நீர்கொழும்பின் வலுவான ஓட்டங்களுக்கு பதுரெலிய பதிலடி

237

பிரசன்ன ஜயமான்னவின் சதத்தின் உதவியோடு பதுரெலிய கிரிக்கெட் கழகத்திற்கு எதிரான பிரீமியர் லீக்  போட்டியில் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்ஸில் 328 ஓட்டங்களை பெற்றது

எனினும் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பதுரெலிய அணி இன்று (07) இரண்டாவது நாள் ஆட்ட நேரம் முடிவின்போது விக்கெட் இழப்பின்றி 130 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

16 விக்கெட்டுகளை வீழ்த்திய மலிந்த புஷ்பகுமார; CCC இலகு வெற்றி

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பிரிவு A உள்ளூர் கிரிக்கெட் கழகங்களுக்கு…

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பிரிவு A உள்ளூர் கிரிக்கெட் கழகங்களுக்கு இடையே ஒழுங்கு செய்து நடாத்தும் மூன்று நாட்கள் கொண்ட இந்த போட்டித் தொடரின் B குழுவில் கடைசி இரண்டு இடங்களில் உள்ள அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி மக்கொன, சர்ரே வில்லேஜ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.

இந்நிலையில் 233 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையிலேயே நீர்கொழும்பு அணி இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இதில் 73 ஓட்டங்களுடன் இன்றைய தினம் தனது துடுப்பாட்டத்தை தொடர்ந்த ஜயமான்ன அபாரமாக ஆடி சதத்தை அடைந்தார். அவர் 108 ஓட்டங்களை பெற்றதோடு டிலசிரி லொக்குமண்டார அரைச்சதம் ஒன்றை எட்டினார்.

இதன்போது, பதுரெலிய அணிக்காக வலது கை வேகப்பந்து வீச்சாளர் புத்திக்க சன்ஜீவ 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இதன்மூலம் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் தனது முதல் இன்னிங்ஸுக்கு 122.3 ஓவர்களில் 328 ஓட்டங்களை பெற்றது.

>>Photo Album – Negombo CC vs Badureliya CC | Major League Tier A Tournament 2018/19<<

இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பதுரெலிய அணிக்காக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சாலிந்த உஷான் மற்றும் அலங்கார அசங்க அபாரமாக துடுப்பெடுத்தாடினர். இரண்டாவது நாள் ஆட்ட நேரம் முடியும் வரை களத்தில் இருந்த இந்த இருவரும் முறையே ஆட்டமிழக்காது 68, 62 ஓட்டங்களை பெற்றுள்ளனர்.

இதன்படி இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவின்போது பதுரெலிய அணியின் 10 விக்கெட்டுகளும் கைவசம் இருக்க நிர்கொழும்பு அணியை விடவும் 198 ஓட்டங்களால் பின்தங்கியுள்ளது.

நாளை போட்டியின் மூன்றாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடரும்.

போட்டியின் சுருக்கம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 328 (122.3) – பிரசன்ன ஜயமான்ன 108, டிலசிறி லொக்குபண்டார 51, உப்புல் இந்திரசிறி 44*, அஞ்சலோ ஜயசிங்க 34, செஹான் ஜயசூரிய 21, புத்திக்க சஞ்ஜீவ 5/74, லஹிரு சமரகோன் 3/81

பதுரெலிய கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 130/0 (53) – சலிந்து உஷான் 68*, அலங்கார அசங்க 62*

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க