இவ்வாண்டு உள்ளூர் T20 தொடரில் முதல் முறை விக்கெட் வீழ்த்த தவறிய மாலிங்க

629

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 2017/18 ஆம் ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான T20 தொடரின் 11 போட்டிகள் இன்று (01) நடைபெற்றன.

இதில் பலம்மிக்க SSC, சிலாபம் மேரியன்ஸ், கொழும்பு கிரிக்கெட் கழக அணிகள் இலகு வெற்றியை பதிவு செய்ததோடு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் தொடர்ந்து நான்காவது போட்டியிலும் வெற்றியீட்டி B குழுவில் முதலிடத்தில் நீடிக்கிறது.

இம்முறை உள்ளூர் T20 தொடரில் மூன்றாவது போட்டியாக இலங்கை இராணுவப்படை மற்றும் செரசன்ஸ் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான ஆட்டம் இரு அணிகளும் சமமான ஓட்டங்களை பெற்று போட்டி சமநிலையில் முடிந்தது. முன்னதாக கடந்த செவ்வாய்கிழமை (27) நடைபெற்ற இரண்டு போட்டிகள் இவ்வாறு சமநிலையில் பரபரப்பாக முடிந்தன. அதிலும் இலங்கை இராணுவப்படை அணி தனது இரண்டு போட்டிகளை இவ்வாறு சமநிலையில் முடித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

திசர பெரேராவின் அதிரடி ஆட்டத்தால் முதல் வெற்றியை சுவைத்த SSC

கொழும்பு பொலிஸ்பார்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகத்தை 72 ஓட்டங்களுக்கு சுருட்டிய SSC அணி 4 விக்கெட்டுகளை இழந்து அந்த இலக்கை எட்டியது.

அதேபோன்று கொழும்பு ப்ளும்பீல்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் களுத்துறை நகர கழகம் நிர்ணயித்த 141 ஓட்ட வெற்றி இலக்கை  திக்ஷில டி சில்வாவின் அதிரடி ஆட்டம் மூலம் சிலாபம் மேரியன்ஸ் அணி 14 ஆவது ஓவரிலேயே எட்டியது. திக்ஷில டி சில்வா 31 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 72 ஓட்டங்களை விளாசினார்.     

இதேவேளை கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் தோல்வியுறாத அணியாக ஆதிக்கம் செலுத்துகிறது. கொழும்பு BRC மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் லங்கன் கிரிக்கெட் கழகத்தை 83 ஓட்டங்களுக்கு சுருட்டிய கோல்ட்ஸ் அணி ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து அந்த இலக்கை எட்டியது.

சோனகர் விளையாட்டுக் கழகம் மற்றும் தமிழ் யூனியன் அணிகளும் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகின்றன. கடற்படை விளையாட்டுக் கழகத்தை 8 விக்கெட்டுகளால் இலகுவாக வென்ற சோனகர் விளையாட்டுக் கழகம் தனது 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று D குழுவில் முதலிடத்தில் உள்ளது.

கட்டுநாயக்கவில் நடைபெற்ற போட்டியில் இலங்கை துறைமுக அதிகாரசபை அணியை எதிர்கொண்ட தமிழ் யூனியன் அணிக்கு ரவிந்து கொடிதுவக்கு 57 பந்துகளில் ஆட்டமிழக்காது 79 ஓட்டங்களை விளாசியதோடு ஷாலிக்க கருணாநாயக்க 55 ஓட்டங்களை விளாசினார். இதன் மூலம் அந்த அணி 187 ஓட்டங்களை குவித்ததோடு எதிரணியை 72 ஓட்டங்களுக்கு சுருட்டி தொடரில் 3ஆவது வெற்றியை பெற்றது.

நிரோஷன், மாலிங்க மற்றும் மெதிவ்ஸின் இழப்பு குறித்து குருசிங்கவின் விளக்கம்

மறுபுறம் NCC அணிக்கு கடந்த மூன்று போட்டிகளில் விக்கெட்டுகளை சாய்த்த லசித் மாலிங்க ராகம கிரிக்கெட் கழகத்திற்கு எதிரான போட்டியில் எந்த விக்கெட்டையும் வீழ்த்தவில்லை. முத்தரப்பு T20 தொடருக்கான இலங்கை அணியில் இடம் கிடைக்காத நிலையிலேயே மாலிங்க சோபிக்கத் தவறியுள்ளார்.

