இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இளம் கிரிக்கெட் வீரர்களுக்காக ஒழுங்கு செய்து நடாத்தி வரும் இரண்டு நாட்கள் கொண்ட “மேஜர் எமர்ஜிங் லீக் (Emerging Major League)” தொடரில் இன்றைய தினம் (23) மூன்று போட்டிகள் நிறைவை எட்டியிருந்தன.
சீரற்ற காலநிலையால் முடிவை எட்டாத மேஜர் எமர்ஜிங் லீக் போட்டிகள்
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இளம் கிரிக்கெட் வீரர்களுக்காக ஒழுங்கு செய்து…
றாகம கிரிக்கெட் கழகம் – கடற்படை கிரிக்கெட் கழகம், விமானப்படை விளையாட்டு கழகம் – சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் மற்றும் லங்கா கிரிக்கெட் கழகம் – நுகேகொட விளையாட்டு கழகம் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நிறைவுக்கு வந்தன.
றாகம கிரிக்கெட் கழகம் எதிர் கடற்படை கிரிக்கெட் கழகம்
வெலிசறையில் நடைபெற்ற இந்தப் போட்டி, மழைக்காரணமாக முதல் நாள் ஆட்டம் நடைபெறாத நிலையில், இன்றைய தினம் மாத்திரம் போட்டி நடைபெற்றது. எனினும், இரு அணிகளும் ஒவ்வொரு இன்னிங்ஸ் மாத்திரம் துடுப்பெடுத்தாட போட்டி சமனிலையில் முடிவடைந்தது.
றாகம கிரிக்கெட் கழகம் – 108/10 (28.4), நிஷான் பீரிஸ் 28, 4/32, ஜொஹான் டி சில்வா 3/15, ஹசின் டில்மின் 2/11
கடற்படை கிரிக்கெட் கழகம் – 203/4 (33.3), சாலித் பெர்னாண்டோ 54*, சவிந்து பீரிஸ் 53*, செனொன் பெர்னாண்டோ 2/30
முடிவு – போட்டி சமனிலையடைந்தது
சமனிலையில் முடிந்த BRC – SSC மோதல்
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இளம் கிரிக்கெட் வீரர்களுக்காக ஒழுங்கு செய்து…
விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்
சிலாபம் மேரியன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியும், மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட, இரண்டாவது நாளான இன்று சமனிலையில் முடிவடைந்தது.
விமானப்படை விளையாட்டு கழகம் – 117/10 (50.5), சாதிக் இப்தாரி 23, நவீன் குணவர்தன 5/18, இமேஷ் விமுக்தி 2/40
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 126/6 (22), தசுன் செனவிரத்ன 28, சனோஜ் விஜேதுங்க 27, நுஷ்கி அஹமட் 2/40
முடிவு – போட்டி சமனிலையடைந்தது
லங்கா கிரிக்கெட் கழகம் மற்றும் நுகேகொட விளையாட்டு கழகம்
பண்டாரகம பொது மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டதால், நடுவர்களால் முடிவற்ற போட்டியாக அறிவிக்கப்பட்டது.
லங்கா கிரிக்கெட் கழகம் – 163/8d (35), சவான் கன்கமன்மே 64, கவின் பெரேரா 23, மெதுசன் குமார 4/59, கவீச மதுரப்பெரும 4/96
நுகேகொட விளையாட்டு கழகம் – 100/4 (25), சந்தருவான் பெர்னாண்டோ 33*, நிஷான் பெரேரா 28
முடிவு – போட்டி சமனிலையடைந்தது
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<