இன்று இலங்கை பிரிமியர் லீக்கின் B மட்டத்திற்கான நான்கு போட்டிகள் நிறைவடைந்துள்ளது. இதில், சிறப்பான பந்து வீச்சு வலிமையை வெளிப்படுத்தியிருந்த இலங்கை விமானப்படை களுத்துறை பெளதீக கலாச்சார கழகத்தை இன்னிங்ஸ் தோல்வியடைச்செய்துள்ளது. மற்றுமொரு போட்டியில் அதிரடியாக ஆடி இலங்கை துறைமுக அதிகார சபை இலகு வெற்றியை பெற்றதுடன், மற்றைய இரண்டு போட்டிகளும் சமநிலையில் நிறைவுற்றுள்ளன.
இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம் எதிர் களுத்துறை பெளதீக கலாச்சார கழகம்
எந்தவிதமான ஓட்டங்களையும் குவிக்காமல் களுத்துறை பெளதீக கலாச்சார கழகம் தமது முதல் இன்னிங்சினை நேற்று பெற்றிருந்த 160 ஓட்டங்களோடு, இன்று இரண்டாவது ஓவரில் இறுதி விக்கெட் பறிபோக நிறைவு செய்து கொண்டது.
முதல்தர கன்னி சதம் கடந்த சுலான் ஜயவர்தன : போட்டிகளின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவுகள்
பின்னர், பலோவ் ஒன் (Follow On) முறையில் மீண்டும் துடுப்பாடிய களுத்துறை பெளதீக கலாச்சார கழக அணி, 44 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 144 ஓட்டங்களினை மாத்திரமே குவித்துக்கொண்டு விமானப்படை அணியிடம் மேலதிக 120 ஓட்டங்களை பெற முடியாமல் இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது.
துடுப்பாட்டத்தில், அதிகபட்சமாக களுத்துறை பெளதீக கலாசார கழகத்தின் தலைவர் மனோஜ் தேஷப்பிரிய 34 ஓட்டங்களையும் அயன சிரிவர்தன 24 ஓட்டங்களையும் பெற்றதோடு, விமானப்படை சார்பாக பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்டிருந்த சுழல் பந்து வீச்சாளர்களான புத்திக்க சந்தருவன் 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், அச்சிர எரங்க 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
போட்டியின் சுருக்கம்
இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்): 426/9d (79.2) – ரொஸ்கோ தட்டில் 175, லஹிரு சிறி லக்மல் 115, ஹஷான் ஹர்ஷன ஜேம்ஸ் 33, ருச்சிர தரிந்த 98/4
களுத்துறை பெளதீக கலாச்சார கழகம் (முதல் இன்னிங்ஸ்): 160 (52.4) – மனோஜ் தேஷப்ரிய 33, ருச்சிர தரிந்த்ர 29, சஹான் ஜயவர்தன 36/3
களுத்துறை பெளதீக கலாச்சார கழகம் f/o (இரண்டாவது இன்னிங்ஸ்): 146 (44) – மனோஜ் தேஷப்பிரிய 34, புத்திக சந்தருவன் 34/4, அச்சிர எரங்க 49/3
போட்டி முடிவு – இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம் இன்னிங்ஸ் மற்றும் 120 ஓட்டங்களால் வெற்றி
இப்போட்டிக்காக அணிகள் பெற்றுக்கொண்ட புள்ளிகள்
- இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம் – 19
- களுத்துறை பெளதீக கலாச்சார கழகம் – 2.88
குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம்
மழையின் குறுக்கீடு காணப்பட்ட இப்போட்டியின் இறுதி நாளில் இரண்டாவது இன்னிங்சினை தொடர்ந்த குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் சாரங்க ரஜகுருவின்(64) அரைச்சதத்துடன் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 161 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. துறைமுக அணியின் பந்து வீச்சாளர்களான சாணக்க கோமசாரு மற்றும் சமிகர எதிரிசிங்க ஆகியோர் தமது திறமையினை வெளிக்காட்டி தலா ஐந்து விக்கெட்டுகள் வீதம் பதம் பார்த்திருந்தனர்.
