இலங்கை அணியின் அடுத்த சுழல்பந்து பயிற்சியாளர் யார்?

2136
SLC Spin Bowling Coach

இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) பயிற்சியாளர்கள் குழாம், இலங்கை அணிக்கு தகுதியான சுழற்பந்து பயிற்சியாளர் ஒருவரினை தீவிரமாக  தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

உபாதைக்குப் பிறகு மீண்டும் களமிறங்குகிறார் மெதிவ்ஸ்

இலங்கை கிரிக்கெட் அணியின் ஒரு நாள் மற்றும் T20 போட்டிகளுக்கான தலைவரான …

சுதந்திரக் கிண்ண T20 தொடரினை அடுத்து இலங்கை அணியுடனான தனது முதல் பயிற்சி அவத்தையினை முடித்துக்கொண்டு தற்போது விடுமுறைக்காக அவுஸ்திரேலியா சென்றிருக்கும், இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க கொழும்பு வந்தடைந்த பின்னர் இலங்கை அணியின் சுழற்பந்து  பயிற்சியாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும் எனக் கூறப்படுகின்றது.

விடயங்கள் இவ்வாறு இருக்க ThePapare.com ஆனது, இலங்கை அணிக்கு அடுத்த சுழற்பந்து பயிற்சியாளராக வரத் தகுதி கொண்டவர்களின் பட்டியல் ஒன்றினைப் பார்க்கவுள்ளது.

ருவன் கல்பகே

Ruwan Kalpageஇலங்கை அணிக்கான சுழற்பந்து பயிற்சியாளராக வர பல வெளிநாட்டு நபர்களின்  பெயர்கள் பரிந்துரைக்கப்படுகின்ற போதிலும், இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரரான ருவன் கல்பகே இந்தப் பதவிக்காக தகுதியுடையவர்களில் முக்கியமானர்களில் ஒருவராக உள்ளார். இலங்கை கிரிக்கெட் சபையுடன் நீண்ட கால உறவினைப் பேணிவரும் கல்பகே, கடந்த காலங்களில் கிரிக்கெட் அணிகளுக்கு களத்தடுப்பு பயிற்சியாளராக, சுழற்பந்து பயிற்சியாளராக மற்றும் கணினியுடன் இணைந்த கிரிக்கெட்  பயிற்றுவிப்பாளராக  பணியாற்றிய அனுபவத்தினைக் கொண்டிருக்கின்றார். அதோடு, சந்திக்க ஹதுருசிங்க பங்களாதேஷ் அணிக்கு பயிற்சி வழங்கிய போது, ஹதுருசிங்கவின் பயிற்சி குழாத்திலும் கல்பகே இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முத்தையா முரளிதரன்

சுழல் ஜாம்பவானான முரளி, தனது ஓய்வுக்குப் பின்னர் இலங்கை கிரிக்கெட் சபையுடன் தொடர்புகள் எதனையும் பேணிவராத ஒருவராக இருந்த போதிலும், இலங்கையின் இளம் சுழல் வீரர்கள் அனைவரும் முரளியினை முன்னுதாரணமாக கொண்டே சிறுவயதிலிருந்து  தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டிருந்தனர்.

உலக பதினொருவர் அணியில் மீண்டும் திசர பெரேரா

லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும், உலக பதினொருவர் …

பல வெளிநாட்டு அணிகளுக்கு குறுகிய கால இடைவெளிகளில் பந்துவீச்சு பயிற்சியாளராக செயற்பட்ட அனுபவத்தினைக் கொண்டிருக்கும் முரளி, தற்போது .பி.எல். தொடரில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்காக சேவை புரிந்து வருகின்றார். இதுதவிர அவுஸ்திரேலிய அணி முரளியினை தமது சுழல்பந்து ஆலோசகராக 2014ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே, இலங்கையின் சுழல் பந்து வீச்சு பயிற்சியாளராக அதிக தகுதி உள்ளவராக முரளியினை  அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.  

முஸ்தாக் அஹமட்

பாகிஸ்தான் அணியின் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளரான முஸ்தாக் அஹமட், இலங்கை அணிக்கான சுழற்பந்து பயிற்சியாளராக மாற விருப்பம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. முஸ்தாக் இதற்கு முன்னர் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சுழல் பந்து பயிற்சியாளராக செயற்பட்ட அனுவபத்தினைக் கொண்டிருக்கின்றார்.

சக்லைன் முஸ்தாக்

துஸ்ராஎன அழைக்கப்படும் விஷேட வகை சுழல்பந்தினை உலகுக்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் அணியின் மற்றுமொரு சுழல் நட்சத்திரமான சக்லைன் முஸ்தாக், இலங்கை அணிக்கு சுழல்பந்து பயிற்சியாளராக வரத் தகுதியான மற்றுமொரு நபராவர். 2016ஆம் ஆண்டு தொடக்கம் இங்கிலாந்து அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராக முஸ்தாக் நியமிக்கப்பட்டிருந்த போதிலும், இங்கிலாந்து அணிக்காக அவர் வேலை செய்யும் போது சிறு சிறு இடைவெளிகளில் ஓய்வினை எடுத்துக் கொள்வது குறிப்பிடத்தக்கது. எனவே, முஸ்தாக் குறித்த இடைவெளிகளில் இலங்கை அணிக்கு கடமையாற்றினால் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நிரோஷன் பண்டாரதிலக்க

இலங்கை அணிக்காக  7 டெஸ்ட் போட்டிகளிலும், 3 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடிய பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வினை எடுத்துக் கொண்ட இடதுகை சுழல் வீரரான நிரோஷன் பண்டாரதிலக்க, அதன் பின்னர் சுழல் பந்து பயிற்சியாளராக கடமையாற்றி வருகின்றார்.

