சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T-20 தொடரினால் இலங்கைக்கு 100 கோடி ரூபா வருமானம்

954

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 70ஆவது தேசிய சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளசுதந்திரக் கிண்ணம்‘ (நிதஹஸ் குசலான) முத்தரப்பு T-20 தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

[rev_slider LOLC]

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ள இத்தொடரின் மூலமாக ஒரு பில்லியன் ரூபா(1000 மில்லியன் அல்லது 100 கோடி) வருமானத்தைப் பெற்றுக்கொள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எதிர்பார்த்துள்ளதாக அதன் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T-20 தொடருக்காக பங்களாதேஷுக்கு அழைப்பு

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும்..

சுதந்திரக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள உத்தியோகபூர்வ அனுசரணையாளர்களை அறிமுகப்படுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று(08) கொழும்பு ஜெய்க் ஹில்டன் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே திலங்க சுமதிபால இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

”இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படவுள்ள முத்தரப்பு T-20 தொடரின் ஊடாக சுமார் ஒரு பில்லியன் ரூபா வருமானத்தைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம். தற்போது இதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. இதற்கு முன் முத்தரப்பு போட்டித் தொடரொன்றை நடத்தி இலங்கை கிரிக்கெட் சபை அவ்வாறான மிகப் பெரிய வருமானத்தை பெற்றுக்கொள்ளவில்லை. இதுதான் இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் முத்தரப்பு போட்டித் தொடரொன்றின் மூலமாகப் பெற்றுகொள்ளும் மிகப் பெரிய வருமானமாகவும் அமையவுள்ளது.  

இவ்வாறான போட்டித் தொடர்களை நாம் ஒவ்வொரு வருடமும் நடத்த வேண்டும். அதன்மூலம் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளுக்கிடையிலான இடைவெளி குறைக்கப்படும். குறிப்பாக வீரர்களும் இதன்மூலம் அதிக வருமானங்களைப் பெற்றுக்கொள்வர். எனவே, இந்த வருமானத்தினை உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளின் வளர்ச்சிக்கான முதலீடாக பயன்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

அத்துடன், இந்த வருமானத்தினைப் பயன்படுத்தி நீண்டகாலமாக நடைபெறாமல் பிற்போடப்பட்ட ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் T-20 தொடரை இவ்வருடத்திலிருந்து மீண்டும் ஆரம்பிப்பதற்கான அடித்தாளத்தை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம். அதன்மூலம் இலங்கைக்கு வெளியிலும் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புச் செய்து இன்னும் அதிகளவான வருமானத்தைப் பெற்றுக்கொள்வதற்கான திட்டங்களையும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது” என தெரிவித்தார்.

பங்களாதேஷ் அணிக்கெதிரான இலங்கை T-20 குழாம் அறிவிப்பு

பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 போட்டிகளைக் கொண்ட..

இந்த வேலைத்திட்டத்திற்காக விளையாட்டு விற்பனைதாரர்களில் உலகின் முதன் நிலை நிறுவனமாக விளங்குகின்ற சிங்கப்பூரைச் சேர்ந்த லகாடியர் நிறுவனத்தின் ஒத்துழைப்பு எமக்கு கிடைத்துள்ளது. அதேநேரம் முத்தரப்பு T-20 தொடரிற்கான ஒளிபரப்பு உரிமத்தை இந்தியாவின் டிஸ்போர்ட்ஸ் நிறுவனமும், பங்களாதேஷின் செனல் – 9 நிறுவனமும் பெற்றுக்கொண்டுள்ளது. அத்துடன், மைதானத்திற்குள் மேற்கொள்ளவுள்ள சகல விளம்பரங்களையும் சர்வதேச மட்டத்திலான விளம்பரங்களை மேற்கொள்கின்ற .டீ.டபிள்யு நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது.  

அதுமாத்திரமின்றி, இம்முறை போட்டித் தொடரை உலகின் பல்வேறு பாகங்களிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும் நேற்றைய ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்த திலங்க ”இவ்வாறான ரசிகர்கள் எமக்கு இதற்கு முன்னர் கிடைக்கவில்லை. எனவே இதுவும் எமது கிரிக்கெட்டில் இடம்பெறவுள்ள மற்றுமொரு மைல்கல்லாக அமையவுள்ளது” என்றார்.

இதன்படி, சுதந்திர கிண்ண முத்தரப்பு T-20 தொடரை இணையத்தளம் வாயிலாக சுமார் 150இற்கும் மேற்பட்ட நாடுகளில் நேரடியாக ஒளிபரப்புச் செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்பைடர் கெமரா, ட்ரோன் கெமரா உட்பட அக்மண்ட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் தளத்திற்கு கிரிக்கெட்டை எடுத்துச் செல்லவும் திட்டமிடப்படிருக்கின்றது.