இதனையடுத்து, வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 151 ஓட்டங்களை பெற தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழக அணி, அதிரடியாக ஆடிய யொஹான் டி சில்வா வெறும் 35 பந்துகளுக்கு பெற்றுக்கொண்ட அரைச்சதத்தினாலும், அனுக் டி சில்வா ஆட்டமிழக்காமல் 38 பந்துகளில் பெற்றுக்கொண்ட அரைச்சதத்தினாலும், 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
போட்டியின் சுருக்கம்
குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்): 143 (49.3) – ஹஷான் பிரபாத் 46, சாணக்க கோமசாரு 50/6, சமிகர எதிரிசிங்க 14/2
இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்): 154 (59.3) கயான் மனீஷன் 47, பிரஷான் விக்கிரமசிங்க 27, திலின ஹேரத் 54/4, தர்ஷனமஹவத்த 16/3
குருநாகல் இளையோர் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்): 161 (58) – சாரங்க ராஜகுரு 64, தாரக வடுகே 33, சாணக்க கோமசாரு 46/5, சமிகர எதிரிசிங்க 56/5
இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்): 151/3 (18.3) – யொஹான் டி சில்வா 52, அனுக் டி அல்விஸ் 51
போட்டி முடிவு – இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுகளால் வெற்றி
இப்போட்டிக்காக அணிகள் பெற்றுக்கொண்ட புள்ளிகள்
- இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் – 16.525
- குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 3.47
களுத்துறை நகர கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டு கழகம்
போட்டியின் இறுதி நாளான இன்று பொலிஸ் அணியின் தலைவரும் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருமான மஞ்சுல ஜயவர்தனவின் 46 ஓட்டங்களின் துணையுடன், பொலிஸ் அணி தமது முதல் இன்னிங்சுக்காக 287 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.
பொலிஸ் அணியின் 5 விக்கெட்டுகளை வலது கை வேகப்பந்து வீச்சாளரான தரிந்து சிறிவர்த்தன 55 ஓட்டங்களிற்கு வீழ்த்தியிருந்தார்.
போட்டியின் ஆட்ட நேரம் நிறைவிற்கு வர சமநிலையில் முடிவடைந்த இப்போட்டியில், இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்திருந்த களுத்துறை நகர கழக அணி, முன்னர் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்டிருந்த தரிந்து சிறிவர்த்தனவின்(58) அரைச்சதத்துடன் 5 விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்களை பெற்றிருந்தது.
பந்து வீச்சில், பொலிஸ் அணியின் கல்யாண ரத்னபிரிய 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.
போட்டியின் சுருக்கம்
களுத்துறை நகர கழகம் (முதல் இன்னிங்ஸ்): 307 (116.2) – சுலான் ஜயவர்தன 101, தரிந்து சிறிவர்தன 58, நிப்புன கமகே 43, சுவஞ்சி மதநாயக்க 66/3, மஞ்சுல ஜயவர்தன 79/3
பொலிஸ் விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்): 287 (105.3) – அசேல அளுத்கே 62, மஞ்சுல ஜயவர்தன 46, சமித் துஷாந்த 41, தரிந்து சிறிவர்தன 55/5, யொஹான் டி சில்வா 44/4
களுத்துறை நகர கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்): 127/5 (45) – தரிந்து சிறிவர்த்தன 58, கல்யான ரத்னபிரிய 22/2
போட்டி முடிவு – போட்டி சமநிலையில் நிறைவுற்றது
இப்போட்டியின் மூலம் அணிகள் பெற்றுக்கொண்ட புள்ளிகள்
- களுத்துறை நகர கழகம் – 11.67
- பொலிஸ் விளையாட்டு கழகம் – 3.685
லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை கடற்படை விளையாட்டு கழகம்
மழையின் குறுக்கீடு காரணமாக இன்று குறைவான ஓவர்களே வீசப்பட்ட இந்தப் போட்டியில், பின்வரிசை வீரர்களான துஷார சமரகோனின்(60) அரைச்சதம், மற்றும் அதிரடியாக ஆடி இஷான் அபேசேகர 37 பந்துகளில் (50) ஆகியோரின் அரைச்சதம் காரணமாக, இலங்கை கடற்படை விளையாட்டு கழக அணி, தமது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 132.5 ஓவர்களில் 483 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. பந்து வீச்சில், ரஜீவ வீரசிங்க 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
பின்னர், தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த லங்கன் கிரிக்கெட் கழகம், 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 69 ஓட்டங்களை பெற்றிருந்த போது, போட்டியின் ஆட்ட நேரம் நிறைவிற்கு வர இப்போட்டி சமநிலையில் நிறைவுற்றது.
இன்று பறிபோன விக்கெட்டுகளில் மூன்றினை கடற்படை அணியிக்காக சுதாரக தக்ஷின 15 ஓட்டங்களுக்கு கைப்பற்றியிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்): 436 (109.2) – லக்ஷான் ரொட்ரிகோ 133, சஷீன் பெர்னாந்து 96, சாணக்க ருவன்சிரி 67, மதுர மதுசங்க 59/3, சுதாரக தக்ஷின 101/3
இலங்கை கடற்படை விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்): 483 (132.5) – மதுர மதுசங்க 88, அவிஷ்க பீரிஸ் 84, துஷார சமரகோன் 60, இஷான் அபேசேகர 50, நவீன் கவிகார 185/4
லங்கன் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்): 69/5 (14) – மதுரங்க சொய்ஸா 20, சுதாரக தக்ஷின 15/3
போட்டி முடிவு – போட்டி சமநிலையில் நிறைவுற்றது
இப்போட்டியின் மூலம் அணிகள் பெற்றுக்கொண்ட புள்ளிகள்
- இலங்கை கடற்படை விளையாட்டு கழகம் – 12.25
- லங்கன் கிரிக்கெட் கழகம் – 3.5