23 வயதிற்குட்பட்டோர் கிரிக்கட்- பதுரெலிய, சிலாபம் மரியன்ஸ் மற்றும் சரசென்ஸ் அணிகள் வெற்றி

311
U23 Roundup Image

23 வயதிற்குட்பட்டோர் முதலாம் தர கழகங்களுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டித் தொடரில் இஷார அகலங்க (43) மற்றும் சஞ்சுல அபயவிக்ரமவின் (100) சிறப்பாட்டங்கள் காலி கிரிக்கட் கழகம் மற்றும் லங்கன் கிரிக்கட் கழகங்களின் தோல்வியை தடுக்கமுடியாமற் போனதுடன் இஷான் நிலக்ஷ 86 ஓட்டங்களை விளாசி சரசென்ஸ் அணியை வெற்றி பெறச்செய்தார்.

பதுரெலிய கிரிக்கட் கழகம் எதிர் காலி கிரிக்கட் கழகம்

சர்ரேமைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற காலி கிரிக்கட் கழகம் முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ஆரம்பத்திலிருந்தே விக்கட்டுகளை உரிய இடைவெளிகளில் பெறத் தொடங்கிய காலி கிரிக்கட் கழகம் பதுரெலிய கழகத்தை 36 ஓவர்களில் 9 விக்கட்டுகள் இழப்பிற்கு 180 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தியிருந்தபோது மழை குறுக்கிட்டது.

பதும் மதுஷங்க பதுரேலிய அணிக்காக அதிக பட்ச ஓட்டங்களான 34 ஓட்டங்களை 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக பெற்றுக் கொடுத்தார். மற்றும்படி குறித்தவொரு வீரரும் பெரிதாக சோபிக்கத் தவறினர்.

எனினும் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட பதுரேலிய கிரிக்கட் கழகம் காலி கிரிக்கட் கழகத்தை 26 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 96 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தியது. இஷாரா அகலங்க 43 ஓட்டங்களைப் பெற்ற அதேவேளை சதுர லக்சான் 25 பந்துகளில் 36 ஓட்டங்களைப் பதிவு செய்தார். எனினும் காலி கிரிக்கட் கழகம் 33.3 ஓவர்களில் 154 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேலை சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வியுற்றனர்.

பதுரேலிய கிரிக்கட் கழகம் – 36 ஓவர்களில் 180/9. பதும் மதுஷங்க 34, மதுஷான் ரவிச்சந்திரகுமார் 21, ஹரித் சமரசிங்க 21

காலி கிரிக்கட் கழகம் – 33.3 ஓவர்களில் 154. இஷாரா அகலங்க 43, சதுர லக்சான் 34, சதுர லியனகே 3/32, ஹரித் சமரசிங்க 2/30