றாலும் அதனை நான் செய்வேன்‘ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க