இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் முதல்தர கிரிக்கெட் சுற்றுப்போட்டியான பிரீமியர் லீக் தொடரின் B மட்ட அணியான லன்கன்ஸ் கிரிக்கெட் கழக அணியுடனான போட்டியின் இன்றைய நாள் களுத்துறை பௌதீக கலாசார அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது மழை குறுக்கிட்டது.
இந்தப் போட்டியின் முதல் நாளாகிய நேற்று முதலில் துடுப்பாடிய லன்கன்ஸ் அணி, மதுரங்க சொய்ஸா மற்றும் சரித் பெர்னாந்து ஆகியோரின் சதத்தின் உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 307 ஓட்டங்களைப் பெற்றது.
பந்து வீச்சில் களுத்துறை பௌதீக கலாசார அணி சார்பாக ருஷிர தாரிந்த 108 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
பின்னர் தமது முதல் இன்னிங்சினைத் தொடர்ந்த களுத்துறை பௌதீக கலாசார அணி போட்டியின் இரண்டாவது நாளாகிய இன்று 5 விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்று ஆடிக்கொண்டிருந்த வேளை மழை குறுக்கிட்டமையினால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.
அவ்வணியின் துடுப்பாட்டத்தில் ரசிக பெர்னாந்து மாத்திரம் சிறப்பாக செயற்பட்டு ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். பந்து வீச்சில் கவின் காவிகர 45 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
நாளை போட்டியின் மூன்றாவது மற்றும் இறுதி நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
லன்கன்ஸ் அணி (முதல் இன்னிங்ஸ்) – 367 (109.3) – மதுரங்க சொய்ஸா 127, சரித் பெர்னாந்து 104, லக்ஷான் ரொட்ரிகோ 68, ருஷிர தாரிந்த 3/108
களுத்துறை பௌதீக கலாசார அணி (முதல் இன்னிங்ஸ்) – 107/5 (37) – ரசிக பெர்னாந்து 53*, கவின் காவிகர 3/45