எதிர்வரும் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளை இலக்காகக் கொண்டு, இலங்கை கிரிக்கெட் சபையின் அனுசரணையில் நடைபெற்று வரும் மாகாணங்களுக்கு இடையிலான போட்டியில் புள்ளிகள் அட்டவணையில் கீழ் மட்டத்திலிருந்த தம்புள்ள மற்றும் காலி அணிகள் நேற்றைய தினம் பெற்றுக்கொண்ட வெற்றியின் ஊடாக தொடரை தக்கவைத்துள்ளன.
சகல துறையிலும் பிரகாசித்த சஜித் சமீர; வெற்றியை சுவீகரித்த மேல் மாகாண கனிஷ்ட அணிகள்
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாட்டில் 2017ஆம் ஆண்டிற்கான 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள்..
தம்புள்ள எதிர் கொழும்பு
ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் பாணுக்க ராஜபக்ஷவின் அதிரடி சதத்தினூடாக தம்புள்ள அணி, கொழும்பு அணியை 44 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ள அணித் தலைவர் குசல் ஜனித் பெரேரா முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். அந்த வகையில் களமிறங்கிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான குசல் மென்டிஸ், சஜித்ர சேனாநாயக்கவின் அதிரடி பந்து வீச்சில் ஓட்டமெதுவும் இன்றி ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
எனினும், அணித் தலைவர் குசல் ஜனித் பெரேரா நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 50 பந்துகளில் 4 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 32 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். அத்துடன் மூன்றாவது விக்கெட்டுக்காக பாணுக்க ராஜபக்ஷ மற்றும் அஷான் ப்ரியஞ்சன் ஆகியோர் 155 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
இடது கை துடுப்பாட்ட வீரரான பாணுக்க ராஜபக்ஷ 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உள்ளடங்கலாக 117 ஓட்டங்களையும், அஷான் ப்ரியஞ்சன் 65 பந்துகளை மாத்திரமே எதிர்கொண்டு 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உள்ளடங்கலாக 70 ஓட்டங்களையும் விளாசினர்.
எனினும் பின்னர் தம்புள்ள அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்து வந்தது. எட்டாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய மிலிந்த சிறிவர்தன இறுதி ஓவர்களின் போது அதிரடியாக துடுப்பாடி 41 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 68 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு சிறந்த பங்களிப்பு வழங்கினார். சிறப்பாக பந்து வீசிய ஷெஹான் ஜெயசூரிய 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
அதனையடுத்து 317 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு கொழும்பு அணி சார்பாக களமிறங்கிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான நிபுன் கருணாநாயக்க மற்றும் டில்ஷான் முனவீர ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 17 ஓவர்கள் துடுப்பாடி 112 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக்கொண்டு, சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.
எனினும், அதிரடியாக துடுப்பாடி 57 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உள்ளடங்கலாக 85 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை டில்ஷான் முனவீர, சண்டகனின் பந்து வீச்சில் பெர்னாண்டோவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதனையடுத்து கொழும்பு அணி ஆட்டங்காண ஆரம்பித்தது. ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்ற போதிலும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த அணித் தலைவர் தினேஷ் சந்திமல் 84 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உள்ளடங்கலாக 70 ஓட்டங்களை பதிவு செய்தார்.
எனினும் அவ்வணி 47.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 272 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அதிரடியாக பந்து வீசிய அசித பெர்னாண்டோ மற்றும் சுழல் பந்து வீச்சாளர் அஷான் ப்ரியஞ்சன் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளை பகிர்ந்து கொண்டனர்.
Dambulla - Batting | Toss: Dambulla | |
---|---|---|
Kusal Janith Perera | b Jayasuriya | 32 (50) |
Kusal Mendis | ct T Perera b Senanayake | 0 (1) |
Bhanuka Rajapaksha | b Senanayake | 117 (111) |
Ashan Priyanjan | c Jayasinghe b Jayasuriya | 70 (65) |
Lahiru Milantha | ct Senanayake b Jayasuriya | 2 (12) |
Harsha Cooray | ct Senanayake b Jayasuriya | 0 (1) |
Milinda Siriwardena | c & b T Perera | 68 (41) |
Dilruwan Perera | b Perera | 17 (18) |
Binura Fernando | Not Out | 1 (1) |
Lakshan Sandakan | ||
Asitha Fernando | ||
Total | Extras (9) | 316/8 (50 overs) |
Colombo - Bowling | O | M | R | W |
---|---|---|---|---|
Vishwa Fernando | 10 | 0 | 73 | 0 |
Sachithra Senanayake | 10 | 0 | 53 | 2 |
Shehan Jayasuriya | 10 | 0 | 29 | 4 |
Kasun Madushanka | 3 | 0 | 28 | 0 |
Dilshan Munaweera | 9 | 0 | 60 | 0 |
Wanindu Hasaranga | 3 | 0 | 28 | 0 |
Thisara Perera | 4 | 0 | 31 | 2 |
Nipun Karunanayake | 1 | 0 | 12 | 0 |
Colombo - Batting | Toss: Dambulla | |
---|---|---|
Dilshan Munaweera | c Fernando b Sandakan | 85 (57) |
Nipun Karunanayake | st Milantha b Priyanjan | 31 (55) |
Dinesh Chandimal | c Cooray b Fernando | 70 (84) |
Angelo Jayasinghe | c Perera b Priyanjan | 17 (20) |
Kithruwan Vithanage | c Siriwardena b Sandakan | 5 (11) |
Shehan Jayasuriya | c Sub b Priyanjan | 2 (5) |
Wanindu Hasaranga | LBW b Priyanjan | 6 (9) |
Thisara Perera | c Sub b Fernando | 11 (15) |
Sachithra Senanayake | c Milantha b Fernando | 5 (7) |
Vishwa Fernando | b Fernando | 11 (14) |
Kasun Madushanka | Not Out | 14 (13) |
Total | Extras (15) | 272/10 (47.5 overs) |
Dambulla - Bowling | O | M | R | W |
---|---|---|---|---|
Binura Fernando | 5 | 1 | 29 | 0 |
Bhanuka Rajapaksha | 2 | 0 | 15 | 0 |
Asitha Fernando | 7.5 | 0 | 44 | 4 |
Milinda Siriwardena | 5 | 0 | 36 | 0 |
Dilruwan Perera | 8 | 0 | 40 | 0 |
Lakshan Sandakan | 10 | 0 | 65 | 2 |
Ashan Priyanjan | 10 | 0 | 41 | 4 |
மெத்திவ்ஸ் உட்பட அனுபவ வீரர்களுடன் சம்பியன்ஸ் கிண்ணத்தில் களமிறங்கும் இலங்கை
கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான இவ்வருட ஜூன் மாதத்தில் ஆரம்பமாகும் ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத்தில்..
காலி எதிர் கண்டி
இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதன் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலி அணித் தலைவர் உபுல் தரங்க எதிர்பார்த்தவாறே முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
அந்த வகையில் களமிறங்கிய அவ்வணி சார்பாக முதல் விக்கெட்டுக்காக 45 ஓட்டங்களை பகிர்ந்து கொண்ட ஜோடியில் அணித் தலைவர் உபுல் தரங்க 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றார். எனினும், அவரை தொடர்ந்து களமிறங்கிய அனுபவ வீரர் திமுத் கருணாரத்ன, மற்றைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான சதீர சமரவிக்ரமவுடன் இணைந்து ஒட்ட எண்ணிக்கையை அதிகரித்தார்.
சிறப்பாகத் துடுப்பாடிய சதீர சமரவிக்ரம 51 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உள்ளடங்கலாக 61 ஓட்டங்களைக் குவித்தார். அத்துடன், நிதானமாக துடுப்பாடிய திமுத் கருணாரத்ன 106 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உள்ளடங்கலாக 89 ஓட்டங்களைப் பதிவு செய்தார்.
அறிமுக வீராரான சம்மு அஷான் மற்றும் சதுரங்க டி சில்வா ஆகியோர் முறையே 22 மற்றும் 31 ஓட்டங்களை பெற்று பங்களிப்பு செய்தனர். அத்துடன் இறுதி ஓவர்களில் அதிரடியை வெளிப்படுத்திய தசுன் ஷானக்க 36 பந்துகளில் 49 ஓட்டங்களை விளாசி ஓட்ட இலக்கை அதிகரித்தார். அந்த வகையில் காலி அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 313 ஓட்டங்களைப் பதிவு செய்தது.
பின்னர் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய கண்டி அணி முதல் விக்கெட்டுக்காக 57 ஓட்டங்களைப் பதிவு செய்து சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. எனினும், சந்துன் வீரக்கொடியின் ஆட்டமிழப்பின் பின்னர் களமிறங்கிய ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
எனினும், இறுதி வரை போராடிய சஜித் பதிரன 63 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களை விளாசி களத்தில் இருந்தார். அந்த வகையில் 47ஆவது ஓவரில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 243 ஓட்டங்களை மாத்திரமே அவ்வணி பெற்று தொள்வியுற்றது.
சிறப்பாக பந்து வீசிய இடது கை பந்து வீச்சாளர் மலிந்த புஷ்பகுமார 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்தார்.
Galle - Batting | Toss: Galle | |
---|---|---|
Sadeera Samarawickrama | st Weerakkody b Pathirana | 61 (54) |
Upul Tharanga | c Peiris b Asalanka | 26 (23) |
Dimuth Karunarathne | c Asalanka b Pradeep | 89 (106) |
Sammu Ashan | c & b Sampath | 22 (29) |
Chathuranga De Silva | c Weerakkody b Sampath | 31 (33) |
Dasun Shanaka | Not Out | 49 (36) |
Seekkuge Prasanna | c Weerakkody b Pradeep | 5 (7) |
Suranga Lakmal | c Y Lanka b Gamage | 2 (3) |
Akila Dhananjaya | c Pathirana b Pradeep | 14 (10) |
Malinda Pushpakumara | Run Out | 0 (0) |
Wikum Sanjaya | ||
Total | Extras (14) | 313/9 (50 overs) |
Kandy - Bowling | O | M | R | W |
---|---|---|---|---|
Lahiru Gamage | 9 | 0 | 73 | 1 |
Chathura Peiris | 4 | 0 | 24 | 0 |
Charith Asalanka | 7 | 0 | 35 | 1 |
Nuwan Pradeep | 10 | 1 | 58 | 3 |
Sachith Pathirana | 7 | 0 | 48 | 1 |
Ramith Rambukwella | 7 | 0 | 38 | 0 |
TN Sampath | 6 | 0 | 31 | 2 |
Kandy - Batting | Toss: Galle | |
---|---|---|
Sandun Weerakkody | b Pushpakumara | 38 (41) |
Dilhan Cooray | st Samarawickrama b Pushpakumara | 13 (38) |
Mahela Udawatte | c Karunarathne b Dhananjaya | 54 (69) |
TN Sampath | st Samarawickrama b Pushpakumara | 9 (18) |
Charith Asalanka | c Sub b Ashan | 15 (10) |
Yashoda Lanka | c Pushpakumara b Ashan | 0 (2) |
Sachith Pathirana | Not Out | 73 (63) |
Ramith Rambukwella | c Samarawickrama b Shanaka | 3 (13) |
Chathura Peiris | b Lakmal | 6 (14) |
Lahiru Gamage | c Tharanga b Lakmal | 8 (8) |
Nuwan Pradeep | Run Out | 0 (3) |
Total | Extras (24) | 243/10 (46.1 overs) |
Galle - Bowling | O | M | R | W |
---|---|---|---|---|
Suranga Lakmal | 9 | 0 | 41 | 2 |
Wikum Sanjaya | 6 | 0 | 53 | 0 |
Akila Dhananjaya | 10 | 1 | 33 | 1 |
Malinda Pushpakumara | 6 | 1 | 22 | 3 |
Sammu Ashan | 10 | 0 | 53 | 2 |
Dasun Shanaka | 5.1 | 0 | 30 | 1 |