2017/2018 பருவ காலத்திற்கான இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் பிரீமியர் லீக் தொடரின் முதல் சுற்றுத் தொடர் இன்று ஆரம்பமானது. 3 நாட்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் இத்தொடரில் இலங்கையின் முன்னணி விளையாட்டுக் கழகங்கள் பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.
சிலாபம் மேரியன்ஸ் எதிர் NCC
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழக அணி முதலில் துடுப்பெடுத்தாடி தமது முதல் இன்னிங்சுக்காக 53 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய NCC அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 37 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
போட்டியின் சுருக்கம்
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) 206 (53) – கசுன் விதுரங்க 50, ருக்ஷான் பெர்னாண்டோ 37, சசித்திர சேரசிங்ஹ 26, லசித் எம்புல்தேனிய 5/66, அஞ்செலோ பெரேரா 2/34
NCC (முதலாவது இன்னிங்ஸ்) 114/9 (37) – மஹேல உடவத்த 46, லஹிரு குமார 24, சசித்திர சேரசிங்ஹ 3/21, அசித பெர்னாண்டோ 3/30, மலிந்த புஷ்பகுமார 2/27
BRC எதிர் இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம்
கொழும்பு BRC மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழக அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை BRC அணிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய BRC அணி தமது முதல் இன்னிங்சுக்காக 65.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்க இம்மாதம் நியமனம்
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழக அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 75 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
போட்டியின் சுருக்கம்
BRC (முதலாவது இன்னிங்ஸ்) 187 (65.5) – விக்கும் சன்ஜய 51, சமிகார எதிரிசிங்ஹ 24*, மதுக்க லியனபதிரனகே 3/41, சானக்க கோமசாரு 3/40.
இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) 75/2 (24) – யொஹான் டி சில்வா 38*, யசோத லங்கா 26
சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் சோனகர் விளையட்டுக்கழகம்
கொழும்பு சோனகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சரசென்ஸ் விளையாட்டுக் கழக அணி முதலில் துடுப்பெடுத்தாடி தமது முதல் இன்னிங்சுக்காக இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 89.5 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 369 ஓட்டங்களைப் பெற்றது.
போட்டியின் சுருக்கம்
சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) 369/7 (89.5) – அண்டி சொலொமான்ஸ் 152, கமிந்து கனிஷ்க 108, சாலிய சமன் 20, சசித்திர பெரேரா 24*, சிரான் பெர்னாண்டோ 4/86, தரிந்து ரத்னாயக்க 2/128
தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் விளையாட்டுக் கழகம் எதிர் பதுரலிய விளையாட்டுக்கழகம்
மக்கோன சர்ரே விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தமிழ் யூனியன் கழக அணி முதலில் துடுப்பெடுத்தாடி தமது முதல் இன்னிங்சுக்காக இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 9 விக்கெட்டுகளை இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றது.
ஒரு நாள் அணியில் இடம்பெறுவதற்கு போராடும் சந்திமாலின் எதிர்பார்ப்பு
போட்டியின் சுருக்கம்
தமிழ் யூனியன் (முதலாவது இன்னிங்ஸ் ) 325/9 (90) – மனோஜ் சரத்சந்திர 113*, ஜீவன் மென்டிஸ் 77, சிதார கிம்ஹான 43, பொபி பெர்னாண்டோ 40, அலங்கார அசங்க 4/98, டிலேஷ் குணரத்ன 3/78
கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் ப்லூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் விளையாட்டுக்கழகம்
கொழும்பு கோல்ட்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ப்லூம் பீல்ட் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக அணிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய கோல்ட்ஸ் கழக அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது தமது முதல் இன்னிங்சுக்காக 90 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றது.
போட்டியின் சுருக்கம்
கொழும்பு கோல்ட்ஸ் விளையாட்டுக்கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) 201/5 (90) – ஹஷான் துமிந்து 61*, தில்ருவன் பெரேரா 60, சங்கீத் குரே 37, அஞ்செலோ ஜயசிங்ஹ 26, மலித் டி சில்வா 2/53
ராகம கிரிக்கெட் கழகம் எதிர் SSC
குருநாகல் வெலகெதர கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஆரம்பமாகவிருந்த இப்போட்டி தவிர்க்க முடியாத சில காரணங்களால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.