பெண்களுக்கான பிரிவு 1 இன் அரை இறுதிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்று இறுதிப் போட்டிக்கான அணிகள் தெரிவு செய்யப்பட்டன

190
Air Force and Army to lock horns in Women’s T20 Final

கோல்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற அரை இறுதிப் போட்டிகளிலும் வெற்றிபெற்று தெரிவு செய்யப்பட்ட இராணுவ மகளிர் அணி மற்றும் விமானப்படை மகளிர்அ ணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

முதலாவது அரையிறுதிப் போட்டி கொழும்பு கோல்ட்ஸ் மகளிர் அணிக்கும், இராணுவ மகளிர்அணிக்கும் இடையில் இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கோல்ட்ஸ் மகளிர் அணியினர் களத்தடுப்பைத் தெரிவுசெய்தனர். இதனைத்தொ டர்ந்து துடுப்பெடுத்தாடிய இராணுவ அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 117 ஓட்டங்களைப் பெற்றனர்.

வெற்றிக் கனவுடன் துடுப்பெடுத்தாடிய கோல்ட்ஸ் மகளிர் அணியினர் இராணுவ அணியின் பலத்த பந்துவீச்சின் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுகள் இழப்பிற்கு 85 ஓட்டங்களையே பெறமுடிந்தது. இப்போட்டியில் இராணுவ மகளிர் அணியினர் 32 ஓட்டங்களால் அபார வெற்றி அடைந்தனர்.

இராணுவ மகளிர் அணி – 117/8 (20) இரேஷா தமயந்தி 22, நிலக்சிகா சில்வா 20,   லக்மாலி மெத்தனந்த 18*, பூஜனி லியனகே 2/12

கோல்ட்ஸ் மகளிர் அணி – 87/7(20) தீபிகா லைசன்சிக33, நிலுக்க  கருணாரத்னே 2/24,  நிலக்ஷிகா சில்வா 2/16 

முடிவு – இராணுவ மகளிர் அணியினர் 32 ஓட்டங்களால் வெற்றி அடைந்தனர்.


இரண்டாவது அரை இறுதிப் போட்டி கடற்படை மகளிர் அணிக்கும், விமானப்படை மகளிர் அணிக்கும் இடையில் சவால் மிக்க போட்டியாக அமைந்தது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கடற்படை மகளிர் அணி துடுப்பெடுத்தாடத் தீர்மனித்தது.வேகமாக துடுப்பெடுத்தாடிய கடற்படை மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுகளை இழந்து 108 ஓட்டங்களை மாத்திரம் பெறமுடிந்தது. இதில் அதிக பட்சமாக ஹாசினி பெரேரா 38 ஓட்டங்களையும், லசந்தி மதுஷானி 31ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய விமானப்படை மகளிர் அணியினர் சமாரி அதப்பத்துவின் நிதான ஆட்டத்தின் மூலம் 18.3 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து 111 ஓட்டங்களைப்

பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது. இதில் சமாரி அதப்பத்து ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களைக் குவித்தார். இவர் இலங்கை மகளிர் அணியின் முன்னால் தலைவியும் தற்போதைய ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனையும் ஆவார் .

கடற்படை மகளிர் அணி – 108/9(20) ஹாசினி பெரேரா 38, லசந்தி மதுஷானி 3, உதார ரண்சிங்க 3/15, சமாரி அதப்பத்து 2/27, சமாரி போல்கம்பொல 2/18 

விமானப்படை மகளிர் அணி – 111/3(18.3) சமாரி அதப்பத்து 77*, இனோகா ரணவீர 2/19

முடிவு – விமானப்படை மகளிர் அணியினர் 7 விக்கட்டுகள் விதியாசத்தில் அபார வெற்றிபெற்றனர் 

இறுதிப் போட்டி எதிர்வரும் 17ஆம் திகதி கோல்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறும்.