இலங்கை வர்த்தக கிரிக்கெட் சம்மேளனம் (Mercantile Cricket Association) ஒழுங்கு செய்துள்ள சுப்பர் பிரீமியர் லீக் (Super League) தொடரில் பங்கெடுக்கும் 25 பேர் கொண்ட இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
>>இரண்டு ஆண்டுக்கான ஒப்பந்தத்தை பெறும் மே.தீவுகள் வீரர்கள்!
T20 போட்டிகளாக நடைபெறவிருக்கும் வர்த்தக கிரிக்கெட் சம்மேளனத்தின் சுப்பர் பிரீமியர் லீக் தொடர், வெள்ளிக்கிழமை (04) ஆரம்பமாகும் நிலையிலையே குறிப்பிட்ட தொடரில் பங்கெடுக்கும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் குழாத்தில் யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்களான நியூட்டன், மாலிங்க பாணியில் பந்துவீசும் குகதாஸ் மாதுளன் ஆகியோர் இணைக்கப்பட்டிருக்கின்றனர்.
இவர்கள் ஒருபக்கமிருக்க விக்கெட்காப்புத் துடுப்பாட்டவீரரான சாருஜன் சண்முகநாதனும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை 19 வயதின் கீழ் குழாம்
புலிந்து பெரேரா, திலன்த ராஜபக்ஷ, துல்னித் சிகாரா, சாருஜன் சண்முகநாதன், தினத் பீரிஸ், AMTLB. அபேசிங்க, விமத் தின்சார, WPKUS. விதானபதிரண, செனுல பெரேரா, விரான் சமுதித்த, MGMHM. ஆதம், சதேவ் சமரசிங்க, கவிஜ செமால் தரான கமகே, RPKDDC. பெரேரா, விஹாஸ் தேவ்மிக்க, பிரவீன் மனீஷ, KK. யூரி, யெனுலா தேவ்துசா, AHMDRB. அபேசிங்க, கீதிக டி சில்வா, K. நியூட்டன், RGKA. லியனராச்சி, K. மாதுளன், WA. ரிசாத் நிம்சார, H.தர்ஷகா சந்தீப்ப