தேசிய மட்டதில் இரண்டாம் தர கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றிய கிரிக்கெட் வீரர்கள், முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அனுமதி வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை நேற்று (28) வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பருவகால இரண்டாம் தர போட்டிகளில் பங்குபற்றிய வீரர்கள் தேசிய மட்டத்திலான முதல் தர போட்டிகளிலும் பங்கு பற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இளம் வீரர்களின் திறமைகள் வீணடிக்கப்படுகின்றமை நாட்டின் கிரிக்கெட் முன்னேற்றத்துக்கு தடையை எற்படுத்தும் என்ற காரணத்தை கருத்தில் கொண்டே கிரிக்கெட் செயற்பாட்டு குழு இந்த முடிவினை எடுத்துள்ளது.
எவ்வாறிருப்பினும் குறித்த வீரர்கள் அனைவரும் போட்டித் தொடருக்கு விதிக்கப்பட்டுள்ள ஏனைய அனைத்து விதிகளுக்கும் உள்ளவாங்கப்படுவர்.
இந்த பருவ காலத்திற்கான இலங்கை கிரிக்கெட் பிரீமியர் லீக் போட்டிகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட இருந்தது. எனினும் சீரற்ற காலநிலையின் காரணமாக குறித்த போட்டிகள் இந்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.