சானக்கவின் அபார பந்துவீச்சால் துறைமுக அதிகராசபை அணிக்கு வெற்றி வாய்ப்பு

234

இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் 2017/18 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் பருவத்திற்கான பிரீமியர் லீக் A நிலை கிரிக்கெட் தொடரின் ஆறு போட்டிகளின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று சனிக்கிழமை (13) நடைபெற்றன.

NCC எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்

கட்டுநாயக்க, சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் இலங்கை துறைமுக அதிகாரசபை அணி வெற்றி வாய்ப்பை நெருங்கியுள்ளது.  

சச்சித் பத்திரணவின் அதிரடி சதத்தால் CCC வலுவான நிலையில்

இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும்…

NCC அணி நிர்ணயித்த 220 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வரும் இலங்கை துறைமுக அதிகாரசபை அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின்போது 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 129 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்படி அந்த அணி வெற்றிபெற மேலும் 8 விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் நிலையில் 91 ஓட்டங்களை மாத்திரம் பெற வேண்டிய நிலையில் கடைசி நாள் ஆட்டத்தை தொடர எதிர்பார்த்துள்ளது.

அபாரமாக பந்துவீசிய சானக்க கொமசரு இரண்டாவது இன்னிங்ஸில் NCC அணியின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இலங்கை துறைமுக அதிகாரசபையின் வெற்றிவாய்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 220 (55.1) – மஹேல உடவத்த 54, லஹிரு குமார 47, அஞ்செலோ பெரேரா 42, மாலிங்க அமரசிங்க 29, லசித் அம்புல்தெனிய 24*, மதுக லியனபதிரனகே 5/52, சானக்க கொமசரு 3/78  

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 121 (40.5) – அகலங்க கனேகம 24*, லஹிரு குமார 2/28, லசித் அம்புல்தெனிய 2/28

NCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 120 (30.5) – சச்சின்த பீரிஸ் 27*, சானக்க கொமசரு 7/49, நலீன் பிரியதர்ஷன 3/48

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 129/2 (46) – கயான் மனீஷன் 39*, லஹிரு குமார 2/17


கொழும்பு கிரிக்கெட் கழகம் (CCC) எதிர் ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்  

கொழும்பு கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்சுக்காக பெற்ற இமாலய ஓட்டங்களை எட்ட ப்ளூம்பீல்ட் அணி தனது முதல் இன்னிங்ஸில் போராடி வருகிறது.

கொழும்பு, ப்ளூம்பீல்ட் மைதானத்தில் நடைபெற்றுவரும் போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்சுக்கு 445 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது நாளில் முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த ப்ளூம்பீல்ட் ஆட்ட நேர முடிவில் 270 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அந்த அணி பலோ ஓன் (Follow-on) நெருக்கடியை தவிர்க்க இன்னும் 4 விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் நிலையில் 25 ஓட்டங்களை பெற வேண்டும்.

சொஹான், பிரனீத்தின் சிறந்த பந்து வீச்சினால் விமானப்படை அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 445 (90.3) – சச்சித் பத்திரண 168, மாதவ வர்ணபுர 85, மலித் டி சில்வா 5/116, ரமேஷ் மெண்டிஸ் 2/84

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 270/6 (80) – நிசல் பிரான்சிஸ்கோ 72, பிரமுத் ஹெட்டிவத்த 65*, நிபுன் கருனநாயக்க 54, ரமேஷ் மெண்டிஸ் 46, அஷான் பிரியஜான் 3/46, சச்சித் பதிரண 2/75  


இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்

பதுரெலிய விளையாட்டுக் கழகம் தனது முதல் இன்னிங்ஸில் ஸ்திரமான ஓட்டங்களை பெற்ற நிலையில் இலங்கை இராணுவப்படை அணி போட்டியில் முன்னிலை பெற போராடி வருகிறது.

மக்கொன, சர்ரே மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த பதுரெலிய விளையாட்டுக் கழகம் சகல விக்கெட்டுகளையும் இழந்து 248 ஓட்டங்களை பெற்றது. இடது கை சுழற்பந்து வீச்சாளர் மல்க மதுஷங்க 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

முதல் இன்னிங்ஸில் 95 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இராணுவப்படை அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 112 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறுகிறது.  

போட்டியின் சுருக்கம்     

இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 152 (51) – அஷான் ரன்திக்க 30, ஜனித் சில்வா 27*, டில்ஷான் டி சொய்சா 24, நட்ராஸ் பிரசாத் 5/41, டில்ஷான் குணரத்ன 4/36

பதுரெலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 248 (82) – சன்ஜய சதுரங்க 69, ரமின்து டி சில்வா 65, பதும் நிஸ்ஸங்க 49, டில்ஹான் குரே 31, மல்க மதுஷங்க 5/41, ஜானக்க சம்பத் 3/49

இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 112/4 (24) – துஷான் விமுக்தி 30*, அலங்கார அசங்க 3/54


கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

செரசன்ஸ் விளையாட்டுக் கழகத்தை 152 ஓட்டங்களுக்கே சுருட்டிய கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் இரண்டாவது இன்னிங்ஸில் 220 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

பங்களாதேஷுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு

கொழும்பு, கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டியின் இரண்டாவது நாளில் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த செரசன்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. குறிப்பாக வேகப்பந்த வீச்சாளர் கவீஷ்க அஞ்சுல 4 விக்கெட்டுகளையும் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுகளையும் பதம்பார்த்தனர்.

முதல் இன்னிங்ஸில் 94 ஓட்டங்களால் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த கோல்ட்ஸ் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 126 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 246 (79.3) – பிரியமால் பெரேரா 92, அவிஷ்க பெர்னாண்டோ 72, சதீர சமரவிக்ரம 31, ரொஷான் ஜயதிஸ்ஸ 5/51, சதுர ரன்துனு 3/78, சச்சித்ர பெரேரா 2/48

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 152 (55) – பிரமோத் மதுவன்த 38, கவீஷ்க அஞ்சுல 4/38, பிரபாத் ஜயசூரிய 3/42, மொஹமட் ஷிராஸ் 2/28   

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 126/5 (43) – சதீர சமரவிக்ரம 35, சங்கீத் குரெ 34, ரொஷான் ஜயதிஸ்ஸ 3/29


தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

சிலாபம் மேரியன் அணிக்கு சவாலான வெற்றி இலக்கை நிர்ணயிக்கும் நோக்கில் தமிழ் யூனியன் கழகம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் போராடி வருகிறது.

ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்க 39 இலங்கை வீரர்கள் விண்ணப்பம்

கொழும்பு, பி சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவரும் போட்டியில் தமிழ் யூனியன் முதல் இன்னிங்ஸில் 305 ஓட்டங்களை பெற பதிலுக்கு சிலாபம் மேரியன்ஸ் அணி 296 ஓட்டங்களை எடுத்துள்ளது. இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள தமிழ் யூனியன் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 60 ஓட்டங்களை பெற்றுள்ளது. அந்த 69 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்  

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 305 (81.2) – தனஞ்சய டி சில்வா 72, யொஹான் மெண்டிஸ் 61, ரங்கன ஹேரத் 45, ஜீவன் மெண்டிஸ் 42, ரமித் ரம்புக்வெல்ல 22, அசித பெர்னாண்டோ 4/51, சச்சித்ர சேரசிங்க 3/68, ஷெஹான் ஜயசூரிய 2/76

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 296 (67.1) – ஓஷத பெர்னாண்டோ 81, சச்சித்ர சேரசிங்க 65, இசுரு உதான 44, ரங்கன ஹேரத் 3/62, ஜீவன் மெண்டிஸ் 3/80

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 60/3 (20) – சிதார கிம்ஹான 36*, சச்சித்ர சேரசிங்க 2/09


ராகம கிரிக்கெட் கழகம் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்

அணித்தலைவர் சாமர சில்வாவின் சதத்தின் உதவியோடு ராகம கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக சோனகர் விளையாட்டுக் கழகம் முதல் இன்னிங்ஸில் ஸ்திரமான ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. எனினும் ராகம கிரிக்கெட் கழகம் வலுவான முன்னிலை பெற்று எதிரணிக்கு நெருக்கடி கொடுத்துள்ளது.

கொழும்பு, சோனகர் மைதானத்தில் நடைபெறும் போட்டியின் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த சோனகர் கழகம் 241 ஓட்டங்களை பெற்றது. எனினும் அனுபவ வீரர் சாமர சில்வா 121 ஓட்டங்கள் குவித்து வலுச் சேர்த்தார். அபாரமாக பந்து வீசிய அமில அபொன்சோ 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

முதல் இன்னிங்ஸில் 139 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற ராகம கிரிக்கெட் கழகம் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின்போது 2 விக்கெட் இழப்புக்கு 88 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

ராகம கிரிக்கெட் கழகம (முதல் இன்னிங்ஸ்) – 380 (83) – லஹிரு மலிந்த 112, ஜனித் லியனகே 97, இஷான் ஜயரத்ன 63, ரொஷேன் சில்வா 37, தரிந்து ரத்னாயக்க 3/93, கோசல குலசேகர 2/32, சஜீவ வீரகோன் 2/95

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 241 (60) – சாமர சில்வா 121, பபசர வாதுகே 29, அமில அபொன்சோ 6/79, நிஷான் பீரிஸ் 2/41

ராகம கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 88/2 (18.2) – உதார ஜயசுன்தர 44, சமிந்த பெர்னாண்டோ 36

போட்டிகளின் மூன்றாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நாளை தொடரும்