இலங்கை கிரிக்கெட் சபை (SLC), 19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் மற்றும் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலகக் கிண்ணம் என்பவற்றில் பங்கெடுப்பதற்கு தெரிவு செய்துள்ள 26 பேர் அடங்கிய இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் பயிற்சிக்குழாத்தினை வெளியிட்டிருக்கின்றது.
Dialog-SLC T20 லீக் சம்பியனாகிய தசுன் ஷானகவின் SLC கிரேய்ஸ்!
இந்தப் பயிற்சிக்குழாத்தில் உள்ள 26 வீரர்களும் இலங்கை கிரிக்கெட் சபையினால் நாடாளவிய ரீதியில் ஒழுங்கு செய்யப்பட்ட திறமை இனங்காணல் (Talent Profiling Programme) நிகழ்ச்சித்திட்டத்தில் உள்வாங்கப்பட்ட 75 வீரர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அதேநேரம், இந்த வீரர்கள் நாடாளவீய ரீதியில் ஒழுங்கு செய்யப்பட்ட குறித்த திறமை இனங்காணல் நிகழ்ச்சித்திட்டத்தின் போது வதிவிடப்பயிற்சி முகாம் ஒன்றில் பங்கேற்க வைக்கப்பட்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டே தற்போது இறுதி பயிற்சிக் குழாத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் விபரம்
- சதீஷ் ஜயவர்தன – புனித ஜோசப் கல்லூரி – கொழும்பு
- அபிஷேக் லியனாரச்சி – DS. சேனநாயக்க கல்லூரி, கொழும்பு
- றயான் பெர்னான்டோ – புனித தோமியர் கல்லூரி, கல்கிஸை
- சதீஷ ராஜபக்ஷ – றோயல் கல்லூரி, கொழும்பு
- சவோன் டேனியல் – புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு
- பவான் சந்தேஷ் – தேவபதிராஜ கல்லூரி, காலி
- ஹரின்து ஜயசேகர – புனித தோமியர் கல்லூரி, மாத்தறை
- ஜீவக சஷீன் – தேவபதிராஜ கல்லூரி, காலி
- பவன் பதிராஜ – திரித்துவ கல்லூரி, கண்டி
- மதீஷ வீரசிங்க – மலியதேவ கல்லூரி, குருநாகல்
- வினுஜ ராம்போல் – நாலந்த கல்லூரி, கொழும்பு
- லஹிரு தேவட்டகே – புனித பேதுரு கல்லூரி, கொழும்பு
- மல்ஷ தருபதி – மதம்பகம, அம்பாலங்கொடை
- துனித் வெல்லால்கே – புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு
- ட்ரவீன் மெதிவ்ஸ் – புனித அந்தோனியர் கல்லூரி, கட்டுகஸ்தோட்ட
- சஷிக நிர்மல் – தேவபதிராஜ கல்லூரி, காலி
- யசிரு ரொட்ரிகோ – புனித தோமியர் கல்லூரி, கல்கிஸை
- தனால் ஹேமனாந்த – புனித பேதுரு கல்லூரி, கொழும்பு
- மதீஷ பத்திரன – திரித்துவக் கல்லூரி, கண்டி
- விபதீவ் எஹலபொல – திரித்துவ கல்லூரி – கண்டி
- ரவீன் டி சில்வா – நாலந்த கல்லூரி, கொழும்பு
- சமிந்து விக்ரமசிங்க – புனித அந்தோனியர் கல்லூரி, கட்டுகஸ்தோட்டை
- பவான்த ஜயசிங்க – தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு
- வனுஜ சஹான் – புனித பேதுரு கல்லூரி, கொழும்பு
- லஹிரு அபேயசிங்க – புனித அந்தோனியர் கல்லூரி, கட்டுகஸ்தோட்டை
- மலீஷ சில்வா – புனித சில்வஸ்டர் கல்லூரி, கண்டி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<