ஐசிசி T20 உலகக்கிண்ணத்துக்கான தயார்படுத்தலுக்காக நடைபெற்று வரும் மூன்று அணிகளுக்கு இடையிலான பயிற்சிப் போட்டித் தொடரில் SLC டீம் யெல்லோவ் அணி 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவுசெய்தது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற SLC டீம் ப்ளூ அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட யெல்லோவ் அணி 225 ஓட்டங்களை குவித்தது.
>>மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரருக்கு 5 ஆண்டுகள் தடை<<
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் அற்புதமாக துடுப்பெடுத்தாடி 6 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 50 பந்துகளில் 100 ஓட்டங்களை விளாசினார். இவரை தொடர்ந்து ஷெவோன் டேனியல் 41 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
பின்னர் 226 ஓட்டங்கள் என்ற மிகப்பெரிய வெற்றியிலக்கை நோக்கி ஆடிய SLC டீம் ப்ளூ அணியும் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. SLC டீம் ப்ளூ அணி சார்பாக கமிந்து மெண்டிஸ் 48 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 82 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
எனினும் SLC டீம் ப்ளூ அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகளையும், லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
சுருக்கம்
SLC டீம் யெல்லோவ் – 225/3 (20) குசல் மெண்டிஸ் 100*, ஷெவோன் டேனியல் 59, அஞ்செலோ மெதிவ்ஸ் 27*, பெதும் நிஸ்ஸங்க 24
SLC டீம் ரெட் – 200/8 (20) கமிந்து மெண்டிஸ் 82, சரித் அசலங்க 35, லஹிரு சமரகோன் 23*, துனித் வெல்லாலகே 3/39, லஹிரு குமார 2/40
முடிவு – SLC டீம் யெல்லோவ் அணி 25 ஓட்டங்களால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<