முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்மித், ஸ்டார்க் ஆடுவார்களா??

275

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான T20I மற்றும் ஒருநாள் தொடர்கள் நிறைவடைந்ததனை தொடர்ந்து, இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் புதன்கிழமை (27) காலி நகரில் ஆரம்பமாகின்றது.

>> ரோஹித் சர்மாவிற்கு கொவிட்-19 வைரஸ் தொற்று

இந்த நிலையில் இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான ஒருநாள், T20I தொடர்களில் உபாதைக்குள்ளான அவுஸ்திரேலிய வீரர்கள் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆடுவது குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.

இதில் ஒருநாள் தொடரில் உபாதைக்குள்ளான அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரர், ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆடுவதற்கான உடற்தகுதியினைப் பெற்றிருப்பதாக ESPN செய்தித்தளம் குறிப்பிட்டிருக்கின்றது.

அதேநேரம் இரு அணிகளுக்குமிடையிலான T20I தொடரின் முதல் போட்டியில் விரல் உபாதைக்குள்ளாகிய அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மிச்சல் ஸ்டார்க், முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுவதில் இன்னும் சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் அவுஸ்திரேலிய அணியின் முன்வரிசை துடுப்பாட்டவீரரான ட்ராவிஸ் ஹெட்டும் தசை உபாதையில் இருந்து முழுமையாக மீளாத நிலையில் அவர் இலங்கை – அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆடுவது சிரமம் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

>> அவுஸ்திரேலிய தொடருக்கான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு

இவர்கள் தவிர சுமார் ஐந்து வருட இடைவெளி ஒன்றின் பின்னர் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியில் வாய்ப்பினைப் பெற்றிருந்த கிளன் மெக்ஸ்வெல், முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கான வாய்ப்பினைக் கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இதேவேளை இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர் ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்குள் அடங்குவதன் காரணமாக இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் கொண்டதாக தொடராக அமைகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<