போட்டிகளின் சுருக்கம்

SSC எதிர் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 72 (16.4) – ருவந்த ஏக்கநாயக்க 26, ஜெப்ரி வென்டர்சே 3/12, விமுக்தி பெரேரா 2/13, சச்சித்ர சேனநாயக்க 2/18  

SSC – 73/4 (12.2) – திமுத் கருணாரத்ன 19

முடிவு – SSC அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி


களுத்துறை நகர கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

களுத்துறை நகர கழகம் – 140/6 (20) – நிலூஷன் நோனிஸ் 58*, சுரேஷ் நிரோஷன் 33, திக்ஷில டி சில்வா 2/25

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 143/4 (13.2) – திக்ஷில டி சில்வா 72, சச்சித்ர சேரசிங்க 44, நிபுன காரியவசம் 2/18

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 6 விக்கெட்டுகளால் வெற்றி  


கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்

லங்கன் கிரிக்கெட் கழகம் – 83/9 (16) – தினுஷ்க மாலன் 30, ரஜீவ வீரசிங்க 22*, நிசல தாரக்க 3/22, டில்ருவன் பெரேரா 2/11  

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 84/1 (10.3) – அவிஷ்க பெர்னாண்டோ 49*, சதீர சமரவிக்ரம 20

முடிவு – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 9 விக்கெட்டுகளால் வெற்றி


பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம் (CCC)

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 74/9 (20) – ஷஷ்ரிக்க புஸ்ஸேகொல்ல 30, அஷான் பிரியஞ்சன் 2/12, டில்ஷான் முனவீர 2/18

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 75/3 (9.3) – அஷான் பிரியஞ்சன் 51*, தரிந்து பெர்னாண்டோ 2/33

முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுகளால் வெற்றி


பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் BRC

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 125/9 (20) – மஞ்சுல ஜயவர்தன 32*, சமித் துஷாந்த 24, திலகரத்ன சம்பத் 3/32

BRC – 126/5 (18) – லிசுல லக்ஷான் 57, இந்திக்க டி சேரம் 22

முடிவு – BRC அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி


நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 125/6 (20) – டிலசிறி லொகுபண்டார 44, தரிந்து வீரசிங்க 29, ரமேஷ் மெண்டிஸ் 2/17

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் – 117/9 (20) – ரமேஷ் மெண்டிஸ் 44, ரொஷேன் பெர்னாண்டோ 3/20, உமேக சதுரங்க 2/16

முடிவு – நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 8 ஓட்டங்களால் வெற்றி

சகிப் அல் ஹசனின் மீள்வருகையில் தொடரும் சர்ச்சை

காலி கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

காலி கிரிக்கெட் கழகம் – 64 (15.4) – புத்திக்க சதருவன் 4/09, ரொஸ்கோ தட்டில் 3/10, ​சொஹான் ரங்கிக்க 2/16

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 65/5 (13.4) – ரொஸ்கோ தட்டில் 25*, ரவீன் சாயர் 4/13

முடிவு – விமானப்படை விளையாட்டுக் கழகம் 5 விக்கெட்டுகளால் வெற்றி  


கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்

கடற்படை விளையாட்டுக் கழகம் – 85 (17.1) – இஷான் அபேசேகர 27, சுபேஷல ஜயதிலக்க 4/08, கோசல குலசேகர 3/08, டிலங்க சந்தகன் 2/23

சோனகர் விளையாட்டுக் கழகம் – 89/2 (13.5) – இரோஷ் சமரசூரிய 29*, அதீஷ திலஞ்சன 24*, சரித்ர குமாரசிங்க 23, நுவன் சம்பத் 2/25

முடிவு – சோனகர் விளையாட்டுக் கழகம் 8 விக்கெட்டுகளால் வெற்றி


ராகம கிரிக்கெட் கழகம் எதிர் NCC

ராகம கிரிக்கெட் கழகம் – 165/8 (20) – ஷெஹான் பெர்னாண்டோ 47, சமீர டி சொய்சா 39, அக்‌ஷு பெர்னாண்டோ 24, லஹிரு திரிமான்ன 23, சதுரங்க டி சில்வா 4/2, லஹிரு குமார 2/36

NCC – 107 (14.2) – நிரோஷன் திக்வல்ல 27, அஞ்செலோ பெரேரா 21, குஷான் வீரக்கொடி 3/16, ஜனித் லியனகே 2/20, இஷான் ஜயரத்ன 2/30

முடிவு – ராகம கிரிக்கெட் கழகம் 58 ஓட்டங்களால் வெற்றி


இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் – 145/8 (20) – லக்ஷான் எதிரிசிங்க 50*, ஹிமாஷ லியனகே 37, அஷான் ரன்திக்க 34, ரவிந்து குணசேகர 3/20, ரொஷான் ஜயதிஸ்ஸ 2/17, மொஹமட் டில்ஷான் 2/30

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் – 145/5 (20) – ரவிந்து குணசேகர 57, சாலிய சமன் 33*, அண்டி சொலமன்ஸ் 25, அஜந்த மெண்டிஸ் 2/16, ஜானக்க சம்பத் 2/19

முடிவு – போட்டி சமநிலையில் (Tied) முடிவுற்றது


தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்  

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் – 187/5 (20) – ரவிந்து கொடிதுவக்க 79*, ஷாலிக்க கருணாநாயக்க 55, நலின் பிரியதர்ஷன 3/20

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் – 72 (13.5) – துலஞ்சன மெண்டிஸ் 4/19, திஸ்னக்க மனோஜ் 2/23

முடிவு – தமிழ் யூனியன் 115 ஓட்டங்களால் வெற்றி