இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் 2017/18 ஆம் பருவகாலத்திற்கான உள்ளூர் பிரீமியர் லீக் கிரிக்கெட் A நிலை தொடரில் வெள்ளிக்கிழமை (12) ஆறு போட்டிகள் ஆரம்பமாகின.
கொழும்பு கிரிக்கெட் கழகம் (CCC) எதிர் ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்
சகலதுறை வீரர் சச்சித் பத்திரண பின்வரிசையில் வந்து பெற்ற அதிரடி சதத்தின் மூலம் ப்ளூம்பீல்ட் அணிக்கு எதிராக கொழும்பு கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்ஸில் இமாலய ஓட்டங்களை நெருங்கி வருகிறது.
கோல்ட்ஸ், சோனகர் கழகங்களுக்கு இடையிலான ஆட்டம் சமநிலையில் முடிவு
இரண்டு இன்னிங்சுளிலும் அதிக…
கொழும்பு, ப்ளூம்பீல்ட் மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட கொழும்பு கிரிக்கெட் கழகம் 135 ஓட்டங்களுக்கு முதல் 5 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தபோதும் 6 ஆவது விக்கெட்டுக்கு சச்சித் பத்திரண மற்றும் மாதவ வர்ணபுர ஆகியோர் 231 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். அபாரமாக ஆடிய சச்சித் பதிரண முதல்தர போட்டிகளில் தனது 3ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.
அதிரடியாக ஆடிய அவர் 118 பந்துகளில் 18 பௌண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 168 ஓட்டங்களை பெற்றார். வர்ணபுர 83 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது உள்ளார்.
சீரற்ற காலநிலையால் முதல் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிவுறும்போது கொழும்பு கிரிக்கெட் கழகம் 6 விக்கெட்டுகளை இழந்து 380 ஓட்டங்களை பெற்றுள்ளது.
போட்டியின் சுருக்கம்
CCC (முதல் இன்னிங்ஸ்) – 380/6 (75) – சச்சித் பத்திரண 168, மாதவ வர்ணபுர 83*, லசித் அபேரத்ன 25, கவீன் பண்டார 24, ரொன் சந்திரகுப்தா 20, ரமேஷ் மெண்டிஸ் 2/84, மலித் டி சில்வா 2/87
இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்
பதுரெலிய விளையாட்டுக் கழகத்தின் நட்ராஸ் பிரசாத் மற்றும் டில்ஷான் குணரத்னவின் பந்துவீச்சுக்கு முன் இலங்கை இராணுவப்படை அணி முதல் இன்னிங்ஸில் 152 ஒட்டங்களுக்கு சுருண்டது.
மக்கொன, சர்ரே மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இராணுவப்படை அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழல் வீரர் பிரசாத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு குணரத்ன 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பதுரெலிய விளையாட்டுக் கழகம் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 35 ஓட்டங்களை பெற்றுள்ளது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 152 (51) – அஷான் ரன்திக்க 30, ஜனித் சில்வா 27*, டில்ஷான் டி சொய்சா 24, நட்ராஸ் பிரசாத் 5/41, டில்ஷான் குணரத்ன 4/36
பதுரெலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 35/0 (13) – பதும் நிஸ்ஸங்க 19*
சுஹங்கவின் சதத்தோடு நாலந்த கல்லூரிக்கு இன்னிங்ஸ் வெற்றி
19 வயதின் கீழான டிவிஷன் – I பாடசாலை…
தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்
தனஞ்சய டி சில்வா மற்றும் பின்வரிசை வீரர்களின் நிதான ஆட்டத்தின் மூலம் சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு எதிராக தமிழ் யூனியன் அணி முதல் இன்னிங்ஸில் வலுவான ஓட்டங்களை பெற்றுள்ளது.
கொழும்பு, பி சரா ஓவல் மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தமிழ் யூனியன் கழகம் 21 ஓட்டங்களுக்கே முதல் மூன்று விக்கெட்டுகளையும் இழந்த போதும் தனஞ்ச டி சில்வா 71 ஓட்டங்களை பெற்றதோடு பின் வரிசையில் யொஹான் மெண்டிசும் (61) அரைச்சம் ஒன்றை எடுத்தார்.
இதன்மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவின்போது தமிழ் யூனியன் அணி 296 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
போட்டியின் சுருக்கம்
தமிழ் யூனியன் (முதல் இன்னிங்ஸ்) – 296/9 (79) – தனஞ்சய டி சில்வா 72, யொஹான் மெண்டிஸ் 61, ரங்கன ஹேரத் 45, ஜீவன் மெண்டிஸ் 42, ரமித் ரம்புக்வெல்ல 22, அசித பெர்னாண்டோ 3/45, சச்சித்ர சேரசிங்க 3/68, ஷெஹான் ஜயசூரிய 2/76
NCC எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்
கட்டுநாயக்க, சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் ஆரம்பித்த இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சொற்ப ஓட்டங்களுக்கு சுருண்ட NCC அணி இலங்கை துறைமுக அதிகாரசபை அணிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய NCC அணி விக்கெட்டுகளை காத்துக்கொள்ளத் தவறியதால் 220 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன்போது மதுக லியனபதிரனகே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை துறைமுக அதிகாரசபை அணி முதல் நாள் ஆட்டநேர முடியின்போது 85 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறுகிறது.
போட்டியின் சுருக்கம்
NCC (முதல் இன்னிங்ஸ்) – 220 (55.1) – மஹேல உடவத்த 54, லஹிரு குமார 47, அஞ்செலோ பெரேரா 42, மாலிங்க அமரசிங்க 29, லசித் அம்புல்தெனிய 24*, மதுக லியனபதிரனகே 5/52, சானக்க கொமசரு 3/78
இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 85/7 (31)
கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்
பிரியமால் பெரேரா மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் நெருக்கடி நேரத்தில் பெற்ற இணைப்பாட்டத்தின் மூலம் செரசன்ஸ் அணிக்கு எதிராக கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்ஸில் 246 என்ற கௌரவமான ஓட்டங்களை பெற்றது.
இளையோர் உலகக் கிண்ணத்தில் அசத்தவுள்ள இளம் நட்சத்திரங்கள்
2018ஆம் ஆண்டில் நடைபெறுகின்ற…
தனது சொந்த மைதானத்தில் நடைபெறும் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கோல்ட்ஸ் கழகம் 64 ஓட்டங்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் ஆறாவது விக்கெட்டுக்கு பிரியமால் பெரேரா மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஜோடி பெற்ற 150 ஓட்ட இணைப்பாட்டத்தின் மூலம் அந்த அணி 200 ஓட்டங்களை தாண்டியது.
பெரேரா 8 ஓட்டங்களால் அரைச்சதத்தை தவறவிட்டதோடு பெர்னாண்டோ 72 ஓட்டங்களை குவித்தார். அபராமாக பந்துவீசிய ரொஷான் ஜயதிஸ்ஸ 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
போதிய வெளிச்சமின்மையால் இதன் முதல் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிவுற்றது.
போட்டியின் சுருக்கம்
கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 246 (79.3) – பிரியமால் பெரேரா 92, அவிஷ்க பெர்னாண்டோ 72, சதீர சமரவிக்ரம 31, ரொஷான் ஜயதிஸ்ஸ 5/51, சதுர ரன்துனு 3/78, சச்சித்ர பெரேரா 2/48
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 1/0 (2)
ராகம கிரிக்கெட் கழகம் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்
லஹிரு மலிந்த மற்றும் ஜனித் லியனகேவின் சிறப்பாட்டத்தின் மூலம் சோனகர் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக ராகம கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்சுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 358 ஓட்டங்களை குவித்துள்ளது.
கொழும்பு, சோனகர் மைதானத்தில் அரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடும் ராகம கிரிக்கெட் கழகத்தின் முதல் வரிசை வீரர் லஹிரு மலிந்த (112) சதம் பெற்றதோடு 7 ஆவது வரிசையில் வந்த ஜனித் லியனகே ஆட்டமிழக்காது 90 ஓட்டங்களுடன் சதத்தை நெருங்கியுள்ளது.
மழை காரணமாக இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிவுற்றது.
போட்டியின் சுருக்கம்
ராகம கிரிக்கெட் கழகம (முதல் இன்னிங்ஸ்) – 358/7 (73.3) – லஹிரு மலிந்த 112, ஜனித் லியனகே 90*, இஷான் ஜயரத்ன 63, ரொஷேன் சில்வா 37, தரிந்து ரத்னாயக்க 2/83
இந்த அனைத்து போட்டிகளினதும் இரண்டாவது நாள் ஆட்டம் நாளை தொடரும்