யாழ்ப்பாணத்தில் 100 மில்லியன் செலவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்

4549
SLC to spend

திறமையுள்ள கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்  சமமான மற்றும் நியாயமான வாய்ப்புக்களை வழங்குதல்என்ற தொனிப்பொருளை இலக்காகக் கொண்டு இலங்கை கிரிக்கெட் சபை 217ஆம் ஆண்டுக்கான தேசிய அபிவிருத்தி திட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளது.

குறித்த குறிக்கோளை எட்டுவதற்காக, மாகாண ரீதியில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தரமுடைய கிரிக்கெட் அரங்கம் ஆகியவற்றை அமைத்துக்கொடுத்து வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம், உள்ளூர் பாடசாலைகள் மற்றும் கழக கிரிக்கெட் தரத்தை மேம்படுத்தலாம் என இலங்கை கிரிக்கெட்  நிர்வாகம் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளது.

கடந்த சில வருடங்களாக அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டிருந்த குறித்த அபிவிருத்தி விடயங்களை, எதிர்நோக்கியுள்ள அனைத்து சவால்களையும் மிக கவனமாக, வடிவமைக்கப்பட்ட திட்டங்களுக்கு அமைய எதிர்கொண்டு, நிபுணத்துவம் மிக்க முறையில் தீர்வுகளை பெற்றுக்கொடுத்து யாழின் கிரிக்கெட் முன்னேற்றத்திற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.   

இரண்டு ஆண்டுகளை  அடிப்படையாக கொண்டுள்ள இந்த செயட்திட்டதில், ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் அமைக்க தீர்மானிக்கப்பட்டிருந்த அல்லது முன்மொழியப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு  முதலில் விசேட முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளது.

மைதானத்திற்கான இடத்தை ஆய்வு செய்யும் முகமாக இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால, கிரிக்கெட் சபை அதிகாரிகளுடன் யாழ்ப்பாணம் பெனின்சுலவிக்கு கடந்த வாரம் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இதன்போது வட மாகாண மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிகாரிகள், மாவட்ட கிரிக்கெட் சங்கங்களின் உறுப்பினர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், யாழ்ப்பாண பொலிஸார் உட்பட பலர் பங்கு கொண்டிருந்தனர்.  

வட மாகாண முதலமைச்சர் கௌரவ சி.வி. விக்னேஷ்வரன் நாட்டில் இல்லாத நிலையிலும், அங்கு சென்றிருந்த திலங்க சுமதிபால மற்றும் அதிகாரிகளுக்கு, முதலமைச்சரின் உத்தியோகபூர்வ அதிகாரிகளினால் உட்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டிதிருந்தது.

குறித்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்காக தெரிவு செய்யப்பட்டிருந்த இரண்டு நிலப்பரப்புக்களில் ஒன்றினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, மண் வளம், நீர், மின்சாரம், சுற்றுப்புற சுழல் பாதுகாப்பு மற்றும் இலகுவான போக்குவரத்து வசதி உள்ளடங்கலாக  அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யகூடிய தன்மைகளை மதிப்பீடு செய்து, தகுதி வாய்ந்த தொழில்நுட்ப நிபுணர்களினால் அவை குறித்த அறிக்கையொன்று வழங்கப்படவிருக்கிறது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால கருத்து தெரிவிக்கையில், கிரிக்கெட் வீரர்களுக்கான வசதிகள் மற்றும் பொது மக்களுக்கான போக்குவரத்து, பாதுகாப்பு வசதிகள் என்பவற்றைவிட ஆண்டு முழுவதும், எந்த காலநிலையிலும் புற்கள் நிலைத்து வளரக்கூடிய மண் வளத்தைக்கொண்ட சரியான இடத்தை தெரிவு செய்வது முக்கியமாகும் என்று தெரிவித்தார்.  

சரியான இடத்தை தெரிவு செய்வதற்கு, குறிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய பச்சை புற்கள் வளரக்கூடிய தன்மை மற்றும் அதனை பராமரிக்க எதிர்கொள்ளும் பாரிய சிரமங்கள் குறித்தும் சுமதிபால விளக்கினார்.  

”கிரிக்கெட் என்பது இலங்கையில் விளையாட்டு மாத்திரம் அல்ல. நாட்டுக்கு பெருமை தேடித் தந்த ஆதாரமாகவும், அதே நேரம் இனங்கள், மதங்கள் மற்றும் சமூக பேதங்களை தாண்டி நாட்டை ஒன்றிணைக்கும் ஒரு விடயமாகவும் இருக்கிறது” என்று மேலும் அவர் தெரிவித்தார்.  

எல்லோருக்கும் சமமான வாய்ப்பு மற்றும் வசதிகள் அற்றவர்களுக்கு நியாயமான உதவிகளை வழங்குதல் என்ற தொனிப்பொருளில், இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபாலவின் தொலைநோக்குடன், 100 மில்லியன் மதிப்புள்ள இந்த செயட்திட்டத்தை முன்னெடுக்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

குறித்த செயட்திட்டத்தை 2017ஆம் ஆண்டில் ஆரம்பித்து 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.