ICC இன் உறுப்புரிமை இரத்து தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை

Sri Lanka Cricket

656

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) மூலம் இலங்கை கிரிக்கெட்டுக்கு வழங்கப்பட்டுள்ள உறுப்புரிமை இரத்து தொடர்பிலும், இலங்கை கிரிக்கெட் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. 

>> புதிய தலைவருடன் இந்தியாவை எதிர்கொள்ளும் ஆஸி.!

இலங்கை கிரிக்கெட் மீதான உறுப்புரிமை இரத்து குறித்து இன்று ICC இன் நிர்வாகசபை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டிருந்த நிலையில், இந்த விடயங்களை மையமாக வைத்தே இலங்கை கிரிக்கெட் சபையின் ஊடக அறிக்கை அமைந்திருக்கின்றது.

இந்த ஊடக அறிக்கையில் இலங்கை கிரிக்கெட் மீதான உறுப்புரிமை இரத்தானது அரசியல் தலையீடுகள் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் இருக்கும் வரை தொடர்ந்து நீடிக்கும் என ICC கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது 

அந்தவகையில் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் இலங்கை கிரிக்கெட்டுக்காக நியமனம் செய்த தற்காலிக நிர்வாகக் குழு இருக்கும் வரை இலங்கை கிரிக்கெட்டுக்கான ICC இன் உறுப்புரிமை இரத்து நீடிக்கும் என ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

>> இலங்கை தொடர்பில் ICC இன் தீர்மானம்

மறுமுனையில் இலங்கையில் நடைபெறவிருந்த 19 வயதின் கீழ்ப்பட்டோருக்கான இளையோர் ஒருநாள் உலகக் கிண்ணம், ஜனவரியில் கொழும்பில் நடைபெறவிருந்த ICC இன் கூட்டத்தொடர் என்பனவும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டது இந்த உறுப்புரிமை இரத்து காரணமாகவே இடம்பெற்றிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது 

இதேவேளை இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக நிர்வாக சபை தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஷம்மி சில்வாவினையும், அவரையே இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதிநிதியாக ICC ஏற்பதாகவும் ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<