ஐசிசி T20 உலகக்கிண்ணத்திற்கான தயார்படுத்தலுக்காக நடைபெற்றுவரும் பயிற்சி T20 தொடரில் இன்று நடைபெற்ற SLC டீம் கிரீன் மற்றும் SLC டீம் ரெட் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டீம் ரெட் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டீம் கிரீன் அணி ஓட்டங்களை குவிக்க தடுமாறியதுடன் தினேஷ் சந்திமால், சஹான் ஆராச்சிகே மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோரின் ஓரளவு பங்களிப்புகளுடன் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 151 ஓட்டங்களை பெற்றது.
>>இலங்கை – தென்னாபிரிக்கா தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது
தினேஷ் சந்திமால் 30 ஓட்டங்கள், சாமிக்க கருணாரத்ன 29 ஓட்டங்கள் மற்றும் சஹான் ஆராச்சிகே 27 ஓட்டங்கள் என பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் நிமேஷ் விமுக்தி 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டீம் கிரீன் அணிக்கு அவிஷ்க பெர்னாண்டோ 23 பந்துகளுக்கு 48 ஓட்டங்களை விளாசி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார். இவரையடுத்து கமிந்து மெண்டிஸ் 23 ஓட்டங்களையும், அஹான் விக்ரமசிங்க 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
எனினும் இதன்பின்னர் ஓட்டங்கள் கட்டுப்படுத்தப்பட டீம் ரெட் அணி தடுமாற தொடங்கியது. கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகள் கைவசமிருக்க 4 ஓட்டங்கள் என்ற தேவை என்ற நிலையில் 9வது விக்கெட்டையும் இழந்து 5வது பந்தில் டீம் ரெட் அணி வெற்றியை பதிவுசெய்தது.
டீம் கிரீன் அணியின் பந்துவீச்சில் சாமிக்க கருணாரத்ன, லக்ஷான் சந்தகன் மற்றும் கடைசி ஓவரை வீசிய இளம் வீரர் கருக சங்கெத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சுருக்கம்
SLC டீம் கிரீன் – 151/9 (20), தினேஷ் சந்திமால் 30, சாமிக்க கருணாரத்ன 29, நிமேஷ் விமுக்தி 4/23
SLC டீம் ரெட் – 155/9 (19.5), அவிஷ்க பெர்னாண்டோ 48, கமிந்து மெண்டிஸ் 23, கருக சங்கெத் 2/13
முடிவு – SLC டீம் ரெட் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<