Home Tamil முதல் போட்டியில் வெற்றி பெற்ற SLC ரெட்ஸ் அணி

முதல் போட்டியில் வெற்றி பெற்ற SLC ரெட்ஸ் அணி

270

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), ஒழுங்கு செய்துள்ள அழைப்பு T20 தொடரின் முதல் போட்டியில் SLC ரெட்ஸ் அணி கிரேய்ஸ் அணியினை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தி தொடரினை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது.

SLC அழைப்பு T20 தொடரை பார்வையிட இலவச அனுமதி!

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களை ஆசியக் கிண்ணம் மற்றும் T20I உலகக் கிண்ணம் என்பவற்று தயார்படுத்தும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள அழைப்பு T20 தொடரின், முதல் போட்டி இன்று (08) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியது.

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற குசல் மெண்டிஸ் தலைமையிலான ரெட்ஸ் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை கிரேய்ஸ் வீரர்களுக்கு வழங்கியது.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய கிரேய்ஸ் அணி அசித பெர்னாண்டோ, மகீஷ் தீக்ஷன மற்றும் மதீஷ பத்திரன ஆகியோரின் பந்துவீச்சுக்கு தடுமாறி தமது விக்கெட்டுக்களை பறிகொடுத்ததோடு 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்கள் எடுத்தது.

கிரேய்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் முன்வரிசை வீரர்கள் சொதப்பியிருக்க மத்திய வரிசையில் ஆடிய மொவின் சுபாசிங்க மாத்திரம் பொறுப்பான முறையில் 25 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பெளண்டரி அடங்கலாக 32 ஓட்டங்கள் எடுத்தார்.

இதேநேரம் ரெட்ஸ் அணியின் பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, மதீஷ பத்திரன மற்றும் மகீஷ் தீக்ஷன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டினர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்யணயிக்கப்பட்ட 121 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ரெட்ஸ் அணி போட்டியின் வெற்றி இலக்கினை வெறும் 16.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களுடன் அடைந்தது.

த ஹன்ட்ரட் தொடரில் விளையாடும் வாய்ப்பினை இழக்கும் வனிந்து

ரெட்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அரைச்சதம் தாண்டிய லசித் குரூஸ்புள்ளே 44 பந்துகளில் 8 பெளண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் குசல் மெண்டிஸ் 30 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் அடங்கலாக 34 ஓட்டங்கள் பெற்றார்.

கிரேய்ஸ் அணியின் பந்துவீச்சில் அகில தனன்ஞய 2 விக்கெட்டுக்களைச் சாய்த்த போதும் அவரது பந்துவீச்சு வீணாகியது.

போட்டியின் சுருக்கம்


Result


Greys
120/9 (20)

Reds
121/4 (16.5)

Batsmen R B 4s 6s SR
Ashan Randika c & b Maheesh Theekshana 20 23 2 0 86.96
Thanuka Dabare c Matheesha Pathirana b Asitha Fernando 5 4 1 0 125.00
Sanegeeth Cooray c Wanindu Hasaranga b Asitha Fernando 4 2 1 0 200.00
Ashan Priyanjan c Lasith Croospulle b Asitha Fernando 4 7 0 0 57.14
Minod Bhanuka c Bhanuka Rajapakse b Matheesha Pathirana 2 7 0 0 28.57
Muditha Lakshan c Lasith Croospulle b Matheesha Pathirana 24 35 2 0 68.57
Movin Subasingha c Wanindu Hasaranga b Kalana Perera 32 25 1 2 128.00
Pulina Tharanga not out 16 14 0 0 114.29
Lakshan Gamage c Asitha Fernando b Maheesh Theekshana 0 1 0 0 0.00
Akila Dananjaya b Asitha Fernando 2 3 0 0 66.67
Milan Rathnayake not out 1 1 0 0 100.00


Extras 10 (b 4 , lb 1 , nb 2, w 3, pen 0)
Total 120/9 (20 Overs, RR: 6)
Bowling O M R W Econ
Matheesha Pathirana 4 0 16 2 4.00
Asitha Fernando 4 0 22 4 5.50
Kalana Perera 3 0 17 1 5.67
Matheesha Pathirana 3 0 16 2 5.33
Wanindu Hasaranga 4 0 26 0 6.50
Dunith wellalage 2 0 18 0 9.00


Batsmen R B 4s 6s SR
Lasith Croospulle run out (Muditha Lakshan) 54 44 8 0 122.73
Kusal Mendis st Minod Bhanuka b Akila Dananjaya 34 30 0 3 113.33
Bhanuka Rajapakse lbw b Akila Dananjaya 4 6 0 0 66.67
Kamindu Mendis c Ashan Priyanjan b Pulina Tharanga 15 14 1 0 107.14
Wanindu Hasaranga not out 3 2 0 0 150.00
Sahan Arachchige not out 2 5 0 0 40.00


Extras 9 (b 0 , lb 3 , nb 0, w 6, pen 0)
Total 121/4 (16.5 Overs, RR: 7.19)
Bowling O M R W Econ
Muditha Lakshan 2 0 10 0 5.00
Lakshan Gamage 1 0 18 0 18.00
Thanuka Dabare 1.5 0 9 0 6.00
Milan Rathnayake 1 0 11 0 11.00
Akila Dananjaya 4 0 36 2 9.00
Pulina Tharanga 3 0 18 1 6.00
Ashan Priyanjan 4 0 16 0 4.00



முடிவு – SLC ரெட்ஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<