இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் அனைத்து உளளூர் கிரிக்கெட் போட்டிகளையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் செய்த முறைப்பாட்டையடுத்து, விளையாட்டு தொழில்நுட்பக் குழுவின் உத்தரவுக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் சபைக்கு இதுதொடர்பில் எழுத்துமூலம் அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
>> இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விலையில் மாற்றம்!
எனவே வினளயாட்டுத்துறை அமைச்சின் இந்த உத்தரவினால், இந்த விவகாரம் தொடர்பாக உரிய பதில் கிடைக்கும் வரை, இலங்கை கிரிக்கெட் சiபியனால் நடத்தப்படும் அனைத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளும் உடனடியாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவினால் பிரதான கழகங்களுக்கிடையிலான மூன்று நாட்கள் போட்டிகள் மற்றும் இரண்டாம் பிரிவு கழகங்களுக்கிடையிலான மூன்று நாட்கள் போட்டிகள் ஆகிய தொடர்கள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<