திமுத் கருணாரத்ன – கௌஷால் ஜேடியினால் மற்றொரு இரட்டைச்சத இணைப்பாட்டம்

338

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18ஆம் ஆண்டு உள்ளூர் பருவத்திற்கான பிரீமியர் லீக் A நிலை தொடரின் ஆறு போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டம் சனிக்கிழமை (20) நடைபெற்றது. இது தொடரின் ஆரம்ப சுற்றின் கடைசிப் போட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

SSC எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்

திமுத் கருணாரத்ன மற்றும் கௌஷால் சில்வா ஆரம்ப விக்கெட்டுக்கு பெற்ற இரட்டைச் சத இணைப்பாட்டத்தின் மூலம் சோனகர் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக SSC அணி இரண்டாவது இன்னிங்ஸில் 396 ஓட்டங்களால் அசைக்க முடியாத முன்னிலை பெற்றுள்ளது.

லங்கன் அணிக்கு வலுச்சேர்த்த சஷின், லக்‌ஷானின் சதம்

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18 உள்ளுர் பருவ காலத்திற்கான ப்ரீமியர்……..

கொழும்பு, SSC மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியின் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த சோனகர் விளையாட்டுக் கழகம் 160 ஓட்டங்களுக்கு சுருண்டது. SSC அணித் தலைவர் சச்சித்ர செனநாயக்க 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

முதல் இன்னிங்ஸில் 39 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற SSC அணிக்கு சர்வதேச அனுபவம் பெற்ற ஆரம்ப வீரர்களான திமுத் கருணாரத்ன (128) மற்றும் கௌஷால் சில்வா (142) அபாரமாக துடுப்பெடுத்தாடினர். இருவரும் சதம் குவிக்க ஆரம்ப விக்கெட்டுக்கு 274 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.

இந்த ஜோடி கடந்த மாதம் நடந்த ப்ளூம்பீல்ட் அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற முச்சத இணைப்பாட்டமே தொடரின் அதிகூடிய இணைப்பாட்டமாகும். இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடும் SSC அணி 3 விக்கெட் இழப்புக்கு 357 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

SSC (முதல் இன்னிங்ஸ்) – 199 (52.1) – தசுன் ஷானக்க 75, மினோத் பானுக்க 36, தரிந்து ரத்னாயக்க 5/71, ஷிரான் பெர்னாண்டோ 3/56

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 160 (48) – சாமர சில்வா 32, நிலன்க சதகன் 31, அதீஷ திலஞ்சன 30, பிரிமோஷ் பெரேரா 27, ஜெப்ரி வென்டர்சே 3/30, சச்சித்ர சேனநாயக்க 4/40, விமுக்தி பெரேரா 2/40

SSC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 357/3 (76) – கௌஷால் சில்வா 142, திமுத் கருணாரத்ன 128, மினோத் பானுக்க 31*, மிலிந்த சிறிவர்தன 24*, அதீஷ திலஞ்சன 2/123


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்

பிரீமியர் லீக் தொடரின் B குழுவில் ஆதிக்கம் செலுத்தும் சிலாபம் மேரியன்ஸ் அணி இலங்கை துறைமுக அதிகாரசபை அணியுடனான போட்டியை இரு தினங்களுக்குள் இன்னிங்ஸ் மற்றும் 184 ஓட்டங்களால் வெற்றி கொண்டது.

ஹத்துருசிங்க மாயாஜால வித்தைக்காரர் அல்ல – திசரவின் விளக்கம்

இலங்கை அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளராக வந்துள்ள சந்திக்க ஹத்துருசிங்கவுக்கு, வந்த…..

இதன்மூலம் சிலாபம் மேரியன்ஸ் அணியின் முதல் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் முடிந்த நிலையில் அந்த அணி 6 போட்டிகளில் 5 இல் வென்று B குழுவில் முதலிடத்தை பிடித்ததோடு சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

கொழும்பு, கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சிலாபம் மேரியன்ஸ் அணி முதல் இன்னிங்சுக்கு 427 ஓட்டங்களை பெற்ற நிலையில் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை துறைமுக அதிகாரசபை அணி 135 ஓட்டங்களுக்கு சுருண்டு இரண்டாவது இன்னிங்சுக்கு பலோ ஓன் (Follow-on) செய்தது. எனினும் அந்த அணி இரண்டாவது இன்னிங்சிலும் 108 ஓட்டங்களுக்கே சுருண்டது.

இந்த டெஸ்டில் மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சிலாபம் மேரியன்ஸ் அணித் தலைவர் மலிந்த புஷ்பகுமார தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் வரிசையில் மொத்தம் 44 விக்கெட்டுகளுடன் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறினார்.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 427 (112.1) – அஷேன் சில்வா 168*, சச்சித்ர சேரசிங்க 145, ஓஷத பெர்னாண்டோ 65, சானக்க கொமசரு 6/139, அகலங்க கனேகம 2/83, ஹஷான் விமர்ஷன 2/101

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 135 (32.2) – கயான் மனீஷன் 49, கிஹான் ரூபசிங்க 42, அசித்த பெர்னாண்டோ 5/34

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) F/O 108 (25.3) – நிசல ரன்திக்க 23, மலிந்த புஷ்பகுமார 4/33, ஷெஹான் ஜயசூரிய 3/39

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 184 ஓட்டங்களால் வெற்றி


கொழும்பு கிரிக்கெட் கழகம் (CCC) எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் முதல் இன்னிங்சுக்கு பெற்ற 496 என்ற இமாலய இலக்கை நோக்கி கொழும்பு கிரிக்கெட் கழகம் தனது முதல் இன்னிங்ஸை ஆடி வருகிறது.

கொழும்பு, CCC மைதானத்தில் நடைபெறும் போட்டியின் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு கிரிக்கெட் கழகம், ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்போது முதல் வரிசையில் வந்த கவீன் பண்டார முதல்தர போட்டிகளில் தனது கன்னி சதத்தை 8 ஓட்டங்களால் தவறவிட்டார். 115 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 92 ஓட்டங்களை பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 496 (69) – ஹர்ஷ குரே 140, மின்ஹாஜ் ஜலீல் 82, தனுக்க தாபரே 72, சாலிய சமன் 69, நவின்து விதானகே 34, பிரமோத் மதுவன்த 29, சசித் பதிரண 4/95, அஷான் பிரியன்ஜன் 2/63

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 140/3 (50) – கவீன் பண்டார 92

இளையோர் உலகக் கிண்ணத்திலிருந்து இலங்கை அணி வெளியேற்றம்

19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் இளையோர்…….


BRC எதிர் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

கொழும்பு, BRC மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் BRC அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் முன்னிலை பெற இலங்கை இராணுவப்படை அணி போராடி வருகிறது.

இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த BRC ருமேஷ் புத்திக்கவின் (114) சதத்தின் உதவியோடு 345 ஓட்டங்களை பெற்றது. 113 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இராணுவப்படை அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 126 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 232 (65.3) – டில்ஷான் டி சொய்சா 50, சீகுகே பிரசன்ன 45, திலகரத்ன சம்பத் 4/40, சாமிகர எதிரிசிங்க 3/70, சுராஜ் ரன்திவ் 2/39

BRC (முதல் இன்னிங்ஸ்) – 345 (84.4) – ரமேஷ் புத்திக 114, லிசுல லக்ஷான் 80, லசித் லக்ஷான் 65, துஷான் விமுக்தி 5/65, டில்ஷான் டி சொய்சா 2/26, சீகுகே பிரசன்ன 2/95

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 126/2 (35) – அஷான் ரன்திக்க 52, தசுன் விமுக்தி 45*


பதுரெலிய விளையாட்டுக் கழகம் எதிர் NCC

கொழும்பு, NCC மைதானத்தில் நடைபெறும் போட்டியில் NCC அணிக்கு எதிராக பதுரெலிய விளையாட்டுக் கழகம் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற போராடி வருகிறது.

சகீப் அல் ஹஸனின் சகலதுறை ஆட்டத்தினால் இலங்கைக்கு படுதோல்வி

பங்களாதேஷில் நடைபெற்று வரும் முக்கோண ஒரு நாள் தொடரில் இலங்கை மற்றும்……

இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த NCC அணி 313 ஓட்டங்களை பெற்றது. அணித்தலைவர் அஞ்செலோ பெரேரா அதிகபட்சம் 89 ஓட்டங்களை பெற்றார். இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் 119 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பதுரெலிய விளையாட்டுக் கழகம் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின்போது 28 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.

போட்டியின் சுருக்கம்

பதுரெலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 194 (72.4) – சஞ்ஜய சதுரங்க 28, அலங்கார அசலங்க 25, சதுரங்க டி சில்வா 3/28, லசித் எம்புல்தெனிய 3/33, லஹிரு குமார 2/45

NCC (முதல் இன்னிங்ஸ்) – 313 (89.1) – அஞ்செலோ பெரேரா 89, மாலிங்க அமரசிங்க 45, பர்வீஸ் மஹ்ரூப் 37, மஹேல உடவத்த 33, அலங்கார அசங்க 3/43, நிமந்த சுபசிங்க 3/59, திலேஷ் குணரத்ன 2/95

பதுரெலிய விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 28/1 (9)


ராகம கிரிக்கெட் கழகம் எதிர் ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்

ப்ளூம்பீல்ட் விளையாட்டுக் கழகத்திற்கு சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்கும் வகையில் ராகம கிரிக்கெட் கழகம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவின்போது ராகம கிரிக்கெட் கழகம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தபோதும் அந்த அணி 98 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு, ப்ளூம்பீல்ட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ராகம கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்சுக்கு 320 ஓட்டங்களை பெற்றதோடு ப்ளூம்பீல்ட் முதல் இன்னிங்ஸில் 273 ஓட்டங்களை குவித்தது.

போட்டியின் சுருக்கம்

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 320 (90) – லஹிரு திரிமான்ன 62, ரொஷேன் சில்வா 59, சமீர டி சொய்சா 53, ஜனித் லியனகே 50, லஹிரு மலின்த 38, கசுன் ராஜித 4/81, லஹிரு சமரகோன் 2/51, ரமேஷ் மெண்டிஸ் 2/89, மலித் டி சில்வா 2/86

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 273 (63.5) – லஹிரு சமரகோன் 53*, மலித் டி சில்வா 52, பிரமுத் ஹெட்டிவத்த 48, நிபுன் கருனநாயக்க 46, ரமேஷ் மெண்டிஸ் 35, நிஷான் பீரிஸ் 4/97, இஷான் ஜயரத்ன 3/63, அமில அபொன்சோ 3/75

ராகம கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 51/3 (18) – லஹிரு மலிந்த 23*

ஐந்து போட்டிகளின் மூன்றாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நாளை தொடரும்