மாலிங்க ஓய்வு பற்றி சூசகம்

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து நட்சத்திரம் லசித்..

கிரிக்கெட் போட்டிகளை விற்பனை செய்வதில் இலங்கை மிகவும் பின்தங்கிய நாடாகவே காணப்படுகின்றது. இதற்கு முக்கிய காரணமாக இலங்கையின் சனத்தொகையை(20 மில்லியன்) குறிப்பிட முடியும். உலக சனத்தொகையின் படி உலகின் அதிகளவு மக்களைக் கொண்ட 2ஆவது நாடாக விளங்குகின்ற இந்தியாவில் 1.33 பில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதேபோல உலக சனத்தொகையில் 8ஆவது இடத்தில் உள்ள பங்களாதேஷில் 164 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் 20 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கை உலக சனத்தொகை பட்டியலில் 58ஆவது இடத்தையே வகிக்கின்றது. இதுதான் எமது கிரிக்கெட்டை விற்பனை செய்ய முடியாமல் போனமைக்கான பிரதான காரணமாக அமைந்துள்ளது என்றும் கிரிக்கெட் சபையின் தலைவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ”இம்முறை நடைபெறவுள்ள முத்தரப்பு தொடருக்கு இதுவரை எமக்கு சுமார் 30 நிறுவனங்களிடமிருந்து மேலதிக பணம் கிடைக்கப் பெற்றுள்ளது. இவ்வளவு அதிகளவான அனுசரணையாளர்களை ஒரே கூரையின் கீழ் கொண்டுவருவதென்பது இலகுவான விடயமல்ல. இவர்கள் உலகின் முதல்தர விளம்பர முகவர்களாக வலம்வந்து கொண்டிருக்கின்றனர். அதேபோல இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு அவர்கள் இலகுவில் வருவதும் இல்லை. வந்தால் தொடர்ந்து இருப்பதும் இல்லை. ஆனால் அவ்வாறான நிறுவனங்கள் இலங்கைக்கு வந்தால் மாத்திரம் தான் எமது வருமானம் பாதுகாக்கப்படும். எனவே, எமக்கு கிடைத்துள்ள அனுசரணையாளர்கள் குறித்து நாம் மிகவும் திருப்தியடைகின்றோம். மேலும் இத்தொடருக்கான பிரதான அனுசரணையாளராக ஹீரோ மோட்டார்கோப் நிறுவனம் செயற்படவுள்ளது” என்றார்.

இப்போட்டித் தொடருக்கான கூட்டு அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் மூன்று நாடுகளினதும் கிரிக்கெட் சபைகளின் தலைவர்களின் பங்கேற்புடன் கொழும்பில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் வைத்து அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முத்தரப்பு T-20 தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணிக்கான உத்தியோகபூர்வ அழைப்பினை இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற 3ஆவது ஒரு நாள் போட்டிக்கு முன்னர் இலங்கை T-20 அணியின் தலைவராகச் செயற்பட்ட திஸர பெரோ விடுத்திருந்தார்.  

இதனையடுத்து, சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T-20 தொடரில் பங்கேற்கவுள்ள பங்களாதேஷ் அணிக்கான உத்தியோகபூர்வ அழைப்பினை இலங்கை ஒரு நாள் மற்றும் T-20 அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், அண்மையில் நிறைவுக்கு வந்த பங்களாதேஷ், ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒரு நாள் போட்டித் தொடரின் போது விடுத்திருந்தார்.  

7 போட்டிகளைக் கொண்டதாக நடைபெறவுள்ள இப்போட்டித் தொடரில் விளையாடும் மூன்று அணிகளும் தங்களுக்குள் இரண்டு முறை மோதவுள்ளன. இதில் வெற்றி பெற்று முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.

டெஸ்ட் விளையாடும் இளம் வீரர்களுக்காக களத்தில் குதித்த சங்கக்கார

டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த..

முன்னதாக, இலங்கையின் 50ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 1998ஆம் ஆண்டு சுதந்திரக் கிண்ணம் என்ற பெயரில் முதற்தடவையாக கிரிக்கெட் தொடரொன்று தற்போதைய கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவின் யோசனைக்கமைய ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பங்கேற்றிருந்தன. அதன் இறுதிப் போட்டியில் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணியை, 6 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அதுமாத்திரமின்றி, இலங்கை சுதந்திரமடைந்து 70 வருடங்கள் பூர்த்தியாtதைப் போல, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஸ்தாபிக்ப்பட்டு இவ்வருடத்துடன் 70 வருடங்கள் பூர்த்தியாகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.