ஒன்பதாவது பருவகாலத்திற்கான கரீபியன் பிரீமியர் லீக் (CPL) T20 தொடர் தற்போது மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் இந்த சந்தர்ப்பத்தில், குறித்த போட்டிகளில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கிரிக்கெட் பந்து குறித்து அனைவராலும் தற்போது பேசப்பட்டு வருகின்றது.
தென்னாபிரிக்க தொடர்களுக்கான இலங்கை குழாம்கள் அறிவிப்பு
கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக கரீபியன் பிரீமியர் லீக் (CPL 2021) தொடரில் உபயோகம் செய்யப்படும், இந்த ஸ்மார்ட் பந்தானது கூகபுர்ரா (Kookaburra) நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த ஸ்மார்ட் கிரிக்கெட் பந்தில் உபயோகம் செய்யப்பட்டிருக்கும் இலத்திரனியல் கருவி பந்தினது வேகம், பந்து சுழலும் கோணம் போன்ற தகவல்களை கணினிக்கோ அல்லது ஸ்மார்ட் கடிகாரத்திற்கோ அல்லது Tablet ஒன்றுக்கோ உடனடியாக வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
இதேநேரம், இந்த ஸ்மார்ட் கிரிக்கெட் பந்தில் பந்து வீசும் போது அது தரையில்பட முன்னர் இருந்த வேகத்தினையும் சுழல் கோணத்தினையும், தரையில் பட்டதன் பின்னர் இருந்த வேகத்தினையும், சுழல் கோணத்தினையும் அவதானிக்க கூடிய சிறப்பு ஆற்றல்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் டேல் ஸ்டெய்ன் ஓய்வு
அதோடு பந்துவீச்சாளர் பந்துவீசும் போது செலவிட்ட வலுவின் (Power) அளவினை கணிக்கும் திறனும் இந்த ஸ்மார்ட் பந்தில் காணப்படுகின்றது.
பரீட்சார்த்தமாக தற்போது CPL போட்டிகளில் பயன்படுத்தப்பட்டுவரும் இந்த ஸ்மார்ட் கிரிக்கெட் பந்தானது விரைவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<