இலங்கையின் ஆரம்பகால டெஸ்ட் வீரர்களுக்கு முதற்தடவையாக ஓய்வூதியம்

318

கடந்த 1981ஆம் ஆண்டு இலங்கைக்கு டெஸ்ட் அந்தஸ்த்து கிடைக்க முன்னர் தேசிய அணிக்காக விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் 9 பேருக்கு நேற்றைய தினம் (05) விசேட ஓய்வூதியக் கொடுப்பனவு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களை கௌரவிக்கவுள்ள இலங்கை கிரிக்கெட் சபை

விளையாட்டுத் துறை அமைச்சர் பைசர் …

விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் டாக்டர் எச்..கே பெர்னாண்டோ, தயா சஹபந்து, அமித கொஸ்தா, எம். தேவராஜ், டீ.பீ கெஹெல்கமுவ, என். கொடித்துவக்கு, .சி.எம் லாபிர், ரன்ஞன் குணதிலக்க மற்றும் லசந்த ரொட்ரிகோ உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு இவ்வாறு ஓய்வூதிய கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டன.

விளையாட்டுத் துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் ஆலோசனைப்படி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டத்துக்காக 65 வயதுக்கு மேற்பட்ட 12 முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் இந்த ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்.

தேர்வு செய்யப்படும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் மாதாந்தம் 25,000 ரூபா ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. எனினும், குறித்த 25,000 ரூபா கொடுப்பனவு ஒரு வருடத்துக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ள அதேநேரம், ஒவ்வொரு வருடமும் இலங்கை கிரிக்கெட் நிர்வகாத்தின் விருப்பத்திற்கு அமைய மீண்டும் புதுப்பிக்கடவுள்ளது. அத்துடன் குறித்த வீரர்கள் அனைவருக்கும் மருத்துவ கொடுப்பனவாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும் வழங்கப்படவுள்ளது.

ஆசிய கிண்ணமும் லசித் மாலிங்கவின் அசத்தல் பந்து வீச்சும்

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் …

இதேநேரம், வெளிநாட்டில் தற்போது வசித்து வருகின்ற வீரர்களுக்கு இந்த ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விசேட நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பொறுப்புமிக்க அதிகாரியாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஓய்வூதிய கொடுப்பனவுக்காக தெரிவு செய்யப்பட்ட முன்னாள் வீரர்கள்

ரன்ஞன் குணதிலக்க, அமித கொஸ்தா, எஸ், தேவராஜ், டாக்டர். எச்..கே பெர்னாண்டோ, ரசல் ஹாமர், ஸ்டென்லி ஜயசிங்க, டீ,பீ கெஹெல்கமுவ, நிஹால் கொடித்துவக்கு, .சி.எம் லாபிர், குலாம் ராசிக், லசன்த ரொட்ரிகோ, தயா சஹபந்து, டெனிஸ் சண்முகம், ஹேமன்த தேவப்பிரிய, ரன்த்ரா பெர்னாண்டோ, பேர்னார்ட் ருலாச், ஜெர்ரி வவுட்டர்ஸ், டீ. புஹார், ஸ்டென்லி அல்விஸ், மெல்கம் பிரென்கி, ரொனால்ட் ரீட், சீ.டீ. சாப்டர், டாக்டர். சீ. பாலகிருஷ்ணன், எப். குரொசியர், டீ.பீ சில்வா, ரன்ஜித் பெர்னாண்டோ, லயனல் பெர்னாண்டோ, எல்.ஆர் குணதிலக்க, கீர்த்தி குணரத்ன, நிர்மால் ஹெட்டியாரச்சி, டேவிட் ஹயின், கிளைவ் இன்மன், டெரல் லிவர்ஸ், பிரையன் ஒபேசேகர, .ஆர்.எம் ஓபான, ஜயன்த பரனதால, மெவன் பீரிஸ், டி. பீச்சவூட், அநுருத்த பொலன்னோவிட, மனோ பொன்னய்யா, எஸ்.ராஜபக்ஷ, டாக்டர். படீ ரீட், ஜே. செனவிரத்ன, அநுர தென்னகோன், பி.டபிள்யூ.ஆர் தோமஸ், மைக்கல் திசேரா, டீ. வீரசிங்க, டாக்டர். சிறில் ஆர்னல்ட் மற்றும் டாக்டர். சரத் விமலரத்ன

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…