இலங்கை கிரிக்கெட் அணியின் விசேட ஆலோசகராக அவுஸ்திரேலியாவின் டொம் மூடியை இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை இலங்கை கிரிக்கெட் சபை மேற்கொண்டு வருகின்றது.
டொம் மூடியிடம் இலங்கை கிரிக்கெட் சபை பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வரும் விடயத்தினை சண்டே டைம்ஸ் (Sunday times) இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர்களுக்கான தங்குமிட கட்டிடம் சங்கக்காரவினால் திறந்துவைப்பு
இலங்கை கிரிக்கெட்டின் பிரதான மத்திய….
இலங்கை கிரிக்கெட் வீரர்களின் திறமைகளை வலுப்படுத்தும் முகமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதுடன், டொம் மூடியின் அனுபவத்தினை வீரர்களுக்கு வழங்கும் முகமாகவும் இந்த பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகின்றது.
இலங்கை கிரிக்கெட் சபையின் இந்த அழைப்புக்கு, டொம் மூடி சாத்தியமான பதில் ஒன்றை வழங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சண்டே டைம்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் மத்திய பகுதியில் டொம் மூடி இலங்கை வருவதற்கான வாய்ப்புள்ளதுடன், தனது ஆலோசனை பணிகளை குறித்த காலப்பகுதியில் ஆரம்பிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொம் மூடி இலங்கை அணியுடன் தங்கியிருந்து 10 தொடக்கம் 15 நாட்களுக்கு பணிபுரிவார் என்பதுடன், வருடத்தில் மீதமிருக்கும் மூன்று காற்பகுதிகளிலும் இலங்கை வந்து ஆலோசனை பணிகளை மேற்கொள்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமாத்திரமின்றி, அடுத்த வருடமும் இந்த ஆலோசனை பணியில் டொம் மூடி இணைவார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது, இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் டொம் மூடி ஆகியோருக்கு இடையில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், அதன் பின் குறித்த விடயம் தொடர்பில் உத்தியோகபூர்வமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொம் மூடி இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக 2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் செயற்பட்டுள்ளதுடன், 1996 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை அணி 2007 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றிருந்தது.
தனன்ஜயவின் போராட்டம் வீணாக தொடரை வென்றது இந்தியா
இலங்கை அணிக்கு எதிராக பூனே கிரிக்கெட்…..
அதேநேரம், இலங்கை கிரிக்கெட் அணியில் புதிய பயிற்றுவிப்பாளர்கள் அடங்கிய பயிற்றுவிப்பு குழாம் நியமிக்கப்பட்டு, பயிற்றுவிப்பு அமைப்பில் இலங்கை கிரிக்கெட் சபை மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. இதன்படி, ஜெரோம் ஜெயரத்னவுக்கு மீண்டும், பயிற்றுவிப்பு துறையின் தலைமை பதவி வழங்கப்பட்டுள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<