LPL டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்வது எப்படி?

Lanka Premier League 2021

414

இலங்கையில் இன்று (05) ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பிலான அறிவித்தலை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ரசிகர்கள் கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை தலைமை காரியாலயத்தில் இன்று முதல் (05) தினமும் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 05.00 மணிவரை டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கை அணியை தடுமாற்றத்திலிருந்து மீட்ட தனன்ஜய, எம்புல்தெனிய

LPL தொடருக்கான டிக்கெட்டுகள் 300 ரூபாவிலிருந்து 1000, 2000, 3000 மற்றும் 5000 ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்படும். அதேநேரம், ரசிகர்கள் Bookmyshow.com மற்றும் Daraz.lk இணையத்தளங்கள் மூலமாகவும் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்கள் மாத்திரமே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவர். இதில், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருக்க வேண்டும் என்பதுடன், குறைந்தது இரண்டாவது தடுப்பூசியை பெற்று 14 நாட்கள் கடந்திருக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, முதல் போட்டிக்கான டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளும் ரசிகர்கள் பிற்பகல் 4.00 மணிக்கு மைதானத்துக்கு அனுமதிக்கப்படுவர். குறிப்பாக, ஆரம்ப நிகழ்வுகள் பிற்பகல் 6.00 மணிக்கு நடைபெறவுள்ளமையால், ரசிகர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<