அணித்தலைவர் திமுத் கருணாரத்னவின் பொறுப்பான துடுப்பாட்டம் மற்றும் திசர பெரேராவின் அதிரடி பந்துவீச்சு மூலம் தம்புள்ளை அணிக்கு எதிரான போட்டியில் கண்டி அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.
தம்புள்ளை அணியை இலகுவாக வீழ்த்திய கொழும்பு
தம்புள்ளை அணிக்கு எதிரான ‘சுப்பர் 4’ மாகாண மட்ட ஒருநாள்..
இலங்கைக் கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் மாகாண மட்ட ‘சுப்பர் ப்ரொவின்சியல்” ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கண்டி அணி தனது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்த நிலையில் இந்தப் போட்டிமூலம் முதல் வெற்றியை பெற்றுக் கொண்டது. மறுபுறம் அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையிலான தம்புள்ளை தனது மூன்று லீக் போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது.
ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் இன்று (08) நடைபெற்ற இந்தப் போட்டியில் தம்புள்ளை நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
உலகக் கிண்ண எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கும் அகில தனஞ்சய
எனினும் அந்த அணி 3 ஓட்டங்களில் ஆரம்ப விக்கெட்டுகளை பறிகொடுத்ததோடு மத்திய வரிசை வீரர்கள் ஓட்டங்களை அதிகரிக்க முயன்றபோதும் அது வெற்றி அளிக்கவில்லை. ஓஷத பெர்னாண்டோ (44) மற்றும் அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் (47) சிறப்பாக ஆடியபோதும் அரைச்சதம் ஒன்றை பெற தவறினர்.
குறிப்பாக திசர பெரேரா அதரடியாக பந்துவீசி தம்புள்ளை அணியின் முக்கிய 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் தம்புள்ளை அணி 44.5 ஓவர்களில் 198 ஓட்டங்களுக்கே சுருண்டது.
Photos : Kandy vs Dambulla | Super Provincial One Day 2019
ThePapare.com | faisal ramees | 08/04/2019 Editing and re-using…
இலகுவான இலக்கை நோக்கி பதிலெடுத்தாட களமிறங்கிய கண்டி அணிக்கு ஆரம்ப வீரராக வந்த திமுத் கருணாரத்ன 74 பந்துகளில் 9 பௌண்டரிகளுடன் 86 ஓட்டங்களை பெற்று தனது ஒருநாள் திறமையை வெளிப்படுத்தினார். பெத்தும் நிசங்க 47 பந்துகளில் 51 ஓட்டங்களை பெற்றார்.
கண்டி அணி 31.3 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 199 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
எதிர்வரும் உலகக் கிண்ண போட்டிக்கான இலங்கை குழாத்தை தேர்வு செய்யும் இலக்குடனேயே இந்த குறுகிய கால போட்டித் தொடர் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Niroshan Dickwella | c Pathum Nissanka b Kasun Rajitha | 2 | 10 | 0 | 0 | 20.00 |
Danushka Gunathilake | c Sadeera Samarawickrama b Dilesh Gunaratne | 0 | 7 | 0 | 0 | 0.00 |
Oshada Ferenado | c Sachithra Senanayake b Jeffrey Vandersay | 44 | 52 | 7 | 0 | 84.62 |
Bhanuka Rajapakse | c Sadeera Samarawickrama b Thisara Perera | 27 | 32 | 3 | 0 | 84.38 |
Angelo Mathews | c Dimuth Karunaratne b Thisara Perera | 47 | 67 | 3 | 0 | 70.15 |
Ashan Priyanjan | run out (Sangeeth Cooray) | 24 | 29 | 0 | 1 | 82.76 |
Ishan Jayaratne | c Priyamal Perera b Chathuranga de Sliva | 11 | 23 | 0 | 0 | 47.83 |
Isuru Udana | c Dimuth Karunaratne b Thisara Perera | 13 | 26 | 1 | 0 | 50.00 |
Ramitha Rambukwela | c Sadeera Samarawickrama b Thisara Perera | 17 | 16 | 4 | 0 | 106.25 |
Prabath Jayasuriya | st Sadeera Samarawickrama b Jeffrey Vandersay | 1 | 6 | 0 | 0 | 16.67 |
Lahiru Gamage | not out | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 12 (b 0 , lb 4 , nb 0, w 8, pen 0) |
Total | 198/10 (44.5 Overs, RR: 4.42) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kasun Rajitha | 7 | 1 | 34 | 1 | 4.86 | |
Dilesh Gunaratne | 4 | 0 | 26 | 1 | 6.50 | |
Dimuth Karunaratne | 2 | 0 | 10 | 0 | 5.00 | |
Thisara Perera | 7 | 1 | 25 | 4 | 3.57 | |
Malinda Pushapakumara | 10 | 0 | 31 | 0 | 3.10 | |
Jeffrey Vandersay | 8.5 | 0 | 40 | 2 | 4.71 | |
Chathuranga de Sliva | 6 | 1 | 28 | 1 | 4.67 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sadeera Samarawickrama | c Ashan Priyanjan b Ishan Jayaratne | 12 | 9 | 2 | 0 | 133.33 |
Dimuth Karunaratne | c Niroshan Dickwella b Ramitha Rambukwela | 86 | 74 | 9 | 0 | 116.22 |
Sangeeth Cooray | c Ashan Priyanjan b Prabath Jayasuriya | 33 | 46 | 4 | 0 | 71.74 |
Pathum Nissanka | not out | 51 | 47 | 4 | 1 | 108.51 |
Sachithra Senanayake | not out | 13 | 13 | 2 | 0 | 100.00 |
Extras | 4 (b 0 , lb 3 , nb 0, w 1, pen 0) |
Total | 199/3 (31.3 Overs, RR: 6.32) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Lahiru Gamage | 6.3 | 1 | 45 | 0 | 7.14 | |
Ishan Jayaratne | 6 | 0 | 38 | 1 | 6.33 | |
Isuru Udana | 3 | 0 | 18 | 0 | 6.00 | |
Ramitha Rambukwela | 5 | 0 | 31 | 1 | 6.20 | |
Ashan Priyanjan | 3 | 0 | 15 | 0 | 5.00 | |
Prabath Jayasuriya | 8 | 0 | 49 | 1 | 6.12 |