2016/17ஆம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கெட் சபையின் பருவகால உள்ளூர் போட்டிகளான பிரிமியர் லீக் முதல் தர கிரிக்கெட் போட்டிகள் நவம்பர் மாதம் 25ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறிப்பிட்ட இந்த பருவகால போட்டிகள், மூன்று நாட்கள் கொண்ட போட்டிகளாக இடம்பெறுவதுடன், 24 அணிகள் பங்குபற்ற உள்ளன. குறிப்பிட்ட போட்டிகள் A, B என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடைபெறவுள்ளன.

A பிரிவில் 14 அணிகள் உள்வாங்கப்பட்டு அவை ஏழு அணிகளைக் கொண்ட இரண்டு குழுக்களாக தெரிவுசெய்யப்படும். குறிப்பிட்ட குழு மட்டத்தில் முன்னிலை வகிக்கும் முதல் நான்கு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தெரிவு செய்யப்படும். சூப்பர் 8 சுற்று நான்கு நாட்கள் கொண்ட போட்டியாக நடைபெறுவதுடன், இப்போட்டிகளின் போது இளம் சிவப்பு பந்து உபயோகிக்கப்பட இருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும்.

எஞ்சிய ஆறு அணிகளும் தட்டுக்கான (Plate) போட்டிகளில் பங்குபற்றுகின்றன. இப்போட்டிகள் மூன்று நாட்கள் கொண்ட போட்டியாக நடைபெறுவதுடன், அப்போட்டிகளில் கடைசி இடத்தைப் பெறுகின்ற அணி அடுத்து வரும் பருவகால போட்டிகளில் B பிரிவுக்கு தரமிறக்கப்படுவார்கள்.

பொதுவாக B பிரிவு என்பது, கிரிக்கெட் போட்டிகளில் வளர்ந்து வரும் அணியாக கணிக்கப்படுகிறது. குறிப்பிட்ட இப்போட்டிகளில் 10 அணிகள் பங்குபற்றுவதோடு மூன்று நாட்கள் கொண்ட லீக் போட்டியாக நடைபெறும். இப்போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெறும் அணி அடுத்து வரும் பருவகால போட்டிகளில் A பிரிவுக்கு தரமுயர்த்தப்படுவார்கள்.

பிரிமியர் லீக் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகள் மேற்கூறிய 24 அணிகளின் பங்குபற்றுதலோடு 2017ஆம் ஆண்டு ஆரம்பத்தில் நடைபெறவிருக்கிறது. பிரிமியர் சூப்பர் 8 போட்டிகள் மற்றும் தட்டுக்கான (Plate) போட்டிகள் ஜனவரி மாதம் 14ஆம் திகதி நடைபெறும், அதே சமயத்தில் B பிரிவு போட்டிகள் அனைத்தும் ஜனவரி மாதம் 22ஆம் திகதி நிறைவுபெறவிருக்கிறது.

A பிரிவுடன் நடாத்தப்படும் செகண்ட் இலவன் போட்டிகள் இந்த முறை பருவகால போட்டிகளிலிருந்து அகற்றப்பட்டுள்ளதுடன் பங்குபெறும் அனைத்து 24 கிரிக்கெட் கழகங்களுக்கும் முதல்தர அந்தஸ்து வழங்கப்படவுள்ளது.

பிரிமியர் லீக் 2016/17 பிரிவு A அணிகளின் விபரம்

குழு ‘A’ குழு ‘B’
Tamil Union C & AC Moors Sports Club
Galle Cricket Club Ragama Cricket Club
Singhalese Sports Club Colts Cricket Club
Nondescripts Cricket Club Colombo Cricket Club
Bloomfield C & AC Saracens Sports Club
Chilaw Marians CC Army Sports Club
Badureliya Cricket Club Burger Recreation Club
CLICK HERE for Tier ‘A’ Fixtures

கடந்த பருவகால லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம், கடந்த பருவகால லீக் போட்டிகளில் நான்கவது மற்றும் ஐந்தாவது இடத்தை முறையே பிடித்த காலி கிரிக்கெட் கழகம் மற்றும் சிங்கள விளையாட்டுக் கழகத்தோடும், 2015/16 ஆம் ஆண்டுக்கான சூப்பர் 8 போட்டிகள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகள் சம்பியனான NCC அணியின் குழுவில் இணைக்கப்பட்டுள்ளது.

கடந்த பருவகால போட்டிகளில் தட்டுக்கான (PLATE) வெற்றியாளர் ப்ளூம் பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகத்துடன், சிலாபம் மேரியன்ஸ் மற்றும் படுரேலிய ஆகிய கிரிக்கெட் கழகங்கள் குழு Aஇல்  இணைக்கப்பட்டுள்ளன.

அதே நேரம் B பிரிவில் கடந்த லீக் போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட மூவர்ஸ் விளையாட்டுக் கழகம் 61 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ள ராகம கிரிக்கெட் கழகத்துடன் கடினமான போட்டியை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.

சூப்பர் 8 போட்டிகளில் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் மற்றும் ccc முறையே 6ஆம் மற்றும் 7ஆம் இடங்களைப் பிடித்திருந்த நிலையில், கடந்த ஆண்டு கழகங்களுக்கு இடையிலான இருபதுக்கு இருபது போட்டி வெற்றியளர்களான இலங்கை இராணுவ அணியுடன் மோதவுள்ளனர். சரசன்ஸ் விளையாட்டு கழகம் B பிரிவில் எந்நேரமும் மீள் எழுச்சியடையக் கூடிய அணியாக இருக்கும் அதே நேரம் புதிதாக தரவுயர்வு பெற்ற BRC கழகம் இம்முறை பல உள்ளூர் முன்னணி வீரர்களுடன் களமிறங்குகிறது.

பிரிமியர் லீக் 2016/17 பிரிவு B அணிகளின் விபரம்

Teams
SRI LANAKA PORTS AUTHORITY SC
NAVY SPORTS CLUB
AIR FORCE SPORTS CLUB
KURUNEGALA YCC
LANKAN CRICKET CLUB
KALUTARA TOWN CLUB
POLICE SPORTS CLUB
KALUTARA PCC
PANADURA SPORTS CLUB
NEGOMBO CRCKET CLUB
CLICK HERE for Tier ‘B’ Fixtures

2014/15ஆம் ஆண்டு பிரிமியர் லீக் தொடரை வென்ற இலங்கை துறைமுக அதிகார சபை விளையாட்டுக் கழகம், தட்டுக்கான (PLATE) போட்டிகளில் இறுதி இடத்தைப் பெற்றுக்கொண்டமையினால் B பிரிவுக்கு தரமிறக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் பி. சாரா போட்டிகளில் வெற்றிகொண்டமயினால் B பிரிவுக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.

பாணதுற விளையாட்டு கழகம், லங்கன் கிரிக்கெட் கழகம் மற்றும் கடற்படை விளையாட்டு கழகம் போன்ற அணிகள் B பிரிவு போட்டிகளில் வலிமை மிக்க அணிகளாகத் திகழ்கின்றன.

கழகங்களுக்கு இடையிலான போட்டிகள் முடிவடைந்தபின், 2016/17ஆம் ஆண்டுக்கான, நான்கு அணிகள் பங்குபற்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் மாகாணங்களுக்கிடையிலான 4 நாட்கள் கொண்ட லீக் போட்டிகள், ஒருநாள் போட்டிகள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகள் நடைபெறவுள்ளன.