தேசிய அணி வீரர்களின் தலைமையில் இம்மாத இறுதியில் SLC டி-20 தொடர் ஆரம்பம்

1744

இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் SLC டி-20 தொடரில் தினேஷ் சந்திமால், அஞ்செலோ மெதிவ்ஸ், திசர பெரேரா மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் முறையே கொழும்பு, கண்டி, தம்புள்ளை மற்றும் காலி அணிகளுக்கு தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தப் போட்டித் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கு ஒவ்வொரு அணிக்கும் தலா 21 வீரர்கள் என 84 வீரர்கள் கொண்ட ஆரம்பக் கட்ட குழாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாலிங்கவின் எதிர்காலம் குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு

ரவுண்ட்-ரொபின் (Round-robin) அடிப்படையில் நடைபெறும் ஆரம்ப போட்டிகளில் ஒவ்வொரு அணியும் ஆறு போட்டிகளில் விளையாடவுள்ளன. புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

காலி அணிக்கு ரோய் டயஸ் பயிற்றுவிப்பாளராக செயற்படவிருப்பதோடு, கொழும்பு அணி அவிஷ்க குணவர்தனவின் பயிற்றுவிப்பின் கீழ் களமிறங்கும். அதேபோன்று கண்டி அணிக்கு பியல் விஜேவர்தனவும் தம்புள்ளை அணிக்கு சுமித்ர வர்ணகுலசூரியவும் செயற்படுகின்றனர்.

ரோய் டயஸ், அவிஷ்க குணவர்தன மற்றும் பியல் விஜேதுங்க ஆகியோர் இலங்கை தேசிய அணிக்காக விளையாடியவர்கள் என்பதோடு சுமித்ர வர்ணகுலசூரிய முதல் தர போட்டிகளில் விளையாடியவராவார்.     

இந்த தொடரின் மொத்தம் 13 போட்டிகளும் ThePapare.com, டயலொக் TV செனல் இலக்கம். 123 மற்றும் டயலொக் MyTV ஊடாக நேரடியாக காண முடியும்.

குழாம்கள்

கொழும்பு – தினேஷ் சந்திமால் (தலைவர்), உபுல் தரங்க (உப தலைவர்), மஹேல உடவத்த, அகில தனஞ்சய, ஷெஹான் ஜயசூரிய, சதுரங்க டி சில்வா, ஷம்மு அஷான், சச்சித்ர சேரசிங்க, அவிஷ்க பெர்னாண்டோ, பிரியமால் பெரேரா, ஜீவன் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், லசித் அபேரத்ன, நுவன் பிரதீப், அசித்த பெர்னாண்டோ, விஷ்வ சதுரங்க, லசித் எம்புல்தெனிய, லஹிரு மதுஷங்க, அஷேன் பண்டார, திசரு ரஷ்மிக்க டில்ஷான், நிம்சர அத்தனகல்ல,

முகாமையாளர் – கஜபா பிடிகல

தலைமை பயிற்றுவிப்பாளர் – அவிஷ்க குணவர்தன

கண்டி – அஞ்செலோ மெதிவ்ஸ் (தலைவர்), குசல் ஜனித் பெரேரா (உப தலைவர்), தசுன் ஷானக்க, லஹிரு திரிமான்ன, லசித் மாலிங்க, சரித் அசலங்க, மலிந்த புஷ்பகுமார, சதுன் வீரக்கொடி, லஹிரு கமகே, திக்ஷில டி சில்வா, விஷ்வ பெர்னாண்டோ, சச்சித் பதிரன, நிபுன் ரன்சிக்க, பானுக்க ராஜபக்ஷ, ஜனித் சதுரங்க டி சில்வா, நிசல தாரக்க, சாமிக்க கருணாரத்ன, கவிஷ்க அஞ்சுல, பிரவீன் ஜயவிக்ரம, தனஞ்சய லக்ஷான், ஜானக்க சம்பத்,

முகாமையாளர் – பிரியந்த உதயரத்ன

தலைமை பயிற்றுவிப்பாளர் – பியல் விஜேதுங்க

தம்புள்ளை – திசர பெரேரா (தலைவர்), தில்ருவன் பெரேரா (உப தலைவர்), தனுஷ்க குணதிலக்க, சதீர சமரவிக்ரம, அஷான் பிரியன்ஜன், லக்ஷான் சந்தகன், அமில அபொன்சோ, வனிந்து ஹசரங்க, ரமித் ரம்புக்வெல்ல, இசுரு உதான, விகும் சஞ்சய, மினோத் பானுக்க, ருவிந்து குணசேகர, ரமேஷ் மெண்டிஸ், பினுர பெர்னாண்டோ, கெவின் கொத்திக்கொட, ஷெஹான் மதுஷங்க, டில்ஷான் குணரத்ன, இரோஷ் சமரசூரிய, நுவனிது பெர்னாண்டோ, நிபுன் கருனநாயக்க,

முகாமையாளர் – வினோதன் ஜோன்

தலைமை பயிற்றுவிப்பாளர் – சுமித்ர வர்ணகுலசூரிய

காலி – சுரங்க லக்மால் (தலைவர்), திமுத் கருணாரத்ன (உப தலைவர்), குசல் மெண்டிஸ், நிரோஷன் திக்வெல்ல, லஹிரு குமார, துஷ்மந்த சமீர, ஜெப்ரி வென்டர்சே, தனஞ்சய டி சில்வா, அசேல குணரத்ன, அஞ்செலோ பெரேரா, லஹிரு மலிந்த, பிரபாத் ஜனசூரிய, நிஷான் பீரிஸ், கசுன் ராஜித்த, விமுக்தி பெரேரா, நிஷான் மதுஷ்க, ஜெஹான் டானியல், மொஹமட் டில்ஷாத், சஹன் ஆரச்சிகே, ஓஷத பெர்னாண்டோ, கசுன் மதுஷங்க,

முகாமையாளர் – நலிந்த இலங்கக்கோன்

தலைமை பயிற்றுவிப்பாளர் – ரோய் டயஸ்    

போட்டிகள் அட்டவணை

திகதி அணிகள் நேரம் இடம்
செவ்வாய்க்கிழமை கொழும்பு எதிர் காலி பி.ப. 2 ஆர். பிரேமதாச
ஆகஸ்ட் 21, 2018 கண்டி எதிர் தம்புள்ளை இரவு 7 ஆர். பிரேமதாச
புதன்கிழமை கொழும்பு எதிர் கண்டி பி.ப. 2 ஆர். பிரேமதாச
ஆகஸ்ட் 22, 2018 காலி எதிர் தம்புள்ளை இரவு 7 ஆர். பிரேமதாச
சனிக்கிழமை காலி எதிர் கண்டி பி.ப. 2 தம்புள்ளை
ஆகஸ்ட் 25, 2018 கொழும்பு எதிர் தம்புள்ளை இரவு 7 தம்புள்ளை
ஞாற்றுக்கிழமை கொழும்பு எதிர் காலி பி.ப. 2 தம்புள்ளை
ஆகஸ்ட் 26, 2018 கண்டி எதிர் தம்புள்ளை இரவு 7 தம்புள்ளை
புதன்கிழமை காலி எதிர் தம்புள்ளை பி.ப. 2 பல்லேகல
ஆகஸ்ட் 29, 2018 கொழும்பு எதிர் கண்டி இரவு 7 பல்லேகல
வியாழக்கிழமை காலி எதிர் கண்டி பி.ப. 2 பல்லேகல
ஆகஸ்ட் 30, 2018 கொழும்பு எதிர் தம்புள்ளை இரவு 7 பல்லேகல
ஞாற்றுக்கிழமை செப்டெம்பர் 2, 2018 இறுதிப் போட்டி இரவு 7 ஆர். பிரேமதாச

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<