இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் 2017/18 உள்ளூர் பருவத்திற்கான பிரீமியர் லீக் A நிலை தொடரில் சனிக்கிழமை (06) மூன்று போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெற்றதோடு மேலும் இரண்டு போட்டிகள் ஆரம்பமாயின.
கொழும்பு கிரிக்கெட் கழகம் (CCC) எதிர் ராகம கிரிக்கெட் கழகம்
லஹிரு திரிமான்ன பெற்ற அபார சதத்தின் மூலம் கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக ராகம கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்ஸில் வலுவான ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
காலி அணிக்கு வலுச்சேர்த்த லசித் பெர்ணாந்துவின் சகலதுறை ஆட்டம்
இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும்…
CCC மைதானத்தில் நடைபெற்றுவரும் போட்டியின் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த ராகம கிரிக்கெட் கழகத்திற்கு ஒருமுனையில் ஆடிய அணித் தலைவர் லஹிரு திரிமான்ன தனித்து ஓட்டங்களை குவித்தார். கடைசி வரை களத்தில் இருந்த அவர் ஆட்டமிழக்காது 166 ஓட்டங்களை பெற்றார்.
இதன்மூலம் ராகம கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்ஸில் 345 ஓட்டங்களை பெற்று கொழும்பு கிரிக்கெட் கழகத்தை விடவும் 72 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு கிரிக்கெட் கழகம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின்போது ஒரு விக்கெட்டை இழந்து 43 ஓட்டங்களை பெற்றுள்ளது.
போட்டியின் சுருக்கம்
CCC (முதல் இன்னிங்ஸ்) – 273 (62.1) – லசித் அபேரத்ன 96, அஷான் பிரியன்ஜன் 70, லஹிரு மதுஷங்க 33, ரொன் சந்திரகுப்தா 24, நிஷான் பீரிஸ் 3/55, சஹான் நாணயக்கார 3/74, இஷான் ஜயரத்ன 2/55
ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 345 (101.2) – லஹிரு திரிமான்ன 166*, ஷெஹான் பெர்னாண்டோ 79, சமீர டி சொய்சா 38, லஹிரு மதுஷங்க 4/73, அஷான் பிரியன்ஜன் 3/49
CCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 43/1 (11)
தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம்
இலங்கை துறைமுக அதிகார சபை அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் பின்னடைவை சந்தித்த தமிழ் யூனியன் கழகம் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வருகிறது. இதன்போது தமிழ் யூனியன் சுழற்பந்து வீச்சாளர் தினுக் விக்ரமனாயக்க 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வலுச்சேர்த்தார்.
கட்டுநாயக்க, சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நடைபெறும் போட்டியின் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை துறைமுக அதிகார சபை அணி 233 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
17 வயது வீரரின் அபாரத்தால் திரித்துவ கல்லூரிக்கு இன்னிங்ஸ் வெற்றி
19 வயதுக்குட்பட்ட பாடசாலை…
இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் 113 ஓட்டங்களால் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தமிழ் யூனியின் இரண்டாம் நாள் ஆட்டநேரம் முடியும்போது 4 விக்கெட்டுகளை இழந்து 257 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்படி அந்த அணி 144 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் தரங்க பரணவிதான 78 ஓட்டங்களை பெற்றார்.
போட்டியின் சுருக்கம்
தமிழ் யூனியன் (முதல் இன்னிங்ஸ்) – 120 (44.5) – ஜீவன்த மெண்டிஸ் 32, ஷாலிக்க கருனநாயக்க 25, அகலங்க கனேகம 5/35, சமிந்த பண்டார 2/34, சானக்க கொமசரு 2/37
இலங்கை துறைமுக அதிகார சபை (முதல் இன்னிங்ஸ்) – 233 (54.2) – கிஹான் ரூபசிங்க 89, என்.ஆர்.டி. கொம்ப்டன் 56, கயான் மனீஷன் 43, தினுக் விக்ரமனாயக்க 6/42
தமிழ் யூனியன் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 257/4 (74) – தரங்க பரணவிதான 78, ரமித் ரம்புக்வெல்ல 41, மனோஜ் சரத்சந்திர 40*, ஜீவன் மெண்டிஸ் 38*, தினுக் விக்ரமனாயக்க 30, மதுக லியனபதிரனகே 3/67
NCC எதிர் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம்
டில்ஷான் டி சொய்சா முதல் தரப் போட்டிகளில் தனது கன்னி சதத்தை 3 ஓட்டங்களால் தவறவிட்டபோதும் NCC அணிக்கு எதிராக இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் வலுவான நிலையை பெற உதவினார்.
பனாகொடை, இராணுவப்படை மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியின் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இராணுவப்படை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 369 ஓட்டங்களை பெற்றது.
இதில் சிறப்பாக ஆடிய டில்ஷான் டி சொய்சா 97 ஓட்டங்களை பெற்றபோதும் எதிர்முனை விக்கெட்டுகள் அனைத்தும் வீழ்த்தப்பட்டதால் சதம் பெற முடியாமல் போனது. கடைசி வரிசை வீரர் ஜானக்க சம்பத் (79) மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லக்ஷித மதுஷான் (71) ஆகியோர் அரைச்சதம் பெற்றனர்.
இலங்கை கிரிக்கெட்டுக்காக சேவை புரிய வந்திருக்கும் அவுஸ்திரேலிய உளவியலாளர்
அவுஸ்திரேலிய அணியின் பிரபல…
இதன்மூலம் இலங்கை இராணுப்படை கழகம் முதல் இன்னிங்ஸில் 145 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது. இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த NCC அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின்போது 1 விக்கெட் இழப்புக்கு 35 ஓட்டங்களை பெற்றுள்ளது.
போட்டியின் சுருக்கம்
NCC (முதல் இன்னிங்ஸ்) – 224 (59.2) – அஞ்செலோ பெரேரா 80, சாமிக்க கருணாரத்ன 39, தரிந்து கௌஷால் 30, பானுக்க ராஜபக்ஷ 29, நுவன் லியனபதிரன 3/40, ஜனித் சில்வா 2/27
இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) -369 (106.1) – டில்ஷான் டி சொய்சா 97*, ஜானக்க சம்பத் 79, லக்ஷித மதுஷான் 71, நவோத் இலுக்வத்த 34, லசித் அம்புல்தெனிய 3/105, நுவன் கருணாரத்ன 2/31
NCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 35/1 (8.2)
BRC எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்
கொழும்பு, BRC மைதானத்தில் ஆரம்பிமான இந்தப் போட்டியில் இரு அணிகளும் சொற்ப ஓட்டங்களுக்கே விக்கெட்டுகளை பறிகொடுத்தன.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய BRC அணி பதுரெலிய அணித்தலைவர் அலங்கார அசங்க மற்றும் டிலேஷ் குணரத்னவின் பந்துக்கு முகம்கொடுக்க முடியாமல் 128 ஓட்டங்களுக்கே சுருண்டது. இதில் அசங்க 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு குணரத்ன 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இந்நிலையில் முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பதுரெலிய விளையாட்டுக் கழகமும் மளமளவென்று விக்கெட்டுகளை பறிகொடுத்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவன்போது அந்த அணி 123 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. சுழல் வீரர் சாமிகர எதிரிசிங்க 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
போட்டியின் சுருக்கம்
BRC (முதல் இன்னிங்ஸ்) – 128 (34.4) – திலகரத்ன சம்பத் 30, சாமிகர எதிரிசிங்க 26, அலங்கார அசங்க 5/45, டிலேஷ் குணரத்ன 4/42
பதுரெலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 123/9 (53) – பதும் நிஸ்ஸங்க 41, சாமிகர எதிரிசிங்க 5/18, சுராஜ் ரன்திவ் 2/35
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் புளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்
மங்கோன சர்ரே மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற செரசன்ஸ் அணி முதலில் துடுப்பாடியது. இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது அவ்வணி வீரர்கள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 318 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
அவ்வணிக்காக இரண்டு அரைச் சதங்கள் பெறப்பட்டுள்ளன. புளூம்பீல்ட் அணிக்காக லஹிரு சமரகோன் மற்றும் தனோஜ் ரனோதித் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.
போட்டியின் சுருக்கம்
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் 318 (90) – ப்ரமோத் மதுவன்த 84*, கமிது கனிஷ்க 62, லஹிரு சமரகோன் 58/3, தனோஜ் ரனோதித் 52/2