இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18ஆம் ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான பிரீமியர் லீக் A நிலை தொடரின் மூன்று சுப்பர் 8 போட்டிகள் மற்றும் மூன்று பிளேட் சம்பியன்ஷிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (28) நிறைவடைந்தன.
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்
சிலாபம் மேரியன்ஸ் அணித் தலைவர் மலிந்த புஷ்பகுமாரவின் மிரட்டும் பந்துவீச்சு மூலம் செரசன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியில சிலாபம் மேரியன்ஸ் அணி 244 ஓட்டங்களால் இலகு வெற்றியீட்டியது.
கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் செரசன்ஸ் அணிக்கு 425 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி ஆட்டத்தின் நான்காவது மற்றும் கடைசி தினத்தில் வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த அந்த அணி 180 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்போது அனுபவ சுழல் பந்து வீச்சாளர் மலிந்த புஷ்பகுமார 6 விக்கெட்டுகளை பதம்பார்த்ததோடு இந்த போட்டியில் அவர் மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பீரிமியர் லீக் தொடரில் அவர் மொத்தமாக 53 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் காணப்படுகிறார்.
போட்டியின் சுருக்கம்
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 401 (109.2) – ஓஷத பெர்னாண்டோ 112, சச்சித்ர சேரசிங்க 109, அஷேன் சில்வா 47, திக்ஷில டி சில்வா 45, சாலிய சமன் 5/76
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 236 (65.5) – கமிந்து கனிஷ்க 43, ஹர்ஷ குரே 41, அசித்த பெர்னாண்டோ 5/47, மலிந்த புஷ்பகுமார 3/71
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 259/8d (56.3) – சச்சித்ர சேரசிங்க 87, ஷெஹான் ஜயசூரிய 40, ரிசித் உபமால் 39, அஷேன் சில்வா 32, சதுர ரந்துனு 4/68
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 180 (56.3) – ஹர்ஷ குரே 62, பிரமோத் மதுவந்த 36, மலிந்த புஷ்பகுமார 6/73, சச்சித்ர சேரசிங்க 2/25
முடிவு – சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 244 ஓட்டங்களால் வெற்றி
BRC எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்
BRC அணியை 3 விக்கெட்டுகளால் வீழ்த்திய கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் சுப்பர் 8 சுற்றில் தனது முதல் வெற்றியை பெற்றது.
பிரீமியர் லீக் ‘சுப்பர் 8’ சுற்றில் SSC அணிக்கு முதல் வெற்றி
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் நான்காவது மற்றும் கடைசி நாளில் கோல்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 202 ஓட்ட வெற்றி இலக்கை 7 விக்கெட்டுகளை இழந்து எட்டியது. இதன்போது BRC அணியின் சுராஜ் ரந்திவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தபோதும் அது அந்த அணி வெற்றி பெற போதுமாக இருக்கவில்லை.
போட்டியின் சுருக்கம்
BRC (முதல் இன்னிங்ஸ்) – 310 (90.2) – சஷின் டில்ரங்க 124, ஹஷேன் ராமனாயக்க 66, ஹர்ஷ விதான 41, நிசல தாரக்க 6/71, பிரபாத் ஜயசூரிய 2/62
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 231 (97.1) – பிரியமால் பெரேரா 88, அஞ்செலோ ஜயசிங்க 37, நிசல தாரக்க 31, விஷாத் ரந்திக்க 22, நிரஞ்சன வன்னியாரச்சி 4/38, ஹஷேன் ராமனாயக்க 3/47, சுராஜ் ரந்திவ் 2/36
BRC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 122 (38.4) – லசித் லக்ஷான் 64, ருமேஷ் புத்திக்க 22, கவிஷ்க அஞ்ஜுல 4/35, பிரபாத் ஜயசூரிய 4/15, நிசல தாரக்க 2/26
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 203/7 (62.3) – சங்கீக் குரே 39, ஹஷான் துமிந்து 38, பிரியமால் பெரேரா 35, பசிந்து லக்ஷான் 26, சதீர சமரவிக்ரம 20, சுராஜ் ரந்திவ் 5/72
முடிவு – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி
NCC எதிர் ராகம கிரிக்கெட் கழகம்
NCC அணி நிர்ணயித்த 126 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை ராகம கிரிக்கெட் கழகம் போராடி பெற்று 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.
கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நான்காவது மற்றும் கடைசி நாளில் வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த ராகம கிரிக்கெட் கழகம் 47 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
எனினும் ஜனித் லியனகே மற்றும் சமீர டி சொய்சா பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 82 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தனர்.
போட்டியின் சுருக்கம்
NCC (முதல் இன்னிங்ஸ்) – 247 (76.1) – சதுரங்க டி சில்வா 90, சாமிக்க கருணாரத்ன 32, பர்வீஸ் மஹ்ரூப் 24, சந்துன் வீரக்கொடி 24, தரிந்து கௌஷால் 23*, இசுரு ஜயரத்ன 4/46, அமில அபொன்சோ 3/72, ஜனித் லியனகே 2/41
ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 337 (108.3) – ஜனித் லியனகே 69, உதார ஜயசுந்தர 57, லஹிரு திரிமான்ன 56, சமீர டி சொய்சா 39, அக்ஷு பெர்னாண்டோ 32, ஷெஹான் பெர்னாண்டோ 23, சாமிக்க கருணாரத்ன 4/80, பர்வீஸ் மஹ்ரூப் 2/48
NCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 215 (57.1) – சாமிக்க கருணாரத்ன 51, மாலிங்க அமரசிங்க 34, சதுரங்க டி சில்வா 37, நிஷான் பீரிஸ் 5/56
ராகம கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 129/5 (40.1) – ஜனித் லியனகே 44*, சமீர டி சொய்சா 43*, தரிந்து கௌஷால் 3/33
முடிவு – ராகம கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுகளால் வெற்றி
பிளேட் சம்பியன்ஷிப் போட்டிகள்
ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம்
பளூம்பீல்ட் மற்றும் இலங்கை இராணுவப் படை அணிகளுக்கு இடையிலான பரபரப்பு மிக்க போட்டி இரு அணிகளும் சரிசமமான ஓட்டங்களை பெற்ற நிலையில் சமநிலையில் (Tied) முடிவடைந்தது.
ஹத்துருசிங்க மீதான நம்பிக்கை வீண் போகவில்லை – சந்திமால்
இலங்கை முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் போட்டி ஒன்று சமநிலையில் முடிவுற்றது இது 4ஆவது முறையாகும். அதிலும் மூன்று போட்டிகள் இந்த பருவத்தில் இடம்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு சோனகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் மூன்றாவது மற்றும் கடைசி நாளில் 199 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த இலங்கை இராணுவப்படை அணி சரியாக 198 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
போட்டியின் சுருக்கம்
ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 163 (38.3) – அதீஷ நாணயக்கார 35, பிரமுத் ஹெட்டிவத்த 33, ரமேஷ் மெண்டிஸ் 24, துஷான் விமுக்தி 6/77
இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 171 (52.2) – டில்ஷான் டி சொய்சா 35, லியோ பிரான்சிஸ்கோ 31, அஷான் ரந்திக்க 30, அஜந்த மெண்டிஸ் 37, மலிந்த டி சில்வா 5/69, ரமேஷ் மெண்டிஸ் 2/23, கசுன் ராஜித 2/30
ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 206 (60) – நிபுன் கருனநாயக்க 91, நிசல பிரான்சிஸ்கோ 23, டிஷான் விமுக்தி 4/50, மல்க மதுஷங்க 3/38
இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 198 (68) – லக்ஷித மதுஷங்க 58, லியொ பிரான்சிஸ்கோ 36, மலித் டி சில்வா 4/61, ரமேஷ் மெண்டிஸ் 2/31
முடிவு – போட்டி சமநிலையில் (Tie) முடிந்தது
கொழும்பு கிரிக்கெட் கழகம் (CCC) எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்
சலிந்து உஷான் (154) மற்றும் தமிழ்நாட்டு வீரர் சுப்ரமனியன் ஆனந்த் (132) ஆகியோரின் சதத்தின் மூலம் கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு துடுப்பாட்டத்தில் பதிலடி கொடுத்த பதுரெலிய விளையாட்டுக் கழகம் போட்டியை வெற்றி தோல்வி இன்றி முடித்துக் கொண்டது.
கொழும்பு ப்ளூம்பீல்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் மூன்றாவது மற்றும் கடைசி நாளில் முதல் இன்னிங்சைத் தொடர்ந்த பதுரெலிய அணி 449 ஓட்டங்களை குவித்தது. கொழும்பு கிரிக்கெட் கழகம் தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 480 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 480/5d (110) – ரொன் சந்திரகுப்தா 130, மாதவ வர்ணபுர 138*, லசித் அபேரத்ன 105*, அஷான் பிரியஞ்சன் 66, மதுர லக்மால் 2/90, அலங்கார அசங்க 2/85
பதுரெலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 449 (155.2) – சலிந்து உஷான் 154, சுப்ரமனியன் ஆனந்த் 132, நதீர நாவல 56, பதும் நிஸ்ஸங்க 42, அஷான் பிரியஞ்சன் 5/87, லஹிரு மதுஷங்க 3/86, தினுக்க ஹெட்டியாரச்சி 2/110
கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 41/0 (4) – மலிந்து மதுரங்க 27*
முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது
சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்
இரோஷ் சமரசூரிய பெற்ற சதத்தின் மூலம் சோனகர் விளையாட்டுக் கழகம் நிர்ணயித்த சவாலான 343 ஓட்ட வெற்றி இலக்கை சமாளித்த தமிழ் யூனியன் அணி போட்டியை சமநிலையில் முடித்தது.
மதுசனின் சகலதுறை ஆட்டத்தோடு யாழ். மத்திய கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி
கொழும்பு BRC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் மூன்றாவது மற்றும் கடைசி நாளில் தனது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த சோனகர் அணி 325 ஓட்டங்களை பெற்றது. இதில் இரோஷ் சமரசூரிய 113 ஓட்டங்களை குவித்தார். எனினும் சவாலான வெற்றி இலக்கை நோக்கி தனது இரணடாவது இன்னிங்சை ஆரம்பித்த தமிழ் யூனியன் அணி கடைசி நாள் ஆட்டநேர முடிவின்போது 185 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.
போட்டியின் சுருக்கம்
சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 260 (67.4) – ஷானுக்க துலாஜ் 82, இரோஷ் சமரசூரிய 44, பபசர வதுகே 40, பிரமோத் மதுஷான் 4/53, ஜீவன் மெண்டிஸ் 4/97
தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 243 (65.5) – பினுர பெர்னாண்டோ 56, மனோஜ் சரத்சந்திர 46, ஜீவன் மெண்டிஸ் 30, ஷிரான் பெர்னாண்டோ 4/74, தரிந்து ரத்னாயக்க 5/85
சோனகர் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 325 (93.5) – இரோஷ் சமரசூரிய 113, பபரச வதுகே 49, பிரிமோஷ் பெரேரா 41, சாமர சில்வா 38, பிரமோத் மதுஷான் 4/98, ரமித் ரம்புக்வெல்ல 3/61, பினுர பெர்னாண்டோ 2/48
தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 185/6 (35) – சிதார கிம்ஹான் 81, தரங்க பரணவிதான 60, தரிந்து ரத்னாயக்க 3/67
முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது