இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18 உள்ளூர் பருவ காலத்திற்கான ப்ரீமியர் லீக் B நிலை தொடரின் நான்கு போட்டிகள் இன்று நிறைவடைந்தன.
காலி கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்
துலாஜ் உதயங்கவின் சதத்தின் உதவியோடு காலி கிரிக்கெட் கழகம் நிர்ணயித்த 212 ஓட்ட வெற்றி இலக்கை அடைந்து, விமானப்படை விளையாட்டுக் கழகம் 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.
கட்டுநாயக்க, விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் காலி அணி முதல் இன்னிங்ஸில் 65 ஓவர்களில் 178 ஓட்டங்களையும் விமானப்படை 51.3 ஓவர்களில் 163 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் பரபரப்பு பெற்றது.
தவான், ஐயர் ஆகியோரின் சிறப்பாட்டத்தோடு ஒரு நாள் தொடர் இந்தியா வசம்
சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு..
இந்நிலையில் காலி கிரிக்கெட் கழகம் இரண்டாவது இன்னிங்ஸில் 196 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்ததால் விமானப்படை அணிக்கு இலகுவான வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அபாரமாக துடுப்பாடி துலாஜ் உதயங்க ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களைப் பெற்று விமானப்படை அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
போட்டியின் சுருக்கம்
காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 178 (65) – சானக்க விஜேசிங்க 36, டில்ஷான் காஞ்சன 28, ரவீன் சயெர் 21, சொஹான் ரங்கிக்க 5/47, மிலான் ரத்னாயக்க 2/30
விமானப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 163 (51.3) – ரொஸ்கோ தட்டில் 35, புத்திக்க சந்தருவன் 31*, உதயவன்ஷ பராக்ரம 28, லக்ஷான் பெர்னாண்டோ 28, ராஜித பிரியன் 3/33, கயான் சிறிசோம 3/50
காலி கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 196 (70.2) – சானக்க விஜேசிங்க 51, ரவீன் சயெர் 36, லசித் பெர்னாண்டோ 35, சஜித் பிரியன் 23, சுபுன் விதானாரச்சி 20, சரித் புத்திக 20, திலிப் தாரக்க 3/24, சொஹான் ரங்கிக்க 3/63, புத்திக்க சந்தருவன் 2/27
விமானப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 212/6 (67.2) – துலாஜ் உதயங்க 100*, ராஜு கயஷான் 39, திலிப் தாரக 31, சரித புத்திக்க 3/24, கயான் சிறிசோம 2/58
முடிவு – விமானப்படை விளையாட்டுக் கழகம் 4 விக்கெட்டுகளால் வெற்றி
குருநாகல் யூத் கிரிக்கெட் கழகம் எதிர் கடற்படை விளையாட்டு கழகம்
முதல் இன்னிங்ஸில் பெற்ற இமாலய ஓட்டங்களின் உதவியுடன் குருநாகல் யூத் அணிக்கு எதிரான போட்டியில் கடற்படை விளையாட்டுக் கழகம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகு வெற்றி பெற்றது.
வெலிசறை, கடற்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் குருநாகல் யூத் கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்சுக்காக 83.2 ஓவர்களில் 253 ஓட்டங்களைப் பெற்ற போதும் கடற்படை அணி குசல் எதுசூரியவின் சதத்தின் உதவியோடு முதல் இன்னிங்ஸில் 91.1 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 402 ஓட்டங்களைப் பெற்றது. இந்நிலையில் ஆட்டத்தின் கடைசி நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த குருநாகல் யூத் இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்த்தபோதும் 69.1 ஓவர்களில் 202 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 54 ஓட்ட வெற்றி இலக்கை கடற்படை விளையாட்டுக் கழகம் 2 விக்கெட்டுகளை இழந்து அடைந்தது.
போட்டியின் சுருக்கம்
குருநாகல் யூத் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 253 (83.2) – ஹஷான் பிரபாத் 84, ருவன்த ஏகனாயக்க 43, கல்ஹான் சினெத் 26*, சுதார தக்ஷின 3/49, குசல் எடுசூரிய 2/27, நுவன் சம்பத் 2/60
கடற்படை விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 402/9d (91.1) – குசல் எடுசூரிய 104, சுபுன் லீலரத்ன 67, இஷான் அபேசேகர 62*, அசித் வீரசூரிய 39, தரூஷன் இத்தமல்கொட 35, மொஹமட் அல்பர் 25, துசித டி சொய்சா 8/137
குருநாகல் யூத் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 202 (69.1) – தமித் பெரேரா 65, ருவந்த ஏக்கனாயக்க 49, ஹஷான் பிரபாத் 31, சுதார தக்ஷின 3/57, இஷான் அபேசேகர 3/47, துஷான் இஷார 2/27
கடற்படை விளையாட்டு கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 54/2 (11.4) – ஆசிரி சில்வா 27
முடிவு – கடற்படை விளையாட்டு கழகம் 8 விக்கெட்டுகளால் வெற்றி
பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டு கழகம்
பொலிஸ் விளையாட்டுக் கழகத்திற்கு 320 ஓட்ட வெற்றி இலக்கை நிர்ணயித்த பாணந்துறை விளையாட்டு கழகம் வெற்றி வாய்ப்பை நெருங்கியபோதும் கடைசி நாள் ஆட்ட நேரம் முடிவதற்கு முன்னர் எதிரணியின் விக்கெட்டுகளை சாய்க்கத் தவறியதால் போட்டி சமநிலையில் முடிந்தது.
இந்தியாவுக்கு எதிரான இலங்கை T20 குழாம் அறிவிப்பு
இந்தியாவுக்கு எதிரான எதிர்வரும் T20 தொடருக்கான…
இந்த போட்டியில் பாணந்துறையின் கஷிப் நவீட் முதல் இன்னிங்சில் சதம் பெற்றதோடு இரண்டாவது இன்னிங்சில் தொடர்ச்சியான சதத்தை 6 ஓட்டங்களால் தவறவிட்டார்.
கொழும்பு பொலிஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சவாலான இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த பொலிஸ் விளையாட்டு கழகம் கடைசி நாள் ஆட்ட நேர முடிவின்போது 33 ஓவர்களுக்கு 118 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.
போட்டியின் சுருக்கம்
பாணந்துறை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 250 (91.2) – கஷீப் நவீட் 111, ஷஷ்ரிக்க புசேகொல்ல 51, விஷ்வ சதுரங்க 38, கல்யான் ரத்னப்ரிய 3/56, நிமேஷ் விமுக்தி 5/62, மஹேஷ் பிரியதர்ஷன 2/46
பொலிஸ் விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 196 (62.1) – அகில லக்ஷான் 87, தரிந்து டில்ஷான் 36, தனுஷிக்க பண்டார 4/68, மொஹமட் ரமீஸ் 3/31, ரசிக்க பெர்னாண்டோ 2/32
பாணந்துறை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 265/7d (77) – விஷ்வ சதுரங்க 41, கஷீப் நவீட் 94, ரசிக்க பெர்னாண்டோ 50, அனுத்தர மாதவ 31*, நிமேஷ் விமுக்தி 3/73, மன்ஜுல ஜயவர்தன 2/46
பொலிஸ் விளையாட்டு கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 118/6 (33) – ஹ்ரிமந்த விஜேரத்ன 29, ரசிக பெர்னாண்டோ 3/26
முடிவு – போட்டி சமநிலையில் முடிவு
நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்
கதிரான கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 323 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பாடிய லங்கன் கிரிக்கெட் கழகம் தனது கடைசி விக்கெட்டைக் காத்துக் கொண்டு போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது.
நீர்கொழும்பு விளையாட்டுக் கழகம் நிர்ணயித்த சவாலான வெற்றி இலக்கை நோக்கி இன்று தனது இரண்டாவது இன்னிங்ச ஆரம்பித்த லங்கன் கிரிக்கெட் கழகம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 128 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது கடைசி நாள் ஆட்ட நேரம் முடிவடைந்தது. லங்கன் அணிக்காக கீத் குமார தனித்து போராடி ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நீர்கொழும்பு அணி சார்பாக பந்துவீச்சில் சனூர பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணிக்கு நெருக்கி கொடுத்தார்.
போட்டியின் சுருக்கம்
நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 223 (74) – பிரமித் பெர்னாண்டோ 51, அமில வீரசிங்க 70, லசித் க்ரூஸ்புள்ளே 20, ரஜீவ வீரசிங்க 5/43, நவீன் கவிகார 4/55
லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 136 (52.1) – சானக்க ருவன்சிறி 37, ச்ஷின் பெர்னாண்டோ 24, துஷிர மதனாயக்க 24, ரவீன் கவிகார 21, ஷெஹான் வீரசிங்க 3/33, சனுர பெர்னாண்டோ 3/41, உமேக சதுரங்க 3/50
நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 236/6d (69.3) – லசித் க்ரூஸ்புள்ளே 63, ஷெஹான் வீரசிங்க 64*, அகீல் இன்ஹாம் 82, துஷிர மதனாயக்க 3/18, சானக்க ருவன்சிறி 2/45
லங்கன் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 128/9 (68) – கீத் குமார 86*, உமேக சதுரங்க 3/39, சனுர பெர்னாண்டோ 4/40
முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவு