இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் 2017/18 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் பருவத்திற்கான பிரீமியர் லீக் A நிலை தொடரில் ஞாயிற்றுக்கிழமை (07) மூன்று போட்டிகள் நிறைவடைந்ததோடு மேலும் இரு போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டமும் ஒரு போட்டியின் முதல் நாள் ஆட்டமும் நடைபெற்றன.
NCC எதிர் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம்
துஷான் விமுக்தியின் அதிரடி பந்துவீச்சின் மூலம் NCC அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
பனாகொடை இராணுவப்படை மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் NCC அணி இரண்டாவது இன்னிங்சில் 235 ஓட்டங்களுக்கு சுருண்டபோது துஷான் விமுக்தி 9 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இந்த தொடரில் இது சிறந்த பந்துவீச்சாகும். இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 91 ஓட்ட வெற்றி இலக்கை இராணுவப்படை அணி 4 விக்கெட்டுகளை இழந்து பெற்றது.
போட்டியின் சுருக்கம்
NCC (முதல் இன்னிங்ஸ்) – 224 (59.2) – அஞ்செலோ பெரேரா 80, சாமிக்க கருணாரத்ன 39, தரிந்து கௌஷால் 30, பானுக்க ராஜபக்ஷ 29, நுவன் லியனபதிரன 3/40, ஜனித் சில்வா 2/27
இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 369 (106.1) – டில்ஷான் டி சொய்சா 97*, ஜானக சம்பத் 79, லக்ஷித மதுஷான் 71, நவோத் இலுக்வத்த 34, லசித் அம்புல்தெனிய 3/105, நுவன் கருணாரத்ன 2/31
NCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 235 (71) – லஹிரு உதார 40, மஹேல உடவத்த 52, தரிந்து கௌஷால் 39, சச்சின் பீரிஸ் 33, துஷான் விமுக்தி 9/108
இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 94/4 (19.4) – ஜானக சம்பத் 50*, லசித் அம்புல்தெனிய 2/36
முடிவு – இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் 6 விக்கெட்டுகளால் வெற்றி
தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம்
சுழல் வீரர்களான தினுக் விக்ரமனாயக்க மற்றும் ஜீவன் மெண்டிஸ் இரண்டாவது இன்னிங்சில் அதிரடி பந்துவீச்சை வெளிக்காட்ட இலங்கை துறைமுக அதிகார சபை அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் யூனியன் 126 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
பங்களாதேஷில் நடைபெறவுள்ள முத்தரப்பு தொடரில் திடீர் மாற்றம்
கொழும்பு பி சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு 272 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டபோதும் அந்த அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 145 ஓட்டங்களுக்கு சுருண்டது. விக்ரமனாயக்க மற்றும் ஜீவன் மெண்டிஸ் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். விக்ரமனாயக்க இந்த போட்டியில் மொத்தம் 10 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
தமிழ் யூனியன் முதல் இன்னிங்சில் பின்தங்கியபோதும் அந்த அணி இரண்டாவது இன்னிங்சில் அபராமாக ஆடியது.
போட்டியின் சுருக்கம்
தமிழ் யூனியன் (முதல் இன்னிங்ஸ்) – 120 (44.5) – ஜீவன் மெண்டிஸ் 32, ஷாலிக்க கருனநாயக்க 25, அகலங்க கனேகம 5/35, சமிந்த பண்டார 2/34, சானக்க கோமசாரு 2/37
இலங்கை துறைமுக அதிகார சபை (முதல் இன்னிங்ஸ்) – 233 (54.2) – கிஹான் ரூபசிங்க 89, என்.ஆர்.டி. கொம்ப்டன் 56, கயான் மனீஷன் 43, தினுக் விக்ரமனாயக்க 6/42
தமிழ் யூனியன் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 384/6d (95) – மனோஜ் சரத்சந்திர 102*, ஜீவன் மெண்டிஸ் 72, தரங்க பரணவிதான 78, ரமித் ரம்புக்வெல்ல 41, தினுக் விக்ரமனாயக்க 30, மதுக லியனபதிரனகே 3/86, சானக்க கோமசாரு 2/97
இலங்கை துறைமுக அதிகார சபை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 145 (48) – பிரஷான் விக்ரமசிங்க 53, கிஹான் ரூபசிங்க 33, தினுக் விக்ரமனாயக்க 4/22, ஜீவன் மெண்டிஸ் 4/38
முடிவு – தமிழ் யூனியன் 126 ஓட்டங்களால் வெற்றி
கொழும்பு கிரிக்கெட் கழகம் (CCC) எதிர் ராகம கிரிக்கெட் கழகம்
CCC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் லஹிரு திரிமான்ன பெற்ற சதத்தின் மூலம் ராகம விளையாட்டுக் கழகம் ஆதிக்கம் செலுத்தியபோதும் கடைசி நாள் ஆட்டம் விறுவிறுப்பை ஏற்படுத்திய நிலையில் போட்டி சமநிலையில் முடிவுற்றது.
ராகம கிரிக்கெட் கழகத்திற்கு 166 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் கடைசி நாள் ஆட்ட நேர முடிவின்போது அந்த அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 76 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதில் கொழும்பு கிரிக்கெட் கழகம் இரண்டாவது இன்னிங்சில் 87 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது லஹிரு மதுஷங்க (57) மற்றும் மலிந்து மதுரங்க (51) 8ஆவது விக்கெட்டுக்கு பெற்ற 78 ஓட்ட இணைப்பாட்டம் அந்த அணியின் தோல்வியை தவிர்க்க உதவியது.
இதன்போது ராகம அணிக்காக இடதுகை சுழல் பந்து வீச்சாளர் சஹான் நாணயக்கார 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
போட்டியின் சுருக்கம்
CCC (முதல் இன்னிங்ஸ்) – 273 (62.1) – லசித் அபேரத்ன 96, அஷான் பிரியன்ஜன் 70, லஹிரு மதுஷங்க 33, ரொன் சந்திரகுப்தா 24, நிஷான் பீரிஸ் 3/55, சஹான் நாணயக்கார 3/78, இஷான் ஜயரத்ன 2/55
ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 345 (101.2) – லஹிரு திரிமான்ன 166*, ஷெஹான் பெர்னாண்டோ 79, சமீர டி சொய்சா 38, லஹிரு மதுஷங்க 4/73, அஷான் பிரியன்ஜன் 3/49
CCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 237 (63) – மலிந்து மதுரங்க 51, லஹிரு மதுஷங்க 57, டில்ஷான் முனவீர 34, மனெல்கர் டி சில்வா 37, இஷான் ஜயரத்ன 2/51, சஹான் நாணயக்கார 6/102
ராகம கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 76/3 (23) – உதார ஜயசுந்தர 38, சச்சித் பத்திரன 2/27
முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது
BRC எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்
மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களின் நிதான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்சில் சொற்ப ஓட்டங்களுக்கு சுருண்ட BRC அணி இரண்டாவது இன்னிங்சில் அதிக ஓட்டங்களை குவித்தது.
இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட்டில் பிரகாசிக்கும் வெளிநாட்டவர்கள்
கொழும்பு, BRC மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியின் இரண்டாவது நாளில் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த BRC அணி ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 312 ஓட்டங்களை பெற்றது. சஷின் டில்ரங்க 76 ஓட்டங்களுடன் களத்தில் இருப்பதோடு மத்தியவரிசையில் வந்த மேலும் இரு வீரர்கள் அரைச்சதம் பெற்றனர்.
இதன்படி பதுரெலிய விளையாட்டுக் கழகத்தை விடவும் BRC அணி 313 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.
போட்டியின் சுருக்கம்
BRC (முதல் இன்னிங்ஸ்) – 134 (34.4) – திலகரத்ன சம்பத் 30, சமிகர எதிரிசிங்க 26, அலங்கார அசங்க 5/45, டிலேஷ் குணரத்ன 4/42
பதுரெலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) -133 (57.2) – பதும் நிஸ்ஸங்க 41, சமிகர எதிரிசிங்க 5/20, சுராஜ் ரந்திவ் 3/39
BRC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 312/7 (83) – ஷஷின் டில்ரங்க 79*, சுராஜ் ரந்திவ் 60, ருமேஷ் புத்திக்க 51, ஹர்ஷ விதான 40, அலங்கார அசங்க 3/120, துவிந்து திலகரத்ன 2/70
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்
ப்ளூம்பீல்ட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் முதல் இன்னிங்சில் பெற்ற 320 ஓட்டங்களுக்கு ப்ளூம்பீல்ட் அணி தனது முதல் இன்னிங்சில் பதில்கொடுத்து ஆடியது.
இரண்டாவது நாளில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த ப்ளூம்பீல்ட் அணி ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 293 ஓட்டங்களை எடுத்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அணித்தலைவர் நிபுன் கருனநாயக்க (69) மற்றும் சச்சின் ஜயவர்தன (63) பெற்ற 144 ஓட்ட இணைப்பாட்டமே அந்த அணிக்கு வலுச் சேர்த்தது.
போட்டியின் சுருக்கம்
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் – 320 (92.4) – ப்ரமோத் மதுவந்த 86, கமிந்து கனிஷ்க 62, லஹிரு சமரகோன் 59/4, மலித் டி சில்வா 3/75
புளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 293/9 (85) – நிபுன் கருனநாயக்க 69, சச்சின் ஜயவர்தன 63, பிரமுத் ஹெட்டிவத்த 42, அதீஷ நாணயக்கார 40, ரமேஷ் மெண்டிஸ் 22, ரொஷான் ஜயதிஸ்ஸ 4/92, சதுர ரந்துனு 2/78
கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்
சங்கீத் குரேவின் அபார சதத்தின் மூலம் சோனகர் விளையாட்டுக் கழத்திற்கு எதிராக கோல்ட்ஸ் அணி இமாலய ஓட்டங்களை நெருங்கி வருகிறது.
உலக நடுவர்களில் குமார் தர்மசேனவுக்கு 14ஆவது இடம்
கொழும்பு சோனகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த கோல்ட்ஸ் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 353 ஓட்டங்களை பெற்றுள்ளது. சங்கீத் குரே ஆட்டமிழக்காது 171 ஓட்டங்களை பெற்று இரட்டை சதத்தை நெருங்கியுள்ளார்.
போட்டியின் சுருக்கம்
கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 353/4 (91) – சங்கீத் குரே 171*, டில்ருவன் பெரேரா 83, பசிந்து லக்ஷங்க 46, பிரியமால் பெரேரா 42*, நிலங்க சந்தகன் 4/150