இலங்கை கிரிக்கெட் நிருவாகம் உள்நாட்டு நபர் ஒருவருக்கு சுழற்பந்து பயிற்சியாளர் பதவியினை வழங்கும் எனில், இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களுக்கு பயிற்சி வழங்கிய அனுபவத்தினைக் கொண்டிருக்கும் பண்டாரதிலக்க கருத்தில் கொள்ளப்பட வேண்டிய நபர்களில் ஒருவராக உள்ளார்.

அஜித் ஏக்கநாயக்க

முன்னர் குறிப்பிட்ட பண்டாரதிலக்க போன்ற ஒரு அனுபவத்தினைக் கொண்டிருக்கும் சுழற்பந்து பயிற்சியாளராக அஜித் ஏக்கநாயக்கவும் காணப்படுகின்றார். ஏக்கநாயக்க விளையாடும் காலத்தில் இலங்கையின் உள்ளூர் போட்டிகளில் பிரம்மிக்க வைக்கும் விதமான பதிவுகளை காட்டியிருந்த போதிலும், அவருக்கு தேசிய அணிக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

கிட்டத்தட்ட 600க்கும் மேலான முதல்தர விக்கெட்டுக்களை வீழ்த்தியிருக்கும் ஏக்கநாயக்க, இலங்கையின் கனிஷ்ட அணிகளுக்கு பயிற்சியாளராக செயற்பட்டிருக்கின்றார். இலங்கை கிரிக்கெட் சபை, தமது சுழல் பயிற்சியாளர்களுக்கான தேடல் பட்டியலில் இவரையும் இணைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுனில் ஜோஷி

இந்தியாவினைச் சேர்ந்த முன்னாள் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான சுனில் ஜோஷி, சுழற்பந்து பயிற்றுவிப்புத்துறையில் தேர்ச்சி மிக்க ஒருவர். ஹத்துருசிங்க பங்களாதேஷ் அணியின்  தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த காலப்பகுதியில் இவர் பங்களாதேஷ் அணிக்கான சுழற்பந்து ஆலோசகராக  கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்காக 1996ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமான இவர் 15 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 69 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 110 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருந்தார். தொடர்ந்து 2011ஆம் ஆண்டு முதல்தரப் போட்டிகளில் விளையாடுவதை நிறுத்திக்கொண்ட ஜோஷி 160 போட்டிகளில் ஆடி, மொத்தமாக  615 விக்கெட்டுக்களை சாய்த்திருகின்றார்.

ஆஸியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு எழுவர் போட்டி

தென்னாபிரிக்காவுக்கு எதிராக கடந்த மாதம் கேப்டவுனில் நடைபெற்ற 3ஆவது டெஸ்ட் …

கிரிக்கெட் வீரர் என்ற அத்தியாயத்தை முடித்துக் கொண்ட பின்னர் ஜோஷி ஹைதராபாத், ஐம்மு காஷ்மீர் மற்றும் அசாம் அணிக்களுக்காக பயிற்சியாளராக கடமையாற்றியதோடு,  2016ஆம் ஆண்டு இந்தியாவில் இடம்பெற்ற T20 உலக சம்பியன்ஷிப் போட்டிகளில் ஓமான் அணியின் பந்து வீச்சு ஆலோசகராகவும் செயலாற்றியது குறிப்பிடத்தக்கது.   

டேனியல் வெட்டோரி

நியூசிலாந்து அணிக்கு மிக வெற்றிகரமாக அமைந்த சுழல் வீரர்களில் ஒருவரான டேனியல் வெட்டோரி, இலங்கை அணியின் சுழல் பந்து பயிற்சியாளருக்கு தகுதியுடைய ஏனைய நபர்களில் ஒருவராக இருக்கின்றார். பிக் பாஷ் லீக் போட்டிகளில் ஆடும் பிரிஸ்பேன் அணிக்கு 2015ஆம் ஆண்டு முதல் மூன்று வருட ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு தலைமை பயிற்சியாளராக செயற்பட்டு வரும் வெட்டோரி அதன் பின்ன் .பி.எல். தொடரில் றோயல் செலஞ்சர்ஸ் அணிக்கும், இங்கிலாந்தின் T20 பிளாஸ்ட் தொடரில் மிடில்செக்ஸ் அணிக்கும் தலைமை பயிற்சியாளராக ஒப்பந்தமாகியது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்டின் மூன்று வகைப் போட்டிகளிலும் போதியளவு அனுபவத்தினைக் கொண்டிருக்கும் வெட்டோரி இலங்கை அணியில் இணைவது வரப்பிரசாதமாகவே அமையும்.  

இவர்களில் இலங்கை அணிக்கு சுழல் பந்து வீச்சளாராக யார்? வர முடியும் உங்களது கருத்துக்களை கீழே பதிவிடுங்கள்.