சமனிலையில் முடிந்த BRC – SSC மோதல்

163

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இளம் கிரிக்கெட் வீரர்களுக்காக ஒழுங்கு செய்து நடாத்தி வரும் இரண்டு நாட்கள் கொண்ட “மேஜர் எமர்ஜிங் லீக் (Emerging Major League)” தொடரில் இன்று நடைபெற்ற BRC மற்றும் SSC அணிகளுக்கிடையிலான போட்டி சமனிலையில் முடிவுக்கு வந்தது.

மேஜர் எமர்ஜிங் லீக்கில் அபாரம் காட்டிய லக்ஷான், அசேன், ப்ரமோத்

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இளம்….

எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நேற்று ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற எஸ்.எஸ்.சி. முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பி.ஆர்.சி. அணிக்கு வழங்கியது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பி.ஆர்.சி. அணி முதல் இன்னிங்ஸில் 196 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், அதிகபட்சமாக கலன மதுசங்க 37 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, பந்துவீச்சில் அசேல் குலதுங்க 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

பின்னர், தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த எஸ்.எஸ்.சி அணி, பி.ஆர்.சி. அணியின் ஓட்ட எண்ணிக்கையை நெருங்கிய போதும், 195 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், க்ரிஷான் சஞ்சுல 55 ஓட்டங்களையும், சந்தருவான் சிந்தக 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் துவிந்த திலகரட்ன 56 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து ஒரு ஓட்டம் முன்னிலையில் தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பி.ஆர்.சி. அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 75 ஓட்டங்களை பெற்றிந்த நிலையில், ஆட்டநேரம் முடிவுக்கு வந்தது. இதனால், போட்டி சமனிலையில் முடிவுக்கு வந்தது.

சீரற்ற காலநிலையால் சமனிலையான மேஜர் எமர்ஜிங் போட்டிகள்

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இளம்…..

சுருக்கம்

BRC – 196 (75.1), கலன மதுசங்க 37, தருஷ நிம்ஹார 34, அசேல் குலதுங்க 3/28, ஹிமேஷ் ரத்நாயக்க 3/34

SSC – 195 (67.5), க்ரிஷான் சஞ்சுல 55, சந்தருவான் சிந்தக 33, துவிந்த திலகரட்ன 4/56, அஷேன் டேனியல் 4/33  

BRC (2வது இன்னிங்ஸ்)- 75/4 (20.3), கெவின் கொத்திகொட 31, அசேல் சிகரா 3/31

முடிவு – போட்டி சமனிலை